இமாலய ஸ்கோர் எடுத்த அணிகள்


கிரிக்கெட் அரங்கில் "மெகா ஸ்கோர்' எடுத்து அணிகள் சாதனை படைத்துள்ளன. டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தினால் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணிஅணிகள் வலுவான ஸ்கோரை எடுத்துள்ளன.

முதலிடத்தில் இலங்கை

டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது. கடந்த 1997ல் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 952 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதில் ஜெயசூர்யா (340), மகானமா (225), அரவிந்த் டிசில்வா (126) ஆகியோர் அபாரமாக ஆடி வலுவான ஸ்கோருக்கு கைகொடுத்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை 2004ல் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிகபட்சமாக 7 விக்கெட்டுக்கு 705 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இப்போட்டியில் சச்சின் (241*), லட்சுமண் (178) சூப்பராக ஆடினர்.

தென் ஆப்ரிக்கா அபாரம்

ஒருநாள் போட்டியிலும் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் இலங்கை அணி முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2006ல் அம்ஸ்டெல்வீனில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. இதில் ஜெயசூர்யா 157, தில்ஷன் 117 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 2007ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டியில் சேவக் 114 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு
எதிராக 438 ரன்களை "சேஸ்' செய்து சாதித்தது.

சேவக் அதிரடி

"டுவென்டி-20' போட்டியிலும் இலங்கை அணி தான் அதிக ரன்கள் எடுத்துள்ளது. கடந்த 2007ல் கென்யாவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில் நடந்த போட்டியில் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் குவித்தது.இந்திய அணி 2007ல் டர்பனில் நடந்தஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில்4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்து 3வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் சேவக் அதிரடியாக 68 ரன்கள் எடுத்தார்.

0 comments:

Post a Comment