டெஸ்ட் ரேங்கிங்: இந்தியா நம்பர்-4

ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சிறந்த டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியல் நேற்று துபாயில் வெளியிடப்பட்டது. இதில் 111 புள்ளிகளுடன் இந்திய அணி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. தலா 116 புள்ளிகளுடன் இங்கிலாந்து,...

சரியான பதிலடி

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் சொந்த அணிகளால் புறக்கணிக்கப்பட்ட கங்குலி, டிராவிட் மனம் தளர்ந்து விடவில்லை. மற்ற அணிகளின் கேப்டன்களாக சிறப்பாக செயல்பட்டு, சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.முதன் முதலாக 2008ல் ஐ.பி.எல்., துவங்கப்பட்ட போது, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் "கோல்கட்டா பிரின்ஸ்' கங்குலி. இத்தொடரில் கோல்கட்டா அணி பங்கேற்ற 14 போட்டிகளில் 6ல் வெற்றி மட்டும் பெற்றது. இதனால், 2009ல் சுழற்சி முறை கேப்டன் என்ற பெயரில், கங்குலி சாதாரண...

கங்குலி தலைமை கிளார்க் ஆர்வம்

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாட உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், புனே வாரியர்ஸ் அணிக்காக கங்குலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கங்குலி பழகுவதற்கு இனிமையானவர். அவருடன் நட்புணர்வு நீடிக்கிறது. ஐபிஎல் தொடரில் அவரது தலைமையின் கீழ் விளையாடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். புனே வீரர்கள் சிலரிடம் பேசினேன். கேப்டனாக கங்குலி சிறப்பாக செயல்படுவதாகக் கூறினர். ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடியதில்லை. சிறப்பாக விளையாடி முத்திரை பதிக்க முடியும் என நம்புகிறேன் என்றா...

சச்சினுக்கு எம்.பி., பதவி: மஞ்ச்ரேக்கர் அதிர்ச்சி

சச்சினுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி அளிக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தது, தனக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் சாசன சிறப்பு பிரிவின்படி ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க, பார்லிமென்ட்டில் சச்சின் நுழைவது உறுதியாகி உள்ளது. இது குறித்து பிரபலங்கள்...

போட்டியை ரசித்த யுவராஜ்

புணே-டெக்கான் அணிகள் இடையிலான ஆட்டத்தைப் பார்ப்பதற்காக சுப்ரதா ராய் மைதானத்திற்கு யுவராஜ் சிங் வந்தார்.நுரையீரல் புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துவிட்டு சில நாள்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய யுவராஜ், திடீரென மைதானத்திற்கு வந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.நல்ல உத்வேகத்துடன் காணப்பட்ட அவர், முரளி கார்த்திக், ராபின் உத்தப்பா உள்ளிட்ட புணே வீரர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேட்டிங்கும் செய்தார்.தனது உடல்நலம் குறித்து அவர் கூறுகையில், "இப்போது நலமாக உள்ளேன். நடக்க ஆரம்பித்துள்ளேன். 2 அல்லது 3 மாதங்களில்...

அரசியலில் குதித்தார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அரசியலில் குதித்தார். அவரை ராஜ்ய சபா எம்.பி.,யாக்க மத்திய அரசு செய்த பரிந்துரையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஏற்றார். சச்சினுடன் பாலிவுட் நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு அகா ஆகியோரும் ராஜ்யசபா எம்.பி.,யாகின்றனர்.இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்றுடன் 39 வயதை கடந்துள்ள சச்சினுக்கு இந்த பிறந்த நாள் நிச்சயம் மறக்க முடியாததாகவே இருக்கும். சர்வதேச போட்டிகளில் நூறு சதங்களை கடந்துள்ள...

தெண்டுல்கரின் இலக்கு 200-வது டெஸ்ட்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பியுள்ள யுவராஜ்சிங் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனது வாழ்க்கை நல்ல நிலையில் இருக்க அவரது பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது.சர்வதேச போட்டியில் 100 சதம் அடிப்பது சாதாரணமானது இல்லை. இந்த சாதனையை படைத்த தெண்டுல்கருக்கு அடுத்த இலக்கும் இருக்கிறது. 100 டெஸ்டில் விளையாடுவதே சிறப்பானது. அவர் 200 டெஸ்ட் விளையாடுவதை அடுத்த இலக்காக கொண்டுள்ளார். இவ்வாறு யுவராஜ்சிங் கூறினா...

"ஹேப்பி பர்த்டே' சச்சின்

சச்சின் இன்று தனது 40வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்தார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் இவர், 39 வயதை பூர்த்தி செய்கிறார். சர்வதேச அளவில் 100வது சதம் அடித்த பின் வரும் பிறந்த நாள் என்பதால், சக அணி வீரர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். ஆனால், பெரிய அளவில் நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று ஐ.பி.எல்., தொடரில் இவர் இடம் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், பிறந்தநாள் விழா பெரியளவில் இருக்காது....

மும்பையை கரை சேர்ப்பாரா சச்சின்

ஐ.பி,.எல்., தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர், இந்தியாவில் தற்போது நடக்கிறது. இதில் இன்று நடக்கும் 28வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.பேட்டிங் ஏமாற்றம்:மும்பை அணி, இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது. அணியின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. டில்லிக்கு எதிரான...

ஐ.பி.எல். கிரிக்கெட்: 89 சிக்சர் அடித்து கெய்ல் முதலிடம்

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் தொடர்கிறது. புனே வாரியாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது போல பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் அவர் அதிரடியாக விளையாடினார்.56 பந்தில் 87 ரன் (8 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். கிறிஸ் கெய்ல் இந்த ஐ.பி.எல். போட்டியில் மட்டுமின்றி ஓட்டு மொத்த ஐ.பி.எல். கணக்குப்படி சிக்சர் அடித்ததில் முன்னிலையில் உள்ளார். இந்த ஐ.பி.எல்,...

சிக்சர் விளாசியதில் மூக்கு அவுட்

தான் சிக்சர் அடித்த பந்து பட்டு மூக்குடைந்த சிறுமியை, ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினார் கெய்ல்.சின்னச்சாமி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி, புனேயை வீழ்த்தியது. இதில், ராகுல் சர்மா ஓவரில் 5 சிக்சர் விளாசினார் பெங்களூரு அணி வீரர் கெய்ல். அதில் ஒரு சிக்சர் மைதானத்தில் அமர்ந்திருந்த சிறுமி டியா பாட்யாவின், 11, மூக்கில் பட்டு ரத்தம் கொட்டியது."ஸ்கேன்' செய்ததில் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக...

கேப்டன் தோனிக்கு காயமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை, அணி நிர்வாகம் மறுத்துள்ளது.ஐந்தாவது ஐ.பி.எ ல்., தொடரில் "நடப்பு சாம்பியன்' சென்னை அணி, இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில், 2ல் மட்டும் வெற்றி பெற்றது. புனே அணிக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியின் போது, கேப்டன் தோனிக்கு தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் போட்டி முடிந்தவுடன் மனைவி சாக்ஷியுடன் மும்பை சென்றுவிட்டாராம். அங்கு டாக்டரிடம் ஆலோசனை பெற்றுள்ளார்....

"சூப்பர்' சிக்சருக்கு ரூ. 5 லட்சம்

ஐ.பி.எல்., "சூப்பர்' சிக்சஸ்' போட்டியில் மிக நீண்ட தூரத்துக்கு சிக்சர் அடிக்கும் வீரருக்கு, ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.ஐ.பி.எல்., போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது, அதிக சிக்சர் அடித்த வீரர் விருது, "சூப்பர் கேட்ச்' பிடித்த விருது என, வீரர்கள் ஏற்கனவே பரிசு மழையில் நனைந்து கொண்டுள்ளனர். இப்போது புதிதாக "சூப்பர் சிக்சஸ்' என்ற போட்டி நடத்தப்படுகிறது.இதன்படி, தேர்வு செய்யப்பட்ட 5 நாட்களில் போட்டி நடக்கும். ஒவ்வொரு அணிகளும் தலா 3 வீரர்களை இதில்...

மும்பையின் வெற்றிநடை தொடருமா?

ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிநடையை தக்கவைத்துக் கொள்ள மும்பை அணி காத்திருக்கிறது.மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடருக்கான 19வது லீக் போட்டியில், ஹர்பஜன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சேவக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.பவுலிங் பலம்:மும்பை அணியின் மிகப்பெரிய...

தெண்டுல்கர்,டோனியை விட கோலிக்கு அதிகம்

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை இன்சூரன்ஸ் செய்து உள்ளன. இதில் இந்திய அணியின் சொத்தான வீராட் கோலியே அதிகமான தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார்.இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திர வீரரான கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடுகிறார். இந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் ரூ.32 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தப் படியாக தான் டோனி, தெண்டுல்கர் உள்ளனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான மகேந்திர...

தோல்விக்கு காரணம் தோனி

புனே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் இருந்தே தோற்க வேண்டும் என்ற நினைப்பில் தோனி விளையாடியது தெளிவாகத் தெரிந்தது. * தொடர்ந்து சொதப்பும் முரளி விஜயை வெளியேற்றாமல், பெங்களூருக்கு எதிராக அசத்திய போலிஞ்சருக்கு ஓய்வு கொடுத்தார். * முதலில் சென்னை அணி 13வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. பின், எளிதாக 170 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலையில், தோனி மந்தமாக விளையாட, ஸ்கோர் 160ஐ கூட எட்டவில்லை. * டெக்கான் அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய ரவிந்திர ஜடேஜாவுக்கு, ஒரு ஓவர் கூட பவுலிங் தரவில்லை. * கடைசி ஓவரை வீச, ஆல்பி மார்கல் போன்ற அனுபவ வீரர்கள் இருக்க,...

இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதே லட்சியம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான 30 வயதான யுவராஜ்சிங் நுரையீரல் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் 3 கட்ட கீமோதெரபி சிகிச்சை பெற்று கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பினார். வீடு திரும்பிய பின்னர் யுவராஜ்சிங் முதல்முறையாக தனது சொந்த ஊரான குர்கானில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மீண்டும் எனக்கு வாழ்க்கை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டு...

IPL : இணையதள ரசிகர்கள் அதிகரிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் "டுவென்டி-20' போட்டிகளை, இணைதளத்தில் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்துள்ளது.ஐ.பி.எல்., போட்டிகளை "டிவி'யில் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக வருத்தப்படுகின்றனர் நிர்வாகிகள். ஆனால், இணையதளத்தில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை, சரிபாதிக்கும் மேலாக அதாவது 56 சதவீதம் உயர்ந்துள்ளது பெரும் வியப்பாக உள்ளது. துவக்கவிழா உட்பட இதுவரை நடந்த போட்டிகளை 1.37 கோடி பேர் வரை இணைதளத்தில் பார்த்துள்ளனராம். கடந்த...