இந்தியா- வெ.,இண்டீஸ் தொடர் - அக்., 31ல் துவக்கம்இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ல் துவங்குகிறது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சதத்தில் சதம் உள்ளிட்ட ஏராளமான சாதனை புரிந்துள்ளார். 

தற்போது 198 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இவர், தனது 200வது போட்டியை சொந்த மண்ணில் விளையாட, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வழிவகை செய்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியாவில் பங்கேற்க அழைத்தது. இதன்படி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி துவங்குகிறது. 

தவிர, 3 பயிற்சி போட்டியும் உள்ளன. மொத்தம் 4 வாரங்கள் இத்தொடர் நடக்கிறது. 

போட்டி நடக்கும் இடங்களை தேர்வு செய்யும் சுழற்சி முறைப்படி, குஜராத்தின் ஆமதாபாத்தில்தான் சச்சின் தனது 200வது டெஸ்ட்டில் விளையாட வேண்டும். 

ஆனால், இதை நடத்த மும்பை, கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் போட்டியிடுகின்றன. 

பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,"" இத்தொடருக்கான தேதி, மைதானம் போன்றவை விரைவில் வெளியிடப்படும்,'' என்றார். 

0 comments:

Post a Comment