விவசாயி ஆன ஐ.பி.எல்., வீரர்

ஐ.பி.எல்., தொடரில் இருந்து கழற்றி விடப்பட்ட கம்ரான் கான் விவசாயம் செய்கிறார். பந்து பிடித்த கையில், தற்போது வைக்கோல் அள்ளுகிறார்.

உ.பி.,யில் உள்ள அசாம்கர் பகுதியை சேர்ந்தவர் கம்ரான் கான் (21). மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரது வேகப்பந்துவீச்சு திறமையை 2009ல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த வார்ன் கண்டறிந்தார்.

பின் ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமானார். சென்னை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இவரது பந்துவீச்சு குறித்து சர்ச்சை எழுந்தது. பந்தை எறிவதாக அம்பயர்கள் புகார் கூறினர்.

இம்முறை புனே அணியில் இடம் பெற்றார். ஆனால், இவரது சேவை தேவையில்லை என்று புனே அணி நிர்வாகம் திடீரென தெரிவித்தது. கையில் ரூ. 10 லட்சம் மட்டும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது.

இதனால் மனம் நொந்து போன கம்ரான், அசாம்கரில் உள்ள தனது சகோதரரின் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்கிறார்.

இதுகுறித்து கம்ரான் கூறுகையில்,"" கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்பு விவசாயம் தான் செய்தேன். தற்போது காலை, மாலையில் மட்டும் பயிற்சி செய்கிறேன். மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவேன்'' என்றார்.


வார்ன் வேதனை

வார்ன் தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் ,""ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்காமல் கம்ரான் விவசாயம் செய்வதாக கேள்விப்பட்டேன். இளம் திறமை வீணடிக்கப்படுகிறது,'' என, குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment