தேறுவார்களா இந்திய பவுலர்கள்?

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் இந்திய பவுலர்களின் செயல்பாடு கவலை அளிக்கிறது. அதிக விக்கெட் வீழ்த்திய "டாப்-5' வீரர்கள் வரிசையில் இந்தியர்கள் யாருமே இல்லை.

முதல் 43 போட்டிகளின் முடிவில், தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் (டில்லி, 10 போட்டி, 19 விக்கெட்), இலங்கையின் லசித் மலிங்கா (மும்பை, 6 போட்டி, 15 விக்.,), வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் (கோல்கட்டா, 7 போட்டி, 12 விக்.,), தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (டெக்கான், 7 போட்டி, 11 விக்.,), வெஸ்ட் இண்டீசின் போலார்டு (மும்பை, 8 போட்டி, 11 விக்.,) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் "டாப்-5' வரிசையில் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீசின் கெவான் கூப்பர் (ராஜஸ்தான், 6 போட்டி, 10 விக்.,), ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் (ராஜஸ்தான், 10 போட்டி, 10 விக்.,) ஆகியோர் "டாப்-10' பட்டியலில் உள்ளனர்.

இந்தியா சார்பில் முனாப் படேல் (மும்பை, 7 போட்டி, 11 விக்.,), பியுஸ் சாவ்லா (பஞ்சாப், 9 போட்டி, 11 விக்.,), அமித் சிங் (ராஜஸ்தான், 9 போட்டி, 10 விக்.,) ஆகியோர் மட்டும் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர்.


சொதப்பிய வேகங்கள்:

இந்தியாவின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர்களான ஜாகிர் கான் (பெங்களூரு, 9 போட்டி, 9 விக்.,), ஆஷிஸ் நெஹ்ரா (புனே, 9 போட்டி, 6 விக்.,), ஆர்.பி. சிங் (மும்பை, 5 போட்டி, 4 விக்.,), இர்பான் பதான் (டில்லி, 10 போட்டி, 6 விக்.,), பாலாஜி (கோல்கட்டா, 4 போட்டி, 7 விக்.,), வினய் குமார் (பெங்களூரு, 9 போட்டி, 8 விக்.,), உமேஷ் யாதவ் (டில்லி, 10 போட்டி, 9 விக்.,) ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

சிறப்பாக பந்துவீசிய அசோக் டிண்டா (5 போட்டி, 8 விக்.,), காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்து வருவது புனே அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு பின்னடைவை அளிக்கிறது.


ஏமாற்றும் சுழல்:

இதேபோல சுழற்பந்துவீச்சில் அனுபவ ஹர்ஜன் சிங், இதுவரை 3 விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தமிழக வீரர் அஷ்வின், 10 போட்டியில் 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.

அமித் மிஸ்ரா (டெக்கான், 7 போட்டி, 5 விக்.,), பிரக்யான் ஓஜா (மும்பை, 6 போட்டி, 6 விக்.,), இம்முறை வீரர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா (சென்னை, 10 போட்டி, 7 விக்.,), ஜகாதி (சென்னை, 8 போட்டி, 4 விக்.,), ராகுல் சர்மா (புனே, 9 போட்டி, 8 விக்.,) உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்களும் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

ஐ.பி.எல்., தொடர், இளம் இந்திய வீரர்களின் திறமையை மெருகூட்ட உருவாக்கப்பட்டது. இதனை உணர்ந்து நம்மவர்கள் செயல்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 comments:

Post a Comment