சர்ச்சை கிளப்பிய உலக கோப்பை டி சர்ட்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில், 20வது உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை, பிரேசிலில் நடக்கவுள்ளது. உலக கோப்பை தொடரை பார்க்க  ரசிகர்கள் வரவுள்ள நிலையில், பாலியல் தொழில் கொடி கட்டிப் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தடுக்க பிரேசில் நிர்வாகம் பெரும் பாடுபட்டு வருகிறது. இதனிடையே, விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனியின் பிரபல அடிடாஸ் நிறுவனம், பெண்களின் பின்னழகை குறிக்கும் வகையில் வெளியிட்ட கால்பந்து ‘டி சர்ட்’, சர்ச்சை கிளிப்பியுள்ளது.  இது விற்பனைக்கு வந்த ஒரு சில மணி நேரத்தில்...

ஸ்ரீசாந்த் 100 சதவீதம் அப்பாவி - சூதாட்ட நடிகர் புது தகவல்

பிரிமியர் தொடர் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் உண்மையில் 100 சதவீதம் அப்பாவி,’’ என, பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் தெரிவித்தார். ஆறாவது பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்திய அணியின் ராஜஸ்தான் வீரர் ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தவிர, சென்னை அணியின் ‘கவுரவ’ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் சிக்கினர். இதனிடையே, ஆங்கில ‘டிவி’ சானல் ஒன்று நடத்திய புலனாய்வு நடவடிக்கையில்,...

ஆடுகள பராமரிப்பாளருடன் காம்பிர் மோதல்

டில்லி மைதான ஆடுகள பராமரிப்பாளர், இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கட் சுந்தரத்தை, அடிக்கப் பாய்ந்துள்ளார் காம்பிர். இந்திய  அணியின் துவக்க வீரர் காம்பிர், 32. மோசமான ‘பார்ம்’ காரணமாக அணியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் இவர், கடந்த பிரிமியர் தொடரின் போது, ‘சீனியர்’ டிராவிட், கோஹ்லியுடன் மோதலில் ஈடுபட்டார். இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 24ம் தேதி ஆடுகள பராமரிப்பாளர்,...

ஜூனியர் உலக கோப்பையில் ஏமாற்றம்

ஜூனியர் உலக கோப்பை தொடரில் இருந்து, ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி நடையை கட்டியது. நேற்று நடந்த பரபரப்பான காலிறுதியில் கடைசி ஓவரில் இங்கிலாந்திடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அரையிறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.                          ஐ.சி.சி., சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,)...

சச்சின் தொடரில் ரூ. 180 கோடி

சச்சினுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம் பி.சி.சி.ஐ.,க்கு சுமார் ரூ. 180 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்திய ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் உட்பட பல சாதனைக்கு சொந்தக்காரர். இவர், தனது 200வது டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணில் விளையாடி, ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக வெஸ்ட் இண்டீசுடன் ஒரு தொடரை(2 டெஸ்ட்+3 ஒருநாள் போட்டி) இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) அவசரம் அவசரமாக கடந்த ஆண்டு ஏற்பாடு...

ஏன் தோனி இப்படி?

பயிற்சியாளரும் சரியில்லை. கேப்டன் தோனியும் சரியில்லை’’ என, முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி தெரிவித்தார். 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றது. இதன் பின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ்டன் பதவி விலகினார். இதையடுத்து ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர், புதிய பயிற்சியாளர் ஆனார். அன்று முதல் இந்திய அணியை தோல்வியும் தொற்றிக் கொண்டது. உள்ளூர் போட்டிகளில் அசத்தும் இந்திய அணி வீரர்கள், அன்னிய மண்ணில் சொதப்புகின்றனர். 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும்...

எடுபடுமா 2 கேப்டன் பார்முலா?

இந்திய கிரிக்கெட் அணியை தோல்வியில் இருந்து மீட்க, இரண்டு கேப்டன்களை நியமிக்கலாம். டெஸ்டுக்கு விராத் கோஹ்லியும், ஒருநாள் போட்டிக்கு தோனியும் அணியை வழிநடத்தலாம். கடந்த 2007, உலக கோப்பை (50 ஓவர்) தொடரில், முதல் சுற்றில் இந்திய அணி வெளியேற, அடுத்து நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில், சீனியர்களை புறக்கணித்துவிட்டு, தோனிக்கு கேப்டன் பொறுப்பு தரப்பட்டது. இதில் கோப்பை வென்று சாதிக்க, அதே ஆண்டில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பும் இவரைத் தேடிவந்தது....

திராணி இல்லாத கேப்டனா தோனி

உள்ளூரில் ‘புலியாக’ திகழும் தோனி, சமீப காலமாக வெளிநாடுகளில் சொதப்புகிறார். இவர், தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, குறைந்தபட்சம் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை, 2011 ல் 50 ஓவர் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி உட்பட இந்திய அணிக்காக 37 கோப்பைகள் வென்று தந்தவர் கேப்டன் தோனி.  ஆனாலும் சமீப காலமாக  அன்னிய மண்ணில் ஏமாற்றுகிறார். கடந்த மூன்று...

இந்திய வாய்ப்பு அம்போ - மெக்கலம் இரட்டை சதம்

வெலிங்டன் டெஸ்டில் கேப்டன் பிரண்டன் மெக்கலம் இரட்டை சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.  நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட், வெலிங்டனில் நடக்கிறது.  முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 192 ரன்கள், இந்தியா 438 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்டநேர...

மீண்டும் சூது கவ்வும் - தோனி, ரெய்னா, ஆர்.பி.சிங்

சூதாட்டம் குறித்து நீதிபதி முத்கல் குழு அளித்த அறிக்கையில், தோனி, ரெய்னாவைத் தொடர்ந்து ஆர்.பி.சிங் பெயரும் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது. ஆறாவது பிரிமியர் தொடர் சூதாட்டத்தில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார்.  இதுகுறித்து விசாரித்த அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு, கடந்த 10ம் தேதி அறிக்கை சமர்பித்தது. இதில் இந்திய அணி...

இந்தியாவின் 2வது இடத்துக்கு ஆபத்து

ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ‘நம்பர்–2’ இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இன்று துவங்கும் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வௌியிடப்படும், சிறந்த டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், தென் ஆப்ரிக்க அணி 133 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் உள்ளது. இந்தியா (117 புள்ளி), ஆஸ்திரேலியா (111), இங்கிலாந்து...

ஒலிம்பிக் அரங்கில் மீண்டும் இந்தியா

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (ஐ.ஒ.ஏ.,)விதிக்கப்பட்டிருந்த தடையை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.,) நீக்கியுள்ளது. இதனால், 14 மாதத்திற்கு பின், இந்தியா மீண்டும் ஒலிம்பிக் அரங்கிற்கு திரும்பியுள்ளது.  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஒ.சி.,) புதிய விதிகளின்படி தேர்தல் நடத்த முன்வராத, இந்திய ஒலிம்பிக் சங்கம்(ஐ.ஒ.ஏ.,) , கடந்த 2012, டிச., 4ல் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 9ம் தேதி, புதிய விதியின் படி, ஐ.ஓ.ஏ., தேர்தல்...

இந்தியாவை காவு வாங்கிய தவறான தீர்ப்பு

ஆக்லாந்து டெஸ்டில் அம்பயர்களின் தவறான தீர்ப்பு, இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. முக்கியமான கட்டத்தில் ரகானே, கேப்டன் தோனிக்கு தவறாக ‘அவுட்’ கொடுக்கப்பட்டதால் வெற்றி பறிபோனது.  துணிச்சலாக போராடிய ஷிகர் தவான் சதம் வீணானது. 40 ரன்களில் வென்ற நியூசிலாந்து அணி, தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ஆக்லாந்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து...

ஹர்பஜன், காம்பிருக்கு சோதனை

நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன், ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிகள் மோதும் இரானி கோப்பை போட்டி, இன்று பெங்களூருவில் துவங்குகிறது.    ரஞ்சி கோப்பை தொடர் துவங்கி (1934) 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் கடந்த 1959–60 முதல் இரானி கோப்பை போட்டி (5 நாட்கள்) நடக்கிறது. இதில், ரஞ்சி கோப்பை தொடரின் ‘நடப்பு சாம்பியன்’ மற்றும் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிகள் மோதும். இதையடுத்து, இந்த ஆண்டு பட்டம் வென்ற கர்நாடக அணி, ஹர்பஜன் சிங் தலைமையிலான ‘ரெஸ்ட்...

குளிர்கால ஒலிம்பிக் கோலாகல துவக்கம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று கோலாகலமாக துவங்கியது. ரஷ்யாவின் சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று துவங்கியது. இதில், 88 நாடுகளை சேர்ந்த 2800க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.  இதன் துவக்க விழா வண்ணமயமாக நடந்தது. ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று ரஷ்யாவின் பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.  ஆடல், பாடல், ‘லேசர் ஷோ’, வாணவேடிக்கை என நிகழ்ச்சிகள் களை...

கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது

வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தென் ஆப்பிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன்.  அங்கு முதல் தர போட்டியில் விளையாடிய நிலையில் அந்த நாட்டு அணியில் கடைப்பிடிக்கப்படும் இன ரீதியான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறி 2001–ம் ஆண்டில் இங்கிலாந்தில்...

முத்தான மூன்று கலவை கோஹ்லி

சச்சின், டிராவிட், சேவக் ஆகிய மூன்று வீரர்களின் கலவையாக இளம் விராத் கோஹ்லி உள்ளார்,’’ என, மார்டின் குரோவ் தெரிவித்தார். இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 25. நியூசிலாந்து மண்ணில் களமிறங்கிய முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதுவரை பங்கேற்ற 130 ஒருநாள் போட்டிகளில் 18 சதம், 30 அரைசதம் உட்பட மொத்தம் 5,445 ரன்கள் எடுத்துள்ளார். இவர் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ் கூறியது: இந்தியாவின்...

பாரத ரத்னா பெற்றார் சச்சின்

நாட்டின் மிக உயர்ந்த ‘பாரத ரத்னா’ விருதை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பெற்றார்.  இதன் மூலம் இளம் வயதில் இவ்விருதை பெற்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார் சச்சின்.              இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.   இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை...

20 ஓவர் போட்டியால் கிரிக்கெட்டுக்கு அழிவு

டெஸ்ட் (5 நாள்), ஒருநாள் போட்டி (50 ஓவர்) மற்றும் 20 ஓவர் போட்டி ஆகிய 3 நிலைகளில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. இதில் 3 மணி நேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள்.  பேட்ஸ் மேன்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் 20 ஓவர் போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு காணப்படுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் போட்டியால் கிரிக்கெட்டுக்கு அழிவு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய...

சலுகைகளை அனுபவிக்கும் தோனி

இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து, அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்,’’ என, பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.                    இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் போட்டிகளில் உலக கோப்பை வென்று தந்தார். 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினார். இதனால், கிரிக்கெட் உலகம் தோனியை புகழ்கிறது. இதனிடையே, சமீப...

இந்திய அணி பிந்தியது ஏன்?

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி, தொடர்ந்து செய்யும் தவறுகளால், அன்னிய மண்ணில் தோல்வி தொடர் கதையாகிறது.  நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0–4 என, இழந்தது. உலக கோப்பை தொடரில் ‘நடப்பு சாம்பியன்’, ஒருநாள் அரங்கில் ‘நம்பர்–1’ என்ற அந்தஸ்துடன் அங்கு சென்று, இப்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அன்னிய மண்ணில் தொடர்ச்சியாக 8வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. செய்த தவறுகளில்...

கிழித்து தைத்த டெய்லர் - 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வி

ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பவுலிங், பேட்டிங்கில் ஒட்டு மொத்தமாக சொதப்பிய இந்திய அணி, 87 ரன்களில் வீழ்ந்து, நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வியை பதிவு செய்தது.  ராஸ் டெய்லர் மீண்டும் சதம் அடித்து அசத்த, ஒருநாள் கோப்பையை தட்டிச் சென்றது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து சென்ற இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியின் முடிவில், இந்திய அணி, 0–3 என தொடரை இழந்தது. கடைசி...