கோப்பையின் எடை 7.5 கி.கி.,



இங்கிலாந்தில் இன்று துவங்கும் இரண்டாவது "டுவென்டி-20' உலககோப்பை தொடரில், சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி 7.5 கி.கி., எடையுள்ள கோப்பையை வெல்ல உள்ளது. இக்கோப்பை 51 செ.மீ., நீளம் உடையது. இதன் மேற்பகுதி 19 செ.மீ., அகலமும், அடிப்பகுதி 14 செ.மீ., அகலமும் கொண்டது. வெள்ளி மற்றும் பிளாட்டினத்தால் உருவான இக்கோப்பையை, ஆஸ்திரேலியா தயார் செய்துள்ளது. கடந்த 2007 ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த முதல் உலககோப்பை தொடரின் கோப்பை 12.5 கி.கி., எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. இக்கோப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
இளம் மற்றும் சீனியர் வீரர்கள்

இந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் மொத்த அணிகளின் சார்பில் சுமார் 180 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமெர் இளம் வீரராகவும், இலங்கையின் ஜெயசூர்யா மூத்த வீரராகவும் இருக்கிறார்.

பாகிஸ்தான் வீரர் முகமது ஆமெர் இன்னும் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் இவர் களமிறங்கும் போது ஆமெர் 17 வயது, 55 நாட்கள் ஆகியிருக்கும். வரும் ஜூன் 8ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு 39 வயது, 343 நாட்கள். இரண்டாவது முறையாக "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இவர் தான் மிக அதிக வயதான வீரர். கேப்டன்களில் அயர்லாந்தின் போர்டர் பீல்டு தான் (24 வயது, 275 நாட்கள்) இளவயது கேப்டன். நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜெரோயன் ஸ்மித் (36 வயது, 349 நாட்கள்) தான் இந்த தொடரில் பங்கேற்கும் கேப்டன்களில் வயதான கேப்டன்.

"ஹேப்பி பர்த்டே'

இங்கிலாந்தில் இன்று முதல் அடுத்து வரும் 17 நாட்களுக்கு ஐ.சி.சி., சார்பில் "டுவென்டி-20' உலக கோப்பை போட்டி நடக்கிறது. இந்த 17 நாட்களில் வெவ்வேறு அணிகளின் 9 வீரர்கள் தங்கள் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளில் தலா இரு வீரர்களும், தென் ஆப்ரிக்கா சார்பில் ஒரு வீரரும் பிறந்த நாள் கொண்டாட உள்ளனர். வங்கதேசத்தின் ஷம்ஷர் ரஹ்மான், தொடரின் துவக்க நாளிலும், நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜெரோன் ஸ்மிட்ஸ் தொடரில் கடைசி வீரராகவும் பிறந்த நாள் கொண்டாடுவர். 12 அணிகளின் கேப்டன்களில் பிறந்த நாள் கொண்டாட உள்ள ஒரே கேப்டன் இவர் தான். இதில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்த நாள் கொண்டாட உள்ள வீரர்களின் விபரம்:

ஷம்ஷர் ரஹ்மான் (வங்க தேசம்), அப்துர் ரஜாக் (வங்கதேசம்), டேவிட் பிராசர் வாட் (ஸ்காட்லாந்து), தீவால்டு நெல் (ஸ்காட்லாந்து), சைமண்ட்ஸ் (ஆஸி.,), ஷேன் வாட்சன் (ஆஸி.,), ரூடு நிஜ் மான் (நெதர்லாந்து), ஜெரோன் ஸ்மிட்ஸ் (நெதர்லாந்து), ஆல்பி மார்கல் (தெ.ஆ.,)

இளம் மற்றும் சீனியர் வீரர்கள்

இந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் மொத்த அணிகளின் சார்பில் சுமார் 180 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமெர் இளம் வீரராகவும், இலங்கையின் ஜெயசூர்யா மூத்த வீரராகவும் இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் முகமது ஆமெர் இன்னும் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் இவர் களமிறங்கும் போது ஆமெர் 17 வயது, 55 நாட்கள் ஆகியிருக்கும். வரும் ஜூன் 8ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு 39 வயது, 343 நாட்கள். இரண்டாவது முறையாக "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இவர் தான் மிக அதிக வயதான வீரர்.

கேப்டன்களில் அயர்லாந்தின் போர்டர் பீல்டு தான் (24 வயது, 275 நாட்கள்) இளவயது கேப்டன். நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜெரோயன் ஸ்மித் (36 வயது, 349 நாட்கள்) தான் இந்த தொடரில் பங்கேற்கும் கேப்டன்களில் வயதான கேப்டன்.

வேதனையான சாதனை

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக முறை "டக்-அவுட்டாகி' ஏமாற்றியவர்கள் வரிசையில் ஒயுமா (கென்யா), போலக் (தென் ஆப்ரிக்கா), நஜிமுதின் (வங்கதேசம்), ஜெயசூர்யா (இலங்கை), மாஸ்கரன்ஹாஸ் (இங்கிலாந்து), லுக் ரைட் (இங்கிலாந்து) ஆகியோர் தலா 2 முறை டக்-அவுட்டாகியுள்ளனர். இந்தியா சார்பில் தினேஷ் கார்த்திக், கவுதம் காம்பிர், ராபின் உத்தப்பா ஆகியோர் தலா ஒரு முறை டக்-அவுட்டாகி ஏமாற்றியுள்ளனர்.

கெய்ல் - ஸ்மித் அபாரம்

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல்-டேவன் ஸ்மித் ஜோடி முதலிடம் வகிக்கிறது. இந்த ஜோடி கடந்த 2007ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்தது. இதுவே எந்த ஒரு விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும். இந்தியாவின் சேவக், காம்பிர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 136 ரன்கள் சேர்த்துள்ளது.

கென்யா சோகம்

இதுவரை நடந்துள்ள "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்சில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணியாக கென்யா அணி உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 16.5 ஓவரில் 73 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது இடத்தில் வங்கதேசம் அணி (15.5 ஓவர், 83/10, எதிர்-இலங்கை) உள்ளது.

ஹைடன் அசத்தல்

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஹைடன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 6 போட்டியில் விளையாடியுள்ள இவர், 4 அரைசதம் உட்பட 265 ரன்கள் குவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் காம்பிர் (227), மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் மிஸ்பா (218) உள்ளனர்.

முதல் ஓவரில் 2 விக்கெட்

"டுவென்டி-20' சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் டேரன் மட்டி, தனது முதல் ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 2007 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது டேரனை முதன் முதலாக பந்துவீச அழைத்தார் கேப்டன் கோலிங்வுட். டேரன் வீசிய இந்த ஓவரின் 2வது பந்தில் மெக்மிலனும், 4வது பந்தில் ஓரமும் அவுட்டாகினர்.

7881 ரன்கள்

தென் ஆப்ரிக்காவில் நடந்த முதல் "டுவென்டி-20' உலககோப்பை தொடரில், 12 அணிகள் மோதின. இத்தொடரில் மொத்தம் 7881 ரன்கள் எடுக்கப்பட்டன. இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 1000 ரன்கள் குவித்து சாதனை படைத்தன. அதிகபட்சமாக பாகிஸ்தான் 1106 ரன்களை குவித்து முதலிடத்தை பெற்றது. இரண்டாவது இடத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 1037 ரன்களை பதிவு செய்தது.

டிவிலியர்ஸ் கலக்கல்

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக "கேட்ச்' பிடித்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 6 "கேட்ச்' பிடித்துள்ளனர். இந்தியா சார்பில் தினேஷ் கார்த்திக், ஹர்பஜன் சிங் இருவரும் அதிகபட்சமாக தலா 3 "கேட்ச்' பிடித்துள்ளனர்.

கில்கிறிஸ்ட் அபாரம்

"டுவென்டி-20' உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்ச் சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் வரிசையில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டியில் 9 "கேட்ச்' பிடித்து விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இவரை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவின் பவுச்சர், வங்கதேசத்தின் முஸ்பிகுர் ரகிம் இருவரும் தலா 7 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளனர். இந்தியா சார்பில் தினேஷ் கார்த்திக் (2), கேப்டன் தோனி (1) விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளனர்.

0 comments:

Post a Comment