சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் தெண்டுல்கர், டிராவிட்10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் செப்டம்பர் 21-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த போட்டிக்கு, ஐ.பி.எல். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 

ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தெண்டுல்கரை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுமாறு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேட்டு இருந்தது. 

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தெண்டுல்கர் பெயர் இடம் பெற்றுள்ளது. 

இதேபோல் இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியுடன் விடைபெறுவதாக தெரிவித்து இருந்த டிராவிட்டின் பெயர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கிறது. 

இதனால் இருவரும் இந்த போட்டியில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment