சுருண்டது இந்திய அணி - இலங்கை முதல் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 138 ரன்னுக்கு "ஆல் அவுட்' ஆனது. இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி, அம்பாந்தோட்டை மைதானத்தில் நடக்கிறது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரர் சேவக் (15), இம்முறை நிலைக்கவில்லை.

அடுத்து வந்த விராத் கோஹ்லி (1), ரெய்னா (1) ஏமாற்றினர். ரோகித் சர்மா "டக்' அவுட்டானார். தோனியும் (11) கைவிட்டார். இர்பான் 6, அஷ்வின் 21 ரன்கள் எடுத்தனர்.

கடைசி வரை போராடிய காம்பிர், 65 ரன்னில் அவுட்டாக, இந்திய அணி 33.3 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் பெரேரா, மாத்யூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தில்ஷன் (50), தரங்கா (59) கைகொடுக்க, 19.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

1 comments:

  1. உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள்
    Azhahi.Com

    இப்படிக்கு
    Azhahi.Com

    ReplyDelete