இலங்கை - பாக்., தொடர் எப்போது?

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர், வரும் டிசம்பர் - ஜனவரி (2014) மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடக்கவில்லை. இதனையடுத்து பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) போட்டிகளை நடத்தி வருகிறது. 

வரும் டிசம்பர் - ஜனவரி (2014) மாதங்களில், பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிராக மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு சர்வதேச "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

இதன்படி, பாகிஸ்தான், இலங்கை அணிகள் வரும் டிச., 11, 13ம் தேதியில் இரண்டு சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் மோதுகின்றன. 

அதன்பின் டிச., 18, 22 (ஷார்ஜா), டிச., 20 (துபாய்), டிச., 25, 27 (அபுதாபி) தேதிகளில் ஐந்து ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

அடுத்த ஆண்டு ஜன., 8-12ம் தேதியில் அபுதாபியில் முதல் டெஸ்ட் போட்டியும், ஜன., 16-20 தேதியில் ஷார்ஜாவில் 2வது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளன.

0 comments:

Post a Comment