9 சூதாட்ட வீரர்கள் மீது வழக்கு - ஐ.சி.சி., நடவடிக்கை



வங்கதேச பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 வீரர்கள் மீது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வழக்குப் பதிவு செய்தது.

"டுவென்டி-20' பிரிமியர் கிரிக்கெட் போல, வங்கதேசத்தில் பி.பி.எல்., தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது தொடர் கடந்த ஜன., 18 முதல் பிப்., 19 வரை நடந்தது. இதில் பல போட்டிகளில் சூதாட்டம் நடந்தது அம்பலமானது. 

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல், சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு (ஏ.சி.எஸ்.யு.,) தனியாக விசாரணை நடத்தியது. முடிவில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. 

இதில் 7 பேர் வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) நடத்தும் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் வெளியிட்ட செய்தியில்," சூதாட்டம் குறித்து ஏ.சி.எஸ்.யு., நிறைய பேரிடம் விசாரணை நடத்தியது. பல்வேறு வழிகளில் இதற்கான ஆதாரங்களை திரட்டினோம். இதன் அடிப்படையில் தான் வழக்கு பதியப்பட்டது,' என, தெரிவித்துள்ளார்.


இப்போது இல்லை:

சூதாட்டத்தில் ஈடுபட்டு வழக்குப் பதியப்பட்ட 9 வீரர்கள் யார், யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின் தான் தெரியவரும். தவிர, தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்ல இவர்களுக்கு, இரு வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

0 comments:

Post a Comment