யுவராஜுக்கு 20 ஏக்கர் இலவச நிலம்

ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைக்க, பஞ்சாப் அரசு சார்பில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு 20 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். கேன்சரில் இருந்து சமீபத்தில் மீண்ட இவர், தற்போது ஓய்வில் உள்ளார்.

இவர், தனது தயார் ஷப்னத்துடன், நேற்று பஞ்சாப் மாநில அரசின் அழைப்பின் பேரில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வீட்டுக்கு சென்றனர். அங்கு வேகமாக குணமடைந்த யுவராஜ் சிங்கை முதல்வர் வாழ்த்தினார்.

இதையடுத்து யுவராஜ் சிங் அமைக்கவுள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு, தேவையான 20 ஏக்கர் நிலத்தை வழங்கினார்.

சண்டிகருக்கு அருகே வரவுள்ள இந்த அகாடமியில் வளர்ந்து வரும் கிரிக்கெட், டென்னிஸ், கோல்ப் மற்றும் ஹாக்கி வீரர்களுக்கு தேவையான பயிற்சிகள் தரப்படும்.

0 comments:

Post a Comment