பூபதி-போபண்ணா, பயஸ்-விஷ்ணு, செய்னா வெற்றி

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போண்ணா ஜோடி வெற்றி பெற்றது. ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இளம் இந்திய வீரர்களான சோம்தேவ் தேவ்வர்மன், விஷ்ணுவர்தன் முதல் சுற்றோடு வெளியேறினர்.லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிர்னி, அலெக்சாண்டர் பர்ரி ஜோடியை சந்தித்தது. "டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை பூபதி-போபண்ணா...

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இன்று முதல் பதக்கம் கிடைத்தது. 10 மீ., துப்பாக்கி சுடுதல் ஏர் ரைபிள் பிரி போட்டியில் ககன் நரங் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றார்.லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை கோலகலாமாக துவங்கியது. இந்த போட்டியில் தற்போது பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. பல நாடுகள் பதக்க வேட்டையை துவக்கியுள்ள நிலையில் இந்திய அணி மட்டும் பதக்கம் பெறாமல் இருந்தது. இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட பல வீரர்கள் தோல்வியை தழுவினர். பேட்மின்டனில்...

ஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்

இங்கிலாந்து கால்பந்து அணி முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், தேம்ஸ் நதியில் அதிவேக மோட்டார் படகில் பயணித்தபடி ஒலிம்பிக் சுடரை எடுத்து வந்தார். அதை சர் ஸ்டீவ் ரெட்கிரேவ் பெற்றுக் கொண்டார்.* இங்கிலாந்து ராணியை, ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் ஹெலிகாப்டரில் அழைத்து வருவது போன்ற வீடியோ காட்சி திரையிடப்பட்டது. * 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் மகளிர் டேக்வாண்டோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாரா ஸ்டீவன்சன் வீரர், வீராங்கனைகளின் சார்பாக ஒலிம்பிக் உறுதிமொழி...

கடைசி ஓவரில் இந்தியா வெற்றி - இலங்கை ஏமாற்றம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய கவுதம் காம்பிர் சதம் அடித்து கைகொடுத்தார். சொந்த மண்ணில் பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தோல்வி அடைந்தது.இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டி, நேற்று கொழும்புவில் நடந்தது. "டாஸ்'...

எழுச்சி பெறுமா இந்தியா - இன்று இலங்கையுடன் 3வது மோதல்

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இன்று எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கினாலும், முதல் போட்டியில் வெற்றி பெற்று நம்பிக்கை தந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் படுமோசமாக தோல்வியடைந்தது. இன்று, இரு அணிகள் மோதும் மூன்றாவது ஆட்டம், கொழும்புவில் பகலிரவு...

ஒலிம்பிக் மைதானத்தில் அதிசய தீவு

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் இன்று வண்ணமயமாக துவங்குகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு துவக்கவிழா மிகப் பிரமாண்டமாக நடக்க உள்ளது.பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது. இதற்கான வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் டேனி பாயல் தலைமையிலான குழு நடத்துகிறது. மூன்றரை மணி நேரம் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு "அதிசய தீவுகள்' என, பெயரிடப்பட்டுள்ளது. 27 முறை மணி ஓசை ஒலிக்கப்பட்டு, நிகழ்ச்சிகள்...

டெஸ்ட் ரேங்கிங்: சச்சின் பின்னடைவு

சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியலில், இந்தியாவின் சச்சின், 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (749 புள்ளி), ஒரு இடம் பின்தங்கி 12வது இடம் பிடித்தார். இவரைத் தவிர வேறு இந்திய வீரர் யாரும் "டாப்-20' இடத்துக்குள் இல்லை. முதல் மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா(892), தென்ஆப்ரிக்காவின் காலிஸ் (874), ஆம்லா (872) உள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின்...

கபில்தேவ் மீதான தடையை நீக்கியது பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மீதான தடையை நீக்கி அவருக்கு பிசிசிஐ மன்னிப்பு வழங்கியது. இதன்மூலம் அவர் கிரிக்கெட் வாரியம் மூலம் ரூ.1.5 கோடி வரையிலான சலுகைகள் பெற வாய்ப்பு உள்ளது.முதல் முறையாக உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய கபில்தேவ், ஓய்வு பெற்ற பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் அவருக்க உயர் பொறுப்பு வழங்கி கவுரவித்தது.இந்நிலையில் ஐ.பி.எல் போட்டி தொடங்கப்பபட்டபோது, அதற்கு எதிராக ஐ.சி.எல்...

சுருண்டது இந்திய அணி - இலங்கை முதல் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 138 ரன்னுக்கு "ஆல் அவுட்' ஆனது. இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி, அம்பாந்தோட்டை மைதானத்தில் நடக்கிறது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரர்...

ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய மூவர்ணக்கொடி

ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய மூவர்ணக்கொடி திட்டமிட்டப்படி நேற்று ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒத்திவைக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.லண்டனில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்றப்படும். இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைவர் அஜித் பால் சிங் மற்றும் பெரும்பாலான விளையாட்டு நட்சத்திரங்கள் இன்னும் லண்டன் வந்து சேரவில்லை. எனவே, கொடி ஏற்றும் நிகழ்ச்சியை வரும் 27ம்...

தப்புகிறாரா போதை ராகுல் சர்மா?

போதை மருந்து பயன்படுத்திய ராகுல் சர்மா மீது, நடவடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டப் போவதில்லை. போலீஸ் அறிக்கை குறித்து தீவிரமாக ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யப்படும்,'' என, ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்தார். பஞ்சாப்பை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சர்மா, 25. ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் சர்மா, மே 20ம் தேதி மும்பை ஓட்டலில் நடந்த "பார்ட்டி'யில் சக வீரர் பார்னலுடன் (தென் ஆப்ரிக்கா) கலந்து கொண்டார்....

உலக கோப்பை "டுவென்டி-20' உத்தேச அணியில் யுவராஜ்

உலக கோப்பை "டுவென்டி-20' தொடருக்கான, உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், "கேன்சரில்' இருந்து மீண்ட யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளனர்.நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர், வரும் செப்., 18 முதல் அக்., 12 வரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான 30 பேர் கொண்ட, உத்தேச இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பதான் சகோதரர்கள்:கேப்டன் தோனி, சேவக், ரெய்னா, காம்பிர், ரோகித்...

பாக்.அணி இந்தியா வருகை - கவாஸ்கர் கண்டனத்திற்கு பிசிசிஐ பதில்

மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக டிசம்பர் மாதம் இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டது. பிசிசிஐ-ன் இந்த அறிவிப்பை கிரிக்கெட் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். முன்னாள் கேப்டன் பிஷன்சிங் பேடி வரவேற்றுள்ளார். பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான்...

ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம்: சானியா

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் எத்தனை பதக்கம் வெல்வோம் என்று உறுதியளிக்க முடியாது. அதேநேரத்தில் 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது: இத்தனை பதக்கங்கள் வெல்வோம் என்று முன்கூட்டியே தெரிவிப்பது சரியானதாக இருக்காது. நாங்கள் அனைவருமே கடும் நெருக்கடிக்கு மத்தியில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறோம். அதனால் பதக்கம்...

டெஸ்ட் - ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது இந்தியா

சர்வதேச டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் இந்திய அணி ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. இதில் கடந்த ஆண்டு இதே நேரத்தில் "நம்பர்-1' இடத்தை இங்கிலாந்திடம் இழந்த இந்திய அணி, தற்போது 104 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இலங்கை அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி 0-1 என்ற கணக்கில் இழந்தது. இருப்பினும் பாகிஸ்தான் அணி, 109 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்தது. முதல் மூன்று இடத்தில்...

டிராவிட் இடத்தை நிரப்புவது கடினம் - தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் “தூண்” என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு பிறகு அணியில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்டில் 3-வது வீரராக களம் இறங்கி அணியை தூக்கி நிறுத்துவதில் அவர் சிறந்தவர். டிராவிட் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் விளையாடவில்லை. இந்த நிலையில் டிராவிட் இடத்தை நிரப்புவது கடினம் என்று உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்தியா மற்றும் உலக கிரிக்கெட்டில்...

மும்பை அணியில் சச்சின்

ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை உத்தேச அணியில் சச்சின், ஜாகிர் கான் இடம்பெற்றுள்ளனர்.சர்வதேச அரங்கில் சாதனை வீரராக திகழும் சச்சின், உள்ளூர் போட்டிகளில் எல்லாம் பங்கேற்பது கிடையாது. கடந்த "சீசனில்' தனது மும்பை அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. உடல்தகுதியை நிரூபிக்க ஜாகிர் கான் சில போட்டிகளில் பங்கேற்றார். இந்நிலையில் 2012-13 ம் ஆண்டில் நடக்கவிருக்கும் உள்ளூர் ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 35 பேர் கொண்ட பட்டியலில் சச்சின், ஜாகிர் கான், ரகானே, ரோகித் சர்மா, அகார்கர் உட்பட பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள...

டெஸ்டில் வெற்றி பெறுவது எப்படி?

அன்னிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, "ஆல் ரவுண்டர்' திறமை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும்,'' என, இந்தியாவின் சச்சின் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதித்தவர். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தானாக முன்வந்து விலகினார் சச்சின். தற்போது ஓய்வில் உள்ள சச்சின் கூறியது. ஒருவர் டெஸ்ட் வீரராக உருவாக வேண்டும் என்றால், அது இயற்கையிலே அமைய வேண்டும்....