ஐ.பி.எல்-3 போட்டி மூலம் ரூ.400 கோடி வருவாய்

மூன்றாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் இந்தியாவில் நடந்தது.
இந்த போட்டியில் அணிகள், ஸ்பான்சர்கள் வரி ஏய்ப்பு செய்யாமல் இருப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மும்பையை தலைமை இடமாக கொண்டு வருமான வரித்துறை தனி குழுவை உருவாக்கி இருந்தது. அவர்கள் ஒவ்வொரு அணிகளுக்கும் கிடைக்கும் வருவாய், ஸ்பான்சர் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

இதனால் இந்த தடவை ஐ.பி.எல். போட்டிகளில் வரிஏய்ப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. வீரர்கள், நடுவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்துக்கு சேவை வரி வசூலிக்கப்பட்டது.

ஐ.பி.எல்-3 போட்டிகள் மூலம் எத்தனை கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று சமீபத்தில் கணக்கிடப்பட்டது. அப்போது 400 கோடி ரூபாய் வரி வருவாயாக கிடைத்திருப்பதது தெரியவந்தது.

இதற்கு முன்பு நடந்த 2 ஐ.பி.எல். போட்டிகளின்போது அணி ஏலம், போட்டி வருவாய் உள்பட எல்லா விஷயங்களிலும் வரிஏய்ப்பு நடந்திருந்தது.

0 comments:

Post a Comment