இந்திய அணிகளில் வெளிநாட்டு வீரர்கள்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், மைக்கேல் ஹசி, டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் உள்ளூர் அணிக்காக விளையாடாமல், இந்திய அணிகளுக்காக விளையாட உள்ளனர். இந்தியாவில், சர்வதேச உள்ளூர் சாம்பியன் அணிகள் பங்கேற்கும், ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், செப்.17 முதல் அக்.6 வரை நடக்கிறது.  இதில், 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான்...

அஜய் ஜடேஜாவின் ஆசை

சூதாட்ட அஜய் ஜடேஜாவுக்கு மீண்டும் கிரிக்கெட் மீது ஆசை பிறந்துள்ளது. இவர், ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட தயாராக இருக்கிறாராம். இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, 42. கடந்த 1992ல் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களமிறங்கிய இவர், 2000ம் ஆண்டு வரை விளையாடினார்.  இதுவரை இவர், 15 டெஸ்ட் (576 ரன்கள்), 196 ஒருநாள் (5359 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன்பின் சூதாட்டப்புகாரில் சிக்கிய இவருக்கு, ஐந்து ஆண்டுகள் போட்டியில்...

இங்கிலாந்து வீரர்கள் முட்டாள்கள் - வாருகிறார் வார்ன்

ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது மிதமிஞ்சிய முட்டாள்தனமான, திமிர் பிடித்த செயல்,'' என, வார்ன் தெரிவித்தார்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-0 என, கைப்பற்றியது.  தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் கோப்பை வென்ற உற்சாகத்தில், இங்கிலாந்து அணியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது உற்சாக மிகுதியில் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகியோர், ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர்...

டெஸ்ட் ரேங்கிங் - இந்தியா பின்னடைவு

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தசம புள்ளிகள் வித்தியாசத்தில் 3வது இடத்தில் தள்ளப்பட்டது. டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது.  இதில், தென் ஆப்ரிக்க அணி தொடர்ந்து முதலிடத்தை (135) தக்கவைத்துக் கொண்டது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என, கைப்பற்றிய இங்கிலாந்து அணி, 116 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.  தசம...

யுவராஜ் சிங் மீண்டும் விளையாட என்ன காரணம்?

கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம், மீண்டும் போட்டியில் விளையாட தூண்டியது,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், 31. 2011ல் நடந்த உலக கோப்பை போட்டியில், தொடர் நாயகன் விருது வென்றார்.  இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் "கேன்சரில்' இருந்து மீண்ட இவர், 2012 "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.  தற்போது "பார்ம்' இல்லாததால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2015 உலக...

சவாலுக்கு தயாராகும் ஜாகிர்

மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முயற்சிக்கும் எனக்கு, உள்ளூர் போட்டிகளில் சோதனை காத்திருக்கிறது. இதை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன்,'' என, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தெரிவித்தார். இந்திய அணியின் "சீனியர்' வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், 34. கடந்த ஆக., மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குப் பின் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான கோல்கட்டா (2012, டிச.,) போட்டிக்குப் பின், டெஸ்ட் அணியில் இருந்தும்...

இளம் இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்தியா, தென் ஆப்ரிக்கா "ஏ' அணிகளுக்கு இடையிலான, 2வது நான்கு நாள் டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை முழுமையாக கைப்பற்ற இளம் இந்திய அணி காத்திருக்கிறது. தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய "ஏ' அணி, நான்கு நாட்கள் விளையாடும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.  ரஸ்டன்பர்க் நகரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை...

தென் ஆப்ரிக்க தொடருக்கு தயார் - இஷாந்த் சர்மா உற்சாகம்

எதிர் வரும் தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளேன்,'' என, இஷாந்த் சர்மா தெரிவித்தார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, 24. இதுவரை 51 டெஸ்ட் (144 விக்.,), 65 ஒரு நாள் (94 விக்.,), 13 "டுவென்டி-20' (8 விக்.,) போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த மாதம் நடந்த முத்தரப்பு தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார்.  தற்போது ஓய்வில் உள்ள இஷாந்த் சர்மா கூறியது: கடந்த பிப்ரவரி...

விராத் கோஹ்லி 6 வது இடம்

ஐ.சி.சி., சர்வதேச "டுவென்டி-20' போட்டி, பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 6வது இடத்தில் நீடிக்கிறார். சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.  பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் விராத் கோஹ்லி, 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 8வது இடத்தில்...

உசைன் போல்ட்டை முந்தினார் இந்திய கேப்டன் தோனி

ஓட்டத்தில் உசைன் போல்ட் தான் "டாப்'. ஆனால், வருமானத்தில் நம்ம தோனி தான் முந்துகிறார்.  உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், போல்ட்டை(40) முந்திய இவர் 16வது இடம் பிடித்தார்.  பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை சார்பில், உலகளவில் கடந்த ஆண்டு (ஜூன் 2012- ஜூலை 2013) அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியானது.  இதற்கு போட்டி சம்பளம், விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் தொகை போன்றவை கணக்கில்...

மீண்டும் அசத்த அஷ்வின் தீவிரம்

சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் அசத்த, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், 26. இதுவரை டெஸ்ட் (16ல், 92 விக்.,), ஒருநாள் (58ல், 80 விக்.,) போட்டிகளில் மொத்தம் 172 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.  கடைசியாக பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் முத்தரப்பு தொடரில், 5 போட்டிகளில் 6 விக்கெட் தான் கைப்பற்றினார்.  இதுகுறித்து அஷ்வின் கூறியது: தற்போது இந்திய அணி போட்டிகளில்...

மூன்றே பந்தில் ஹீரோ - சச்சின் வியப்பு

விறுவிறுப்பான "டுவென்டி-20' போட்டிகளில் ஒருவர் "பேட்டை' சுழற்றினால், மூன்றே பந்துகளில் "ஹீரோ' அந்துஸ்துக்கு உயர்ந்துவிடலாம்,''என, சச்சின் தெரிவித்தார். பெங்களூருவில், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் 75வது ஆண்டு விழா நடந்தது. இதில் இந்தியாவின் சச்சின், கங்குலி, டிராவிட், கும்ளே, நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சச்சின் கூறியது:  கிரிக்கெட்டில் மட்டும் தான் மூன்றுவிதமான...

இங்கிலாந்து கவுன்டி அணியில் காம்பிர்

இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில், எசக்ஸ் அணிக்காக விளையாட இந்திய வீரர் கவுதம் காம்பிர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்திய அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பிர், 31. இதுவரை 54 டெஸ்ட் (4021 ரன்கள்), 147 ஒருநாள் (5238 ரன்கள்), 37 சர்வதேச "டுவென்டி-20' (932 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.  சமீபகாலமாக மோசமான "பார்ம்' காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கிறார்.  இந்நிலையில் இவர், இங்கிலாந்தில் நடக்கும்...

கங்குலி கனவு அணியில் லட்சுமணுக்கு நோ

கங்குலியின் கனவு டெஸ்ட் "லெவனில்' லட்சுமண் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் எடுத்த பெருமைமிக்க இவரை புறக்கணித்தது பெரும் வியப்பை அளித்துள்ளது.  சமீபத்தில் இந்திய கிரிக்öட் ஜாம்பவான் கபில்தேவ் தனது கனவு அணியை அறிவித்தார். இதே போல முன்னாள் கேப்டன் கங்குலியும் தனது கனவு இந்திய அணிகளை தேர்வு செய்தார். இதில், டெஸ்ட், ஒருநாள் என இரு அணியிலும் கபில்தேவை சேர்த்துள்ளார். தனது பெயரையும் இடம் பெறச் செய்துள்ளார்.  ஒருநாள்...

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் திடீர் போராட்டம்

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஒவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.  இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடர் தொடங்க இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில் ஜிம்பாப்வே வீரர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துடன் ஊதிய உயர்வு...

கபில்தேவ் பயிற்சியாளர் மரணம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் பயிற்சியாளர் தேஷ் பிரேம் ஆசாத், மரணம் அடைந்தார். இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை (1983) வென்று தந்தவர் கபில்தேவ். இவருக்கு 1970ல் களில் பயிற்சியாளராக இருந்தவர் தேஷ் பிரேம் ஆசாத், 75. கடந்த 1986 ல் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருது கிடைத்தது.  உடல்நலக்குறைவு காரணமாக சண்டிகரில் உள்ள தனியார், ஆஸ்பத்திரியில் 15 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று ஆசாத் இறந்தார்...

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைக்க வாய்ப்பு உள்ளது,''என, பயிற்சியாளர் லால் சந்த் ராஜ்புட் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய அணியின் அதிரடி வீரர் ஷிகர் தவான், 27. அறிமுக டெஸ்ட் (எதிர்- ஆஸி.,) போட்டியில் அதிவேக சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.  பின் தென் ஆப்ரிக்கா "ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு லீக் போட்டியில், 248 ரன்கள் விளாசினார்.  இதன் மூலம், 50 ஓவர் போட்டியில் அதிக ரன்கள்...

9 சூதாட்ட வீரர்கள் மீது வழக்கு - ஐ.சி.சி., நடவடிக்கை

வங்கதேச பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 வீரர்கள் மீது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வழக்குப் பதிவு செய்தது. "டுவென்டி-20' பிரிமியர் கிரிக்கெட் போல, வங்கதேசத்தில் பி.பி.எல்., தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது தொடர் கடந்த ஜன., 18 முதல் பிப்., 19 வரை நடந்தது. இதில் பல போட்டிகளில் சூதாட்டம் நடந்தது அம்பலமானது.  வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல், சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டு, மக்களிடம் மன்னிப்பு...

இந்திய A அணி சாம்பியன் - ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி

ஆஸ்திரேலிய "ஏ' அணிக்கு எதிரான பைனலில், 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, இந்திய "ஏ' அணி முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி, சாம்பியன் பட்டம் வென்றது.  தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய "ஏ' அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்றது. மூன்றாவது அணியாக ஆஸ்திரேலிய "ஏ' அணி விளையாடியது.  லீக் சுற்றில் அசத்திய இந்தியா (2 வெற்றி), ஆஸ்திரேலியா (3 வெற்றி) அணிகள், பிரிட்டோரியாவில் நேற்று நடந்த பைனலில் மோதின. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் புஜாரா,...

கனவு அணியில் கும்ளே, டிராவிட்

சையது கிர்மானியின் "கனவு கர்நாடக' அணியில், கும்ளே, டிராவிட் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றனர். கர்நாடக கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ.,) நேற்று "பிளாட்டினம் ஜூப்ளி' (70 ஆண்டு) விழாவை கொண்டாடியது.  இதையடுத்து, கர்நாடகாவை சேர்ந்த 12 சிறந்த முன்னாள் வீரர்கள் அடங்கிய "கனவு' அணியை தேர்வு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, 63.  அணியின் கேப்டனாக வெங்கட்ராமன் சுப்ரமணியா இடம் பெற்றார். ஓய்வு பெற்ற கும்ளே,...

இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதல் - ஷிகார் தவான் இரட்டைச் சதம்

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.  இன்று இந்தியா -தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கிடையிலான போட்டி பிரிட்டோரியாவில் நடைபெற்று வருகிறது.  டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷிகார் தவான், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர்.  துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் 14 ஓவர்களில் 100 ரன்னைத்...

இந்திய பவுலர்களுக்கு மெக்ராத் பயிற்சி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மெக்ராத் பயிற்சி தருவார் என்று தெரிகிறது. சென்னையில் இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான எம்.ஆர்.எப்., பயிற்சி அகாடமி உள்ளது. இதன் இயக்குனராக சமீபத்தில் மெக்ராத் நியமிக்கப்பட்டார். இப்போது, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), எம்.ஆர்.எப்., நிறுவனம் இரண்டும் விரைவில் கைகோர்க்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, மெக்ராத் பயிற்சி...

மீண்டும் சேவக், காம்பிர்

உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், சேவக், காம்பிர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்,'' என, முன்னாள் பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் கிரண் மோரே நம்பிக்கை தெரிவித்தார். இந்திய அணியின் துவக்க வீரர்களாக, டில்லியை சேர்ந்த சேவக், காம்பிர் ஜோடி அசத்தியது. மோசமான "பார்ம்' காரணமாக, சமீபத்திய போட்டிகளில் இவர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.  இவர்களுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட ஷிகர் தவான், ரோகித் சர்மா, முரளி...

சதம் அடிக்காமல் சாதனை

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், "சதத்தில் சதம்' அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தினார். கடந்த 2001ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான மிஸ்பா, 39, 2002ல் முதன்முதலில் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதுவரை 39 டெஸ்ட், 125 ஒருநாள், 39 சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடி உள்ளார்.  "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் இவர், டெஸ்டில் மூன்று சதம் அடித்துள்ளார். ஆனால்...

கவாஸ்கருக்கு விருது கிடைக்காதது ஏன்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்காதது ஏன் என, இப்போது தெரியவந்துள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பல பிரிவுகளில், மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், விஜய் அமிர்தராஜ் (டென்னிஸ்) உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ரூ....

கால்பந்து தூதராக டோனி நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி தீவிர கால்பந்து ரசிகர் ஆவார். தனது பள்ளி பருவத்தில் கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்து விளையாடியவர். அதன்பின் கிரிக்கெட் மீது ஆர்வம் திரும்பியது. தற்போது டோனியை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியின் இந்திய தூதராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி நிறுவனம் நியமித்து உள்ளது.  இந்தியாவில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரை பிரபலபடுத்தும் விளம்பரங்களில் அவர் தோன்றுவார்.  கால்பந்து போட்டியுடன்...

சாதிக்க உதவிய தோனியின் டிப்ஸ்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சிறந்த கேப்டனாக சாதிக்க, தோனி வழங்கிய ஆலோசனைகள் உதவியது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்தார். சமீபத்தில் ஜிம்பாப்வே சென்ற விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, 5-0 என தொடரை வென்றது. இதன்மூலம் அன்னிய மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி சாதித்தது. இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரின் போது முதுகுபகுதியில் காயமடைந்த தோனி மூன்று போட்டிகளில் விளையாடவில்லை.  இதனையடுத்து...