கேப்டன் தோனியின் ரூ. 28 லட்சம் போர் ரக "பைக்'

பைக்' பிரியரான தோனி, ரூ. 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான "ஹெல்கேட்' என்ற போர் ரக பைக்கை இறக்குமதி செய்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு, பைக் என்றால் கொள்ளை பிரியம். இவரிடம் காவாசாக்கி இசட் எக்ஸ்14, ஹார்லி-டேவிட்சன் உள்ளிட்ட 22 நவீன பைக்குள் உள்ளன. இந்த வரிசையில் புதிதாக சுமார் ரூ. 28 லட்சம் மதிப்பிலான "எக்ஸ் 132 ஹெல்கேட்' என்ற பைக்கை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். தென் கிழக்கு ஆசியாவிலேயே, இந்த "புயல் வேக' பைக்கை வாங்கியுள்ள...

ஐ.பி.எல். போட்டியில் ரூ.180 கோடிக்கு டிக்கெட் விற்பனை

ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைத்தது. ஐ.பி.எல். கோப்பையை வென்றதால் அதிக லாபம் அடையும் அணியாக கொல்கத்தா இருக்கும்.அந்த அணி இந்த ஆண்டு ரூ.100 கோடி வரை செலவழித்து உள்ளது. கேப்டன் காம்பீர், காலிஸ், சுனில் நரீன், யூசுப்பதான் ஆகிய 4 வீரர்களுக்கு மட்டுமே ரூ.50 கோடி வரை செலவழித்து உள்ளது. இந்த செலவழித்த தொகைக்கு பல மடங்கு லாபம் வரும் என்று கருதப்படுகிறது. சாம்பியன் என்பதால் அடுத்த ஆண்டு அந்த...

ஐ.பி.எல்., பைனலில் சூதாட்டமா?

ஐ.பி.எல்., பைனலில் கிரிக்கெட் சூதாட்டம் அமோகமாக நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே சென்னை அணியின் "ஹாட்ரிக்' வாய்ப்பு பறிபோனதாக ரசிகர்கள் புலம்புகின்றனர்.சென்னையில் நேற்று முன் தினம் நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இத்தொடரில் சென்னை அணியை பைனலுக்கு எப்படியாவது...

அதிக நம்பிக்கையே தோல்விக்கு காரணம்

ஐ.பி.எல். கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் தவறவிட்டனர். அதிக நம்பிக்கையே சென்னை அணியின் தோல்விக்கு காரணம்.பிளேஆப் சுற்று வாய்ப்பை சென்னை அணி அதிர்ஷ்டவசமாக பெற்றது. 3 நிலைகள் (ராஜஸ்தான் அணி டெக்கானிடம் தோல்வி, டெல்லியிடம் பஞ்சாப் தோல்வி, பெங்களூர் அணி டெக்கானிடம் தோல்வி) சென்னைக்கு சாதகமாக அமைந்ததால் வாய்ப்பு கிடைத்தது. எலிமினேசனில் சென்னை அணி...

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ரூ.200 கோடிக்கு சூதாட்டம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் ‘பெட்டிங்‘ நடைபெற்று வருகிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் அதிக ரன் எடுப்பார், யார் அதிக விக்கெட் கைப்பற்றுவார், அதிக சிக்சர் யார் அடிப்பார் என்ற அளவில் ‘பெட்டிங்’ நடைபெறும். இன்று இறுதிப் போட்டி என்பதால் ‘பெட்டிங்’ மிகப்பெரிய...

மோர்னே மோர்கல் நீக்கப்பட்டது ஏன்?

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீரர் மோர்னே மோர்கல். இந்த ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக அவர் இருக்கிறார். அவர் 16 ஆட்டத்தில் 25 விக்கெட் எடுத்து உள்ளார். சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நேற்று நடந்த மிக முக்கியமான போட்டியில் டெல்லி அணி வீரரான மோர்னே மோர்கல் ஆடவில்லை. 11 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பெறாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் இந்த ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் அவர்தான்...

சென்னை சூப்பர்கிங்ஸ் ஹாட்ரிக் சாதனை படைக்குமா?

5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. இதில் 9 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை 'லீக்' சுற்றில் மோதின.கடந்த 20-ந்தேதியுடன் 'லீக்' ஆட்டம் முடிவடைந்தன.புள்ளிகள் அடிப்படையில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.பெங்களூர் ராயல் சேல்ஞ்சர்ஸ், கிங்ஸ்...

பைனலுக்கு முன்னேறுமா சென்னை?

ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஒரு முறை பைனலுக்கு முன்னேற சென்னை அணி காத்திருக்கிறது.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் "பிளே ஆப்' போட்டிகள் தற்போது நடக்கின்றன. முதல் தகுதிப் போட்டியில் வென்ற கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, பைனலுக்கு தகுதி பெற்றது. அடுத்த போட்டியில் (எலிமினேட்டர்)சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது. மும்பை அணி தொடரில் இருந்து...

கோல்கட்டாவுக்கு கோப்பை கங்குலி கணிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில், காம்பிர் தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் கோப்பை வென்று சாதிக்கும்,'' என, புனே வாரியர்ஸ் அணி கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. "பிளே-ஆப்' சுற்றின் முதல் போட்டியில் கோல்கட்டா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தி, முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது.இதுகுறித்து முன்னாள் கோல்கட்டா அணி கேப்டன் கங்குலி கூறியது: எனது ஆறாவது அறிவு கூறியபடி கோல்கட்டா அணிக்கு...

கபில் தேவுக்கு தகுதியில்லையா?

முன்னாள் வீரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான பி.சி.சி.ஐ., பட்டியலில், கபில் தேவ் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐ.பி.எல்., மூலம் கிடைத்த வருமானத்தில் ரூ. 70 கோடியை, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, 2003-04க்கு முன் ஓய்வு பெற்ற, 160 வீரர்களுக்கு பிரித்துக் கொடுக்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்தது. இதன் படி 100 டெஸ்ட் போட்டிக்கும் அதிகமாக பங்கேற்றிருந்தால் ரூ. 1.5 கோடி, 75 முதல் 99 டெஸ்ட் என்றால் ரூ....

ஓட்டலில் போதை பார்ட்டி - தொடர்கிறது ஐ.பி.எல்., சர்ச்சை

மும்பை ஓட்டலில் நடந்த பார்ட்டியில், போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக ஐ.பி.எல்., புனே வாரியர்ஸ் அணி வீரர்கள் ராகுல் சர்மா, பார்னல் உட்பட 94 பேர் சிக்கியுள்ளனர்.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. வீரர்கள் சூதாட்டம், ஷாருக்கானுக்கு தடை, செக்ஸ் புகாரில் ஆஸ்திரேலிய வீரர் பாமர்ஸ்பச் கைது வரிசையில், இப்போது போதை மருந்து பயன்படுத்திய சிக்கலும் சேர்ந்து கொண்டுள்ளது.மும்பை, சபர்பன் ஜுகு பகுதியில் உள்ள ஆக்வுட் ஓட்டலில் பார்ட்டிக்கு...

பிளே-ஆப் சுற்றுக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் "பிளே-ஆப்' சுற்றில் விளையாடும் அதிர்ஷ்டம் "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேடி வந்தது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பெங்களூரு அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கானிடம் வீழ்ந்து பரிதாபமாக வெளியேறியது.ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான 71வது லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, "பீல்டிங்'...

சென்னைக்கு கிடைத்தது பிளே ஆஃப் வாய்ப்பு

ஐபிஎல் சீஸன் 5 போட்டிகளில் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 71வது போட்டியில் டெக்கான் சார்ஜஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றி கொண்டது. பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டியான இதில், பெங்களூரு அணி தோற்றது.முன்னதாக, பெங்களூரு அணி டாஸ் வென்றது. முதலில் பந்து வீசுவதாக அறிவித்த பெங்களூரு அணி, டெக்கான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.இதை அடுத்து களம் இறங்கிய டெக்கான் அணியில் துவக்க வீரர்களின் மோசமான செயல்பாட்டால் அணியின் ரன்குவிப்பு தடைப்பட்டது....

ஒரு சதம்-57 சிக்சர்: ஐ.பி.எல். ஹீரோ கெய்ல்

20 ஓவர் ஐ.பி.எல். போட்டி என்றாலே சிக்சர்கள், பவுண்டரிகள் மழை பொழியும். பேட்ஸ் மேன்களுக்கு ஆட்டம் பிடித்து விட்டதால் அடிப்பதெல்லாம் சிக்சர்கள், பவுண்டரிகளாக பறக்கும். அதேபோல் நேற்று டெல்லி அணிக்கு எதிரான நடந்த போட்டியில் பெங்களூர் அணி வீரர் கெய்ல் சிக்சர்களாக விளாசினார்.நின்ற இடத்தில் இருந்து சிக்சர்களை தூக்கினார். 14-வது ஓவரில் இர்பான் பந்தில் 2 தொடர் சிக்சரும், 16-வது ஓவரில் நெகி பந்தில் 3 தொடர் சிக்சரும் விளாசியது இந்த ஐ.பி.எல். போட்டியின் சிறப்பம்சம்...

ஐ.பி.எல்., பிளே --ஆப் , பைனல் டிக்கெட் கட்டணம் குறைப்பு ஏன்?

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள, ஐ.பி.எல்., "பிளே- -ஆப்' மற்றும் பைனலுக்கான டிக்கெட் விற்பனை, நேற்று துவங்கியது. ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம், 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதுடன், பைனல், சென்னையில் நடப்பதும் உறுதியாகி உள்ளது.ஐந்தாவது ஐ.பி.எல்., டுவென்டி- 20 கிரிக்கெட் போட்டிகள் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பாக நடந்து வருகிறது. இதன் "பி÷-ள-ஆப்' சுற்றின் இரண்டாவது ஆட்டம் வரும் 25ம்தேதியும், பைனல்...

சூதாட்ட விசாரணை: வெறும் கண்துடைப்பு

ஒரு நபர் விசாரணை என்ற பெயரில் சூதாட்ட புகாரை பி.சி.சி.ஐ., மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இதனால், அணி உரிமையாளர்கள், மற்ற வீரர்கள் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.பிரபல இந்தியா "டிவி' சேனல், நடத்திய புலனாய்வு செய்தியில், இந்திய உள்ளூர் கிரிக்கெட், ஐ.பி.எல்., தொடரில் நடக்கும் சூதாட்டம், கறுப்பு பண நடமாட்டம் குறித்து தெளிவாக தெரியவந்தது. "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஸ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய 5 இந்திய...

ஐ.பி.எல்., சூதாட்டம்: 5 வீரர்கள் சஸ்பெண்ட்

இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் சூதாட்ட புயல் கிளம்பியுள்ளது. ஐ.பி.எல்., தொடரில் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஸ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய 5 இந்திய வீரர்கள் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.பிரபல இந்தியா "டிவி' சேனல், புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டது. இதில், வீரர்கள், நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள் மற்றும் வெளிநாட்டு கேப்டன் ஒருவர் மற்றும் இந்திய அணியின் முக்கிய வீரர் ஆகியோர் சூதாட்டம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதை...