இலங்கை பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகள் ஆகஸ்டில் துவக்கம்

இந்தியாவில் கடந்த 2008-ல் துவக்கப்பட்ட 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அளவில் பிரபலமானதை அடுத்து ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டில் இதே போன்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் துவங்கியுள்ளன.ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இதுபோன்ற போட்டிகளை நடத்திவரும் நிலையில் தற்போது இலங்கையும் இதன் வரிசையில் சேர்ந்துள்ளது.இலங்கை பிரீமியர் லீக் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 20 ஓவர் போட்டித் தொடர் வரும் ஆகஸ்டு...

அசத்துவாரா ஜூனியர் சச்சின்

சச்சின் வழியில் அசத்த காத்திருக்கிறார் அவரது மகன் அர்ஜுன். மும்பை கிரிக்கெட் (எம்.சி.ஏ.,)சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். இவரது மகன் அர்ஜுனும் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமாக உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர், வேகப்பந்துவீச்சிலும் வல்லவர். மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் படிக்கும் இவர், சமீபத்தில் உள்ளூர் கிளப் அணிக்காக பங்கேற்று சதம்(124 ரன்) விளாசினார். இந்நிலையில், அடுத்த மாதம் எம்.சி.ஏ., சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் நடக்க உள்ளது....

கிரிக்கெட் உலகில் அடுத்த சச்சின் தெண்டுல்கர் ரெடி

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார்.கடந்த மாதம் மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்றன.இதில் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தெண்டுல்கரும் கலந்துகொண்டார். 12 வயதே ஆன அர்ஜுன், இந்த போட்டியில் ஒரு சிக்சர், 14 பவுண்டரிகள்...

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிரேங்கிங் - தோனி பின்னடைவு

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி 4வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், 5வது இடத்தை இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார்....

ஜெர்மனி உலக சாதனை! - அரையிறுதிக்கு முன்னேறியது

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் ஜெர்மனி அணி, கிரீசை வீழ்த்தி, அரையிறுதிக்கு சுலபமாக முன்னேறியது. தவிர, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 15வது வெற்றியை பெற்று உலக சாதனை படைத்தது. கிரீஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் போலந்து, உக்ரைனில் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதியில் ஜெர்மனி, கிரீஸ் அணிகள் மோதின. ஜெர்மனி அணியில் கோமஸ், தாமஸ் முல்லர், பொடோல்ஸ்கி ஆகிய முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டு,...

டென்னிஸ் சர்ச்சை: தீர்வு எப்போது?

லண்டன் ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ் பங்கேற்பாரா, இல்லையா என்பது, வரும் 28ம் தேதிக்கு மேல் தான் உறுதியாக தெரியும்.லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சர்வதேச தரவரிசையில் 7வது இடத்திலுள்ள பயஸ், நேரடியாக தகுதி பெற்றார். இவருடன் விளையாட மகேஷ் பூபதி, போபண்ணா இருவரும் மறுத்த நிலையில், வேறு வழியின்றி "ஜூனியர்' வீரர் விஷணு வர்தன் (207வது "ரேங்க்') விளையாடுவார் என்றும், கலப்பு இரட்டையரில் பயஸ்-சானியா ஜோடி பங்கேற்கும் எனவும் இந்திய டென்னிஸ் சங்கம்(ஏ.ஐ.டி.ஏ.,) அறிவித்தது....

கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தல்

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக போர்ச்சுகல் முன்னேறியது. கேப்டன் கிறிஸ்டியனோ ரொனால்டோவின் அசத்தல் கோல், வெற்றிக்கு கைகொடுத்தது. செக் குடியரசு அணி பரிதாபமாக வெளியேறியது.போலந்து மற்றும் உக்ரைனில் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் லீக் சுற்று முடிந்து தற்போது காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. வார்சா நகரில் நடந்த முதல் காலிறுதியில் போர்ச்சுகல், செக் குடியரசு அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதல் இரு அணிகளும், கோல்...

ராஜ்யசபாவில் சத்தமின்றி சாதிப்பேன் - சச்சின் உறுதி

ராஜ்யசபாவில் சத்தமிட்டு பேச வேண்டிய அவசியம் இருக்காது. அடக்கமாக பேசி காரியம் சாதிப்பேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவரது சாதனைகளுக்கு அங்கீகாரமாக ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். பொதுவாக பார்லிமென்ட் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி, பிரச்னை கிளப்புவர். ஆனால், சச்சினை பொறுத்தவரை அமைதியாக பேசி மிகவும் நாகரிகமாக நடந்து கொள்ள விரும்புகிறார்.இது குறித்து சச்சின் கூறியது:ராஜ்யசபாவில் நான் சத்தமிட்டு...

அப்பாடா... இரண்டு ஜோடிக்கு ஓ.கே

ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்னைக்கு முடிவு கிடைத்துள்ளது. "லண்டன் ஒலிம்பிக்கில் பயஸ்-விஷ்ணு வர்தன், பூபதி-போபண்ணா என, இரண்டு ஜோடி பங்கேற்கும்,' என, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) முடிவு செய்துள்ளது.லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் வீரர்கள் தேர்வு, இம்முறை பிரச்னையாக போனது. லியாண்டர் பயசுடன் இணைந்து மகேஷ் பூபதி விளையாடுவார் என, ஏ.ஐ.டி.ஏ., முதலில் அறிவித்தது. இதை ஏற்க முடியாது என, பூபதி முதலில் அறிவித்தார்."பூபதி...

ஒலிம்பிக்கிற்கு குட்பை - லியாண்டர் பயஸ் மிரட்டல்

ஜூனியர் வீரருடன் சேர்ந்து விளையாட முடியாது. தொடர்ந்து வற்புறுத்தினால், லண்டன் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவேன்,'' என, இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ் மிரட்டியுள்ளார்.லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் வீரர்கள் தேர்வு இடியாப்ப சிக்கலாக நீடிக்கிறது. லியாண்டர் பயசுடன் இணைந்து மகேஷ் பூபதி விளையாடுவார் என, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) அறிவித்தது முதல் பிரச்னை துவங்கியது.பயசுடன் விளையாட முடியாது என, பூபதி முதலில் அறிவித்தார்,...

சச்சினை முந்தினார் தோனி

உலகின் பணக்கார விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, சச்சின், உசைன் போல்ட், ஜோகோவிச் ஆகியோரை பின்தள்ளி 31வது இடம் பிடித்தார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியாகும் பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் பணக்கார விளையாட்டு நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு 31வது இடம் கிடைத்துள்ளது. இவரது வருமானம் ரூ. 148 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.இப்பட்டியலில்...

போபண்ணா போர்க்கோலம் - பயசுடன் விளையாட முடியாது

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய வீரர்கள் தேர்வு பிரச்னை இன்னும் முடியவில்லை. மகேஷ் பூபதியை அடுத்து இப்போது, ரோகன் போபண்ணாவும் லியாண்டர் பயசுடன் சேர்ந்து விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார்.லண்டன் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் டென்னிஸ் வீரர்களை, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) சமீபத்தில் அறிவித்தது. இதன்படி, ஒலிம்பிக் இரட்டையர் பிரிவில், லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடியை தேர்வு செய்தது.சமீபகாலமாக பயசை பிரிந்து,...

கிரிக்கெட்: இந்தியா "ஏ' அணி ஏமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணியின் அபார பந்துவீச்சில் இந்தியா "ஏ' அணி முதல் இன்னிங்சில் 230 ரன்களுக்கு சுருண்டது.இந்தியா "ஏ', வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி நான்கு நாள் போட்டி செயின்ட் லூசியாவில் நடக்கிறது. "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பெர்மால், "பீல்டிங்' தேர்வு செய்தார்."டாப்-ஆர்டர்' ஏமாற்றம்:முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அபினவ் முகுந்த் (10) மோசமான துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா (12) ஏமாற்றினார்....

ஹாட்ரிக் சாதனை படைத்த 4-வது இலங்கை வீரர்

பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 44 ரன்னில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் இலங்கை 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.இந்தப்போட்டியில் இலங்கை வேகப்பந்து வீரர் பெரைரா ஹாட்ரிக் சாதனை படைத்தார். 41-வது ஓவரில் 2-வது பந்தில் யூனுஸ்கானையும், 3-வது பந்தில் அப்ரிடியையும், 4-வது பந்தில் சர்பிராஸ் அகமதுவையும் அவர் அவுட் செய்தார். 5-வது பந்தில் சோகைல் தன்வீர் ரன்அவுட் ஆனார்.ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 32-வது...

நேபாளத்தின் கிரிக்கெட் தூதுவரானார் தோனி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நோபாளத்தின் கிரிக்கெட் தூதுராக நியமிக்கப்பட்டார். இந்திய எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தோனி, தற்போது நேபாள தலைநகர் காட்மாண்டுவிற்கு தனது மனைவி சாக்ஷியுடன் சென்றுள்ளார். அவர் அங்குள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுடன் விளையாட்டு நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். பின், தோனி நேபாளத்தின் தூதுவராக நியமிக்கபட்டார். இது நேபாளத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு பெரிதும்...

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்க முடிவு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை கடந்த 2008-ம் ஆண்டு ஏலத்தில் ரூ.592 கோடிக்கு டெக்கான் கிரானிக்கல் குரூப் வாங்கியது.இந்த நிலையில் டெக்கான் அணியை முழுமையாகவோ அல்லது அணியின் மொத்த பங்குகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியையோ விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அணியை வாங்குவதற்கு தகுதியான நிறுவனத்தை தேடும் பணி நடந்து வருகிற...

லண்டன் ஒலிம்பிக்: பூபதி திடீர் போர்க்கொடி

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் விளையாட லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி தேர்வு செய்யப்பட்டனர். போபண்ணாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற பூபதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் கூட்டம்(ஏ.ஐ.டி.ஏ.,) நேற்று பெங்களூருவில் நடந்தது. ஒலிம்பிக் இரட்டையர் பிரிவில், ஒரு நாட்டின் சார்பில்...

லியாண்டர் பயஸ் ஜோடி யார்?

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர் லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாடுவது யார் என்பதில் இழுபறி நீடிக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங் (தரவரிசை) இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். மற்ற இந்திய வீரர்களான மகேஷ் பூபதி (14வது இடம்), ரோகன் போபண்ணா (12வது) லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக...

இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவுக்கு விளையாடத் தடை

இலங்கை அரசு சார்பில் எப்போது அழைத்தாலும் விளையாட வர வேண்டும் என்ற இலங்கை அரசின் விளையாட்டுத் துறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த இலங்கை கிரிக்கெட் வீரர் லஸித் மலிங்காவுக்கு விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையில் உள்ளூர் விளையாட்டு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தம், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத வீரர்களுக்கு, விளையாடத் தடை விதிக்கவும் வகை செய்வதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தனந்தா கூறியுள்ளா...

ரஞ்சி கோப்பை தொடரில் அதிரடி மாற்றம்

ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் தொடரில் அதிரடி மாற்றங்களை செய்து, கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ., தொழில்நுட்ப கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. உள்ளூர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர், ஆண்டுதோரும் நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இதில் 27 அணிகள், "எலைட்' மற்றும் "பிளேட்' என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் "எலைட்' பிரிவில் 15 அணிகளும், "பிளேட்' பிரிவில் 12 அணிகளும் விளையாடும்.இதில் மாற்றம் கொண்டுவர, கங்குலி தலைமையிலான...