இந்திய அணி பிந்தியது ஏன்?இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி, தொடர்ந்து செய்யும் தவறுகளால், அன்னிய மண்ணில் தோல்வி தொடர் கதையாகிறது. 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0–4 என, இழந்தது. உலக கோப்பை தொடரில் ‘நடப்பு சாம்பியன்’, ஒருநாள் அரங்கில் ‘நம்பர்–1’ என்ற அந்தஸ்துடன் அங்கு சென்று, இப்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அன்னிய மண்ணில் தொடர்ச்சியாக 8வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க மறுப்பதால், தோல்வி தொடர் கதையாகிறது. தற்போது நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி அடைந்த தோல்விக்கான காரணங்கள்:


தெளிவற்ற கேப்டன்:

தென் ஆப்ரிக்க தொடரில் அடைந்த தோல்விக்குப் பின், ‘மிஸ்டர் கூல்’ கேப்டன் தோனி, நியூசிலாந்து தொடருக்கு ஏதாவது மாற்றங்கள் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்போதும் போல களமிறங்க, 8வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, இந்தியாவை பந்தாடி விட்டது.

இத்தொடரில் ‘டாஸ்’ வென்றது; பேட்டிங்கில் ஆறுதல் தந்தது மட்டும் தான் தோனி செய்த சரியான செயல். மற்ற அனைத்திலும் குழப்பவாதியாக மாறிவிட்டார்.

துவக்க வீரர்கள் ஏமாற்றிய நிலையில், 4வது போட்டியில் ஷிகர் தவானை நீக்கிவிட்டு, கோஹ்லியை களமிறக்கி தவறு செய்தார். ரோகித்துடன் ரகானேவை அனுப்பியிருக்க வேண்டும்.

ரெய்னா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, முதல் மூன்று போட்டிக்குப் பின் தான் இவரை வெளியேற்றினார். இதற்குள் தொடரை வெல்ல முடியாத நிலை வந்துவிட்டது. அஷ்வினை தொடர்ந்து அணியில் சேர்க்கிறார்.

0 comments:

Post a Comment