
சிட்னி மைதானத்தில் நடக்கும் நூறாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் சச்சின், நூறாவது சதத்தை எட்டுவார் என, அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ல் சிட்னியில் துவங்குகிறது. இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட் என்ற பெருமை பெறுகிறது. இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன்...