சச்சினின் சிலையில் மாற்றம்

இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின், 40. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதான நிர்வாகம் சார்பில், இவரது மெழுகு சிலை திறக்கப்பட்டது.  இந்த சிலையில் கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் "டி-சர்ட்டுடன்' சச்சின் காணப்பட்டார்.  ஆனால், 2006ல், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஜோகனஸ்பர்க், "டுவென்டி-20' போட்டி தான் இவர் பங்கேற்ற முதல் மற்றும் கடைசி ஆட்டம். இதையடுத்து "டி-சர்ட்' தொடர்பாக சர்ச்சை எழுந்தது.  இதுகுறித்து...

விராத் கோஹ்லிக்கு அர்ஜுனா விருது

இந்திய வீரர் விராத் கோஹ்லியின் பெயரை, அர்ஜுனா விருதுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 24. சிறந்த "மிடில் ஆர்டர்' வீரரான இவர், இதுவரை 18 டெஸ்ட் (1,175 ரன்), 98 ஒருநாள் (4,054 ரன்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.  கடந்த செப்டம்பர் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,), சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது வென்றார்.  முதலில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடிய இவர்,...

சென்னை அணி அசத்தல் வெற்றி

கோல்கட்டா அணிக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் மைக்கேல் ஹசி அதிரடி ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.  இந்தியாவில், 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த  லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணிக்கு சகா, மைக்கேல் ஹசி சிறப்பான துவக்கம்...

தோனியை சமாளிப்பாரா காம்பிர்?

சென்னையில் இன்று நடக்கும் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை, "நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோதுகின்றன.  சென்னை அணிக்கு துவக்க வீரர் மைக்கேல் ஹசி, பேட்டிங்கில் நம்பிக்கை தருகிறார்.  இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 அரைசதம் <உட்பட, மொத்தம் 350 ரன்கள் அடித்துள்ளார். தமிழகத்தின் முரளி விஜய் தான் பெரிதும் (8 போட்டி, 122 ரன்) ஏமாற்றுகிறார்.  துவக்க போட்டிகளில் சொதப்பிய "மிடில் ஆர்டர்' ரெய்னா,...

மீண்டும் விளாசுவாரா கெய்ல்?

மும்பையில் இன்று நடக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில், கெய்ல் மீண்டும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  பெங்களூரு அணியின் பலமே கெய்ல்தான். புனே அணிக்கு எதிராக 30 பந்தில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவரது சிறப்பான "பார்ம்' இன்றும் தொடரலாம்.  இவருக்கு பக்கபலமாக, கேப்டன் கோஹ்லி உள்ளார். சவுரப் திவாரி, அருண் கார்த்திக் ஆகியோர் தங்களது பங்களிப்பை கொடுத்தால்...

ஏமாற்றம் அளிக்கும் பேட்டிங்

கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா, 2வது இடம் பிடித்த சென்னை அணிகள் புள்ளிப் பட்டியலில் பின்வரிசையில் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.  இந்த அணிகளின் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்காதது பின்னடைவை ஏற்படுத்துகிறது.  கோல்கட்டா அணியின் மனோஜ் திவாரி, யூசுப் பதான் எழுச்சி கண்டால் பேட்டிங்கில் பலம் கிடைக்கும். முன்னணி சர்வதேச வீரர்கள் அதிகம் இல்லாத ராஜஸ்தான், ஐதராபாத், பஞ்சாப் அணிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.  இதற்கு வீரர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் முக்கிய காரணம்...

ஐ.பி.எல். தொடரில் 175 ரன்கள் குவித்து கிறிஸ் கெய்ல் புதிய சாதனை

ஐ.பி.எல். போட்டியில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.  ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தில்சானும், கெய்ல்-ம் ஆரம்பம் முதலே புனே வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் விளாசித் தள்ளினர்.  குறிப்பாக கெய்ல் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 11...

டாப் 10 வரிசையில் புஜாரா, அஷ்வின்

ஐ.சி.சி., டெஸ்ட் வீரர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் புஜாரா, அஷ்வின் "டாப்-10' வரிசையில் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது.  இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் புஜாரா, 777 புள்ளிகளுடன் 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். கேப்டன் தோனி 22வது இடத்தில் உள்ளார்.  முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின்...

சென்னை பிளே-ஆப் போட்டிகள் மாற்றமா?

பிரிமியர் கிரிக்கெட் தொடரின் இரண்டு "பிளே-ஆப்' போட்டிகள், சென்னையில் இருந்து மாற்றப்படலாம் எனத்தெரிகிறது. ஆறாவது பிரிமியர் லீக் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிப் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை வீரர்கள், தமிழகத்தில் விளையாட அரசு எதிர்ப்பு தெரிவித்தது.  இதையடுத்து, சென்னையில் நடக்கும் லீக் போட்டிகளின் போது, இலங்கை வீரர்களை சேர்க்காமல், மாற்று வீரர்களுடன்...

IPL 6 - சென்னை அணி அசத்தல் வெற்றி

கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்தியாவில் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 26வது லீக் போட்டியில் சென்னை, "நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் பேட்டிங் தேர்வு செய்தார்.  கோல்கட்டா அணிக்கு காம்பிர் (25), யூசுப் (25) ஆறுதல் அளித்தனர். பின் வந்த காலிஸ் (0), மார்கன் (2) சொதப்பினர்....

சச்சினுக்கு இடமில்லையா? முன்னாள் வீரர்கள் ஆவேசம்

இங்கிலாந்தின் டிக்கி பேர்டு அறிவித்த கனவு அணியில், சச்சின் சேர்க்கப்படாதது, கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிக்கி பேர்டு. தேசிய அணியில் கடைசிவரை இடம் பெறாத இவர், 66 டெஸ்ட் போட்டிகளுக்கு அம்பயராக இருந்தார் .  தனது 80வது பிறந்த நாளுக்கு 11 சிறந்த வீரர்கள் அடங்கிய தனது டெஸ்ட் கனவு அணியை தேர்வு செய்தார். டெஸ்ட் அரங்கில் அதிக...

ஐ.பி.எல்., அரங்கில் 50வது வெற்றி - சென்னை சிங்கங்கள் அசத்தல்

டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய மைக்கேல் ஹசி அரைசதம் அடித்தார். மீண்டும் சொதப்பிய டில்லி அணி, தொடர்ந்து 6வது தோல்வியை பெற்றது. ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த தொடரின் 24வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்...

மிஸ்ரா ஹாட்ரிக் - ஐதராபாத் வெற்றி

ஐ.பி.எல்., லீக் போட்டியில், அமித் மிஸ்ரா "ஹாட்ரிக்' சாதனை படைக்க, ஐதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை விரைவாக இழந்த புனே அணி ஏமாற்றம் அளித்தது. ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று புனேயில் நடந்த தொடரின் 22வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், ஐதராபாத் அணிகள் மோதின. ஒயிட் கேப்டன்: சங்ககரா ஓய்வு எடுத்துக் கொள்ள, ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை காமிரான்...

சென்னை அணியின் பிரச்னை - பத்ரிநாத் வருத்தம்

சென்னை அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. விரைவில் இது சரி செய்யப்படும்,'' என, பத்ரிநாத் தெரிவித்தார். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி இதுவரை பங்கேற்ற நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி, தோல்வியடைந்தது.  இதில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் துவக்க வீரர்கள் முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து 139 ரன்கள் எடுத்தனர். மற்றபடி இந்த ஜோடி 10, 4 ரன்கள் தான் எடுத்தது.  கடைசியில் சென்னை அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில்...

ரெய்னாவுக்கு பிடிச்சது 3

தொடர்ந்து மூன்றாவது இடத்தில் களமிறங்குவதையே விரும்புகிறேன்,'' என, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். சர்வதேச மற்றும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளில் கடைசி வரை களத்தில் இருந்து, "பினிஷிங்' செய்வதில் வல்லவர் ரெய்னா.  இவர், ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் (2,294) குவித்த வீரர்கள் வரிசையில், முதலிடத்தில் உள்ளார். "பேட்டிங் ஆர்டர்' குறித்து ரெய்னா கூறியது: 2010ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த தென் ஆப்ரிக்க அணிக்கு...

தெண்டுல்கரை முந்திய ரோகித் சர்மா

ஐ.பி.எல். போட்டியில் நேற்று ரோகித் சர்மா 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் தெண்டுல்கரை முந்தினார்.  ரெய்னா 2294 ரன் எடுத்து (84 ஆட்டம்) முதல் இடத்திலும், காம்பீர் 2187 ரன் எடுத்து (75 ஆட்டம்), 2-வது இடத்திலும் ரோகித் சர்மா 2130 ரன் எடுத்து (82 ஆட்டம்) 3-வது இடத்திலும் உள்ளனர்.  தெண்டுல்கர் 2115 ரன்களுடனும் (68 ஆட்டம்), காலிஸ் 2004 ரன்களுடனும் (77 ஆட்டம்) அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.  கிறிஸ்கெய்ல் 2 ஆயிரம் ரன்னை தொட 1 ரன்னே தேவை. அவர் 48 ஆட்டத்தில் 1999 ரன் எடுத்துள்ளார். கெய்ல் விளையாடும் அடுத்த ஆட்டத்தில் 2 ஆயிரம்...

எனக்கு சர் பட்டம் - காமெடி என்கிறார் ஜடேஜா

சர் பட்டத்துடன் என்னை அழைப்பது "காமெடி'யான ஒன்று'' என, சென்னை அணியின் ஜடேஜா தெரிவித்தார்.  பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி பந்தில் வெற்றி பெற, சென்னை அணிக்கு ஜடேஜா கைகொடுத்தார்.  இது குறித்து இவர் கூறியது: முக்கியமான கட்டத்தில், கேப்டன் தோனி அவுட்டானார். எனவே அடுத்து என்ன நடக்கப்போகிறது என நினைத்தோம்.  தவிர, கடைசி ஓவரில், வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன. ஆனாலும், சிறப்பான ஆட்டத்தால் கடைசி பந்தில்...

ஐ.பி.எல்., ரேட்டிங் குழப்பம்

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் பார்வையாளர்கள் குறித்த "ரேட்டிங்' விவரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது.  இப்போட்டியை காணும் "டிவி' பார்வையாளர்கள் "ரேட்டிங்' குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன.  சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் சார்பிலான மல்டி ஸ்கிரீன் மீடியா (எம்.எஸ்.எம்.,) நிறுவனம் வெளியிட்ட செய்தியில்," கடந்த ஆண்டினை விட ஆறாவது ஐ.பி.எல்., தொடர் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.  முதல்...

கெய்ல் இல்லாமல் சாதிக்க முடியுமா?

அதிரடி துவக்க வீரர் கெய்ல் இல்லாமலும் போட்டியில் வெற்றி பெற முடியும்,'' என்று பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங் தெரிவித்தார்.  இந்தியாவில் ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வெஸ்ட் இண்டீசின் கெய்ல் உள்ளார். மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் சிக்சர் மழை பொழிந்த கெய்ல் 92 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.  ஐதராபாத் அணிக்கு எதிரான...

டெலிவிசன் தொடரில் சச்சின் தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் சாகப்தமான சச்சின் தெண்டுல்கர் டெலிவிசன் தொடரில் அறிமுகம் ஆகிறார். மாஸ்டர் பிளாஸ்டர்ஸ் என்ற கார்ட்டூன் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.  மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் 3டி அனிமேசன் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது. இதில் கார்ட்டூன் ஹீரோவாக வரும் தெண்டுல்கர் 12 சுட்டிக்குழந்தைகளுடன் சேர்ந்து கிரிக்கெட் சாகசங்கள் நிகழ்த்துகிறார்...

மெதுவாக பந்து வீச்சு - டிராவிட்டுக்கு அபராதம்

ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 19 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.   இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மெதுவாக பந்து வீசியது தெரிய வந்தது. குறிப்பிட்ட நேரத்தில் 2 ஓவர் குறைவாக வீசி இருந்தது.   இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் டிராவிட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். விதிப்படி அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது...

எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்ற ஜடேஜா

ஆஸ்திரேலிய தொடரில் யாருமே எதிர்பாராத வகையில், வியக்கத்தக்க வகையில் எழுச்சி பெற்று அசத்தினார் இளம் வீரர் ரவிந்திர ஜடேஜா. கடந்த 2008ல் ராஜஸ்தான் ஐ.பி.எல்., அணி மூலம், ஜடேஜாவை வெளியுலகிற்கு கொண்டு வந்தது ஆஸ்திரேலிய அணியின் வார்ன் தான். இத்தொடரில் ராஜஸ்தான் கோப்பை வெல்ல, இந்திய "டுவென்டி-20' அணியில் இடம் பெற்றார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், அவ்வப்போது ஏற்ற இறக்கங்களுடன் செயல்பட்டு வந்தார். கடைசியில், கடந்த 2012 தொடரில் சென்னை அணிக்காக...

ஜம்பிங் ஜபாங் ஜம்பக் ஜம்பக்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஜூரம் நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. போட்டிகளின் விறுவிறுப்பு எப்படி ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறதோ அதுபோல ஐ.பி.எல். போட்டிக்கான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  ஐ.பி.எல். போட்டியை சோனி செட் மேக்ஸ் டெலிவிசன் ஒளிபரப்பி வருகிறது. போட்டிக்கு முன்பும், பிறகும் அந்த டெலிவிசனில் ஒளிபரப்பாகும். ஐ.பி.எல். பாடல் ரசிகர்களின் வர வேற்பை பெற்றுள்ளது.  ஜம்பிங் ஜபாங் ஜம்பக் ஜம்பக் கிலி கிலியா தம்பிங்...

IPL 6 - அதிக விலைக்கு எடுத்தவருக்கு ஆடவாய்ப்பு இல்லை

இந்த ஐ.பி.எல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் போனவர் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலிய வீரரான அவரை மும்பை இந்தியன்ஸ அணி ரூ.5.30 கோடிக்கு எடுத்தது. ஆனால் மும்பை அணி விளையாடிய 2 ஆட்டத்திலும் மேக்ஸ்வெலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.   சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் அவருக்கு ஆடவாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டு விட்டார்.   கேப்டன் பாண்டிங், போலார்ட், ஜான்சன், சுமித் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் அந்த அணியில் ஆடினார்கள். இனிவரும் போட்டிகளில் சுமித் அல்லது ஜான்சன் இடத்தில் மேக்ஸ்வெலுக்கு...

புது வரலாறு படைக்குமா பஞ்சாப்

ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.  கடந்த 5 தொடர்களில் பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் வென்றதில்லை. இம்முறை வெற்றி பெற்று புது வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆறாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி, மாத்யூஸ் தலைமையிலான புனே அணியை எதிர்கொள்கிறது.  முதல் போட்டியில், ஐதராபாத்...

சேப்பாக்கத்தில் 33-வது ஐ.பி.எல். போட்டி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுவது 33-வது ஐ.பி.எல். போட்டியாகும். இதுவரை நடந்த 32 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 21 போட்டியில் வெற்றி பெற்றது. 11 ஆட்டத்தில் தோற்றது.  2011-ம் ஆண்டு சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தான் மோதிய 8 ஆட்டத்திலும் வென்று சாதனை படைத்து கோப்பையை வென்றது. இங்கு சூப்பர் கிங்ஸ் வீரர் முரளிவிஜய் 2 முறை சதம் அடித்துள்ளார்.  2010-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக 56 பந்தில் 127 ரன்னும், கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக 58 பந்தில் 113 ரன்னும் எடுத்தார்...

வாழ்த்து மழையில் டிராவிட்

இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.  இந்தியாவின் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு, நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார்.  விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.  தவிர, லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற, இந்தியாவின் மேரி கோமுக்கு பத்ம...

சச்சினிடம் இருந்து பாடம் கற்ற பிரக்யான் ஓஜா

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு பந்துவீசுவதன் மூலம் சிறந்த பாடம் கற்றுக் கொள்ளலாம்,'' என, மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா, 26. சமீபத்தில் டில்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில், ஜேம்ஸ் பட்டின்சனை அவுட்டாக்கிய இவர், டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.  இதுவரை...