தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள "டுவென்டி-20' சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், இம்முறை 10 அணிகள் பங்கேற்க உள்ளன. உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் பங்கேற்கும் "டுவென்டி-20' சாம்பியன்ஸ் லீக் தொடர், ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இத்தொடர் வரும் செப். 10 ம் தேதி முதல் 26 வரை தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. இங்கிலாந்து விலகல்: இந்த முறை இந்தியா தரப்பில் ஐ.பி.எல்., சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் போட்டி அட்டவணையை மாற்றுமாறு, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விடுத்த வேண்டுகோளை, சாம்பியன்ஸ் லீக் நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது. இதனால் இத்தொடரிலிருந்து இங்கிலாந்து கவுன்டி அணிகள் விலகின. கடந்த முறை இங்கிலாந்து தரப்பில் 2 அணிகள் பங்கேற்றன.
சாம்பியன்ஸ் லீக் : 10 அணிகள் பங்கேற்பு
10 அணிகள்: இதனையடுத்து 12 அணிகள் பங்கேற்கவிருந்த இத்தொடர், 10 அணிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பங்கேற்கும் அணி மட்டும் வரும் ஜூலை மாத இறுதிக்குள் உறுதிசெய்யப்பட உள்ளது. இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள அணிகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா), மும்பை இந்தியன்ஸ் (இந்தியா), பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் (இந்தியா), விக்டோரியன் பஸ்ரேஞ்சர்ஸ் (ஆஸி.,), சவுத் ஆஸ்திரேலியன் ரெட்பேக்ஸ் (ஆஸி.,), வாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), ஹைவெல்ட் லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா), சென்டிரல் ஸ்டேஜஸ் (நியூசி.,), வேயம்பா லெவன்ஸ் (இலங்கை).
0 comments:
Post a Comment