எதிர்பார்க்காத ஆச்சரியம்

டுவென்டி-20' உலககோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் உமேஷ் யாதவ்.


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய வரவு உமேஷ் யாதவ். 22 வயதான இவர், வெஸ்ட் இண்டீசில் நடக்கும் மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். காயம் அடைந்த பிரவீண் குமாருக்குப் பதில், இந்திய தேர்வுக் குழு உமேஷ் யாதவுக்கு வாய்ப்புள்ளது.


சுரங்கத் தொழிலாளியின் மகன்: நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் மகனான உமேஷ் யாதவ். 19 வயதில் கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தார். ஆரம்பத்தில் போலீஸ் வேலையில் சேர்வது தான் இவரது குறிக்கோளாக இருந்தது.


ஆனால் எதிர்பாராத திருப்பமாக கிரிக்கெட் மீது விருப்பம் திரும்பியது. கடந்த 2008-09 ம் ஆண்டு விதர்பா அணி சார்பில் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற இவர், வேகத்தில் மிரட்டினார். 145 கி.மீ., வேகத்தில் பந்து வீசும் இவர், அத்தொடரில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அதற்குப் பின் சமீபத்தில் நடந்த மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்தார். பவுலிங்கில் சொதப்பிய இஷாந்த் சர்மாவின் இடத்தை கைப்பற்றிய இவர், டில்லி அணிக்கு நம்பிக்கை அளித்தார்.


சேவக், காம்பிர், நெஹ்ரா உள்ளிட்ட டில்லி அணி வீரர்கள், உமேஷ் யாதவை வெகுவாக பாராட்டினர். தேசிய அணியில் இடம் பெற வேண்டும் என்ற இவரது கனவு, மிக விரைவில் நிறைவேறியுள்ளது. "டுவென்டி-20'உலககோப்பை தொடரில் அசத்த காத்திருக்கிறார்.


இது குறித்து யாதவ் கூறுகையில்,"" டுவென்டி-20' உலககோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்க்க வில்லை. இதை நம்புவதற்கு கடினமாகவே இருந்தது. கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டதற்கு கிடைத்த பலனாகவே இதைக் கருதுகிறேன். கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி நம்பிக்கை அளிப்பேன்,'' என்றார்.

0 comments:

Post a Comment