முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சச்சின், ஹர்பஜன், காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் (ஆக.,10-28) இலங்கையில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று மும்பையில் நடந்தது. இதில் அனுபவ வீரர்களான சச்சின், ஹர்பஜன் மற்றும் முழங்கால் பகுதியில் காயமடைந்த காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.மீண்டும் யுவராஜ்: மோசமான "பார்ம்' காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்ட...