டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக சேவக் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது. முதலில் கேப்டன் மாற்றப்பட உள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் சேவக் இடையிலான "ஈகோ' பிரச்னைக்கு முடிவு காணலாம். கேப்டன்...