1996-ம் ஆண்டு உலகக்கோப்பை ஹீரோக்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம். ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா ஆகிய இருவர் தான் அந்த ஹீரோக்கள். ÷1965-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்தார் அரவிந்த டி சில்வா. வலது கை ஆட்டக்காரரான இவர், 1984-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக விளையாடினார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆடும் வாய்ப்பு டி சில்வாவுக்கு கிட்டியது. ஸ்வீப் ஷாட் அடிப்பதில் வல்லவர்.
1996-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் முதல் சுற்றில்...