ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் ஆகஸ்ட் 6 முதல் 14-ம்தேதி வரை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் இந்தியக் குழுவில் தமிழகத்திலிருந்து ஜெ. அக்னீஸ்வர், ஜெயவந்த் விஜயகுமார் (இருவரும் சென்னை), சந்தீப் (நெய்வேலி) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 8 நாள் நடைபெறும் போட்டியில் சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்த்த 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்திய அணி: சிறுவர்: ஜெ. அக்னீஸ்வர், ஜெயவந்த் விஜயகுமார், சந்தீப் ஜேஜ்வால், வீர்தவால் காடே, ரோஹன் போஞ்சா, ஷிப்நாத் நாஸ்கர், பல்கீத் குமார், சந்தீப், பிரஜ்வால், ஆரோன் டிசோசா,...