மீண்டும் யுவராஜ் சிங் - ஆஸி., தொடருக்கு தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யுவராஜ் சிங், மீண்டும் இடம் பிடித்தார்.  இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒரே ஒரு சர்வதேச "டுவென்டி-20' மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் 10ல் ராஜ்கோட்டில் துவங்குகிறது.  ஒரு "டுவென்டி-20', மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு சென்னையில் இன்று அறிவித்தது.  இதில்,...

தோனி,சச்சினை முந்தும் கோஹ்லி

விளம்பர வருமானத்தில் தோனி, சச்சினை முந்தினார் இளம் வீரர் விராத் கோஹ்லி. இவர், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனி நிறுவனத்துடன் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது. இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 25. கடந்த 2008ல் இந்திய அணிக்கு 19 வயது உலக கோப்பை வென்று தந்தார். இவரது சிறப்பான பேட்டிங் தொடர, மிக விரைவில் துணைக் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அசத்திய கோஹ்லி, ஒருநாள்...

இளம் இந்தியா ஹாட்ரிக் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில், ஷிரேயாஸ் ஐயர் சதம் அடித்து கைகொடுக்க, இளம் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில், "டக்-வொர்த் லீவிஸ்' முறைப்படி "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன. முதலிரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே,...

8 வயதில் 5 விக்கெட்

கங்கா லீக் தொடரில் குறைந்த வயதில் (8), 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தார் முஷீர் கான். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் (எம்.சி.ஏ.,), 1948 முதல் நடத்தப்படுகிறது கங்கா லீக் கிரிக்கெட் தொடர் (19 வயது).  இந்த ஆண்டு, 8 வயதில் ஸ்போர்ட்ஸ்பீல்டு கிரிக்கெட் கிளப் அணிக்காக களமிறங்கினார் முஷீர் கான்.  இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், கத்தோலிக் ஜிம்கானா அணிக்கு எதிரான போட்டியில் 18 ஓவரில் 78 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.  65...

தல தோனியின் புதிய அவதாரம்

தோனியின் புதிய "ஹேர்-ஸ்டைல்' ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அணி கேப்டன் தோனி, 32. "ஹெலிகாப்டர் ஷாட்' உட்பட பல புதிய முறைகளை பேட்டிங்கில் அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பெக்காம் போல "ஹேர் ஸ்டைலையும்' அடிக்கடி மாற்றுவார்.  கடந்த 2004ல் அறிமுகம் ஆன போது கழுத்து வரை கூந்தல் வைத்திருந்தார். இதனை அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் பாராட்டினார். பின் "கிராப்' வெட்டிய தோனி, 2011ல் உலக கோப்பை வென்ற...

ஐதராபாத் அணி போட்டியை பிக்சிங் செய்தேன் - சூதாட்ட தரகர் தகவல்

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீசார் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்தனர்.  இதில் சந்திரேஷ் ஷிவ்லால் பட்டேல் என்ற சூதாட்ட தரகர் பெயர் இடம் பெற்றுள்ளது. இவரை டெல்லி போலீசாரும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் கைது செய்து இருந்தனர். கடந்த ஜூன் 17–ந் தேதி சூதாட்ட தரகர் சந்திரரேஷ் பட்டேல் மும்பை போலீசிடம் வாக்கமூலம் அளித்து இருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஐதராபாத் அணி போட்டியை நானும், சில சூதாட்ட தரகர்களும்...

யூரோ 2020 கோப்பையை நடத்த பல நாடுகள் விருப்பம்

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யுஈஎப்ஏ அதன் உறுப்பு நாடுகளான 54ல் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.  பாரம்பரியமாக இந்தப் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளால் நடத்தப்படும். ஆனால், 2020 ஆம் ஆண்டுப் போட்டிகள் ஐரோப்பாவின் 13 நாடுகளில் பகிர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கால்பந்துப் போட்டித் தொடரின் 60 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதால் போட்டி...

அசத்துமா சென்னை கிங்ஸ் - இன்று டைட்டன்ஸ் அணியுடன் மோதல்

சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் இன்று டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் தோனி, முதல் வெற்றியை பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன.  "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள தோனியின் சென்னை அணி, தென் ஆப்ரிக்காவின்...

யாருக்கு கோப்பை? சாதிக்குமா சென்னை அணி?

உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் அசத்திய அணிகள் மோதும், சாம்பியன்ஸ் லீக் தொடர் அதிரடியாக ஆரம்பமாகிறது. இதில் மும்பை, சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் கோப்பை வெல்ல களத்தில் குதித்துள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20'தொடரை நடத்துகின்றன.  இதில் இந்தியாவில் இருந்து பிரிமியர் தொடர் சாம்பியன் மும்பை, இரண்டு மற்றும் 3வது இடம் பெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான்...

சச்சினை சந்திக்க ஆசை - கேப்டன் டிராவிட்

சச்சின் பெரிய வீரர். சாம்பியன்ஸ் லீக் தொடரில் இவர் பங்கேற்கும் மும்பை அணியை, அரையிறுதியில் சந்திக்க ஆசையாக உள்ளது,'' என, ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் தெரிவித்தார்.  ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர், இந்தியாவில் நாளை துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 அணிகளுடன், தகுதி சுற்றில் இருந்து முன்னேறிய ஐதராபாத், ஒடாகோ அணிகளும் விளையாடுகின்றன.  ஜெய்ப்பூரில் நடக்கும் முதல் போட்டியில், டிராவிட்டின் ராஜஸ்தான்...

200-வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கர் ஓய்வு பெற நிர்ப்பந்தமா?

இந்திய கிரிக்கெட் அணியின் இதயம் போன்றவர் சச்சின் தெண்டுல்கர். சாதனை படைக்கவே பிறந்தவரான தெண்டுல்கரின் சாதனை பட்டியல் அனுமாரின் வாலையும் மிஞ்சும் எனலாம். தனது சாதனை சரித்திரத்தில் தெண்டுல்கர் மேலும் ஒரு மகுடத்தை சேர்க்க இருக்கிறார்.  40 வயதான தெண்டுல்கர், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், டெஸ்ட் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஒவ்வொரு தொடரின் போது தனது உடல் தகுதியை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி...

வெற்றி தேடித் தந்தார் தவான்

தவான் அதிரடி அரைசதம் கைகொடுக்க, ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கண்டுரட்டா மரூன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது. ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் 21ல் துவங்குகிறது.  இதற்கு முன் மொகாலியில் நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் ஐதராபாத் (இந்தியா), கண்டுரட்டா மரூன்ஸ் (இலங்கை) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் தவான், "பீல்டிங்' தேர்வு செய்தார்.  கண்டுரட்டா...

சாம்பியன்ஸ் லீக் தொடருடன் விடைபெறும் சச்சின், டிராவிட்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெறுகின்றனர். இதற்கு பின் கிரிக்கெட் களத்தில் இவர்களை வண்ண சீருடையில் காண இயலாது.  ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் செப்., 21ல் துவங்குகிறது. இந்தியா சார்பில் பிரிமியர் தொடர் "நடப்பு சாம்பியன்' மும்பை, சென்னை, ராஜஸ்தான், ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட...

மிடில் ஆர்டரில் களம் இறங்க சேவாக் விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிரடி வீரராக திகழ்பவர் சேவாக். அவர் சமீபகாலமாக சரியாக விளையாடததால் கிரிக்கெட் வாரியம் அவரை ஒதுக்கி வருகிறது.  இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நடுத்தர வரிசையில் விளையாட விருப்பம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2-வது மற்றும் 3-வது 4-நாள் போட்டிக்கான இந்திய 'ஏ' அணியில் சேவாக்...

பாகிஸ்தான் அணிக்கு அவமானம்

பரபரப்பான இரண்டாவது டெஸ்டில், "பேட்டிங்கில்' சொதப்பிய பாகிஸ்தான் அணி, "கத்துக்குட்டி' ஜிம்பாப்வே அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.  ஜிம்பாப்வே சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகித்தது.  இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 294, பாகிஸ்தான் 230 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில்...

மோட்டார் பைக்கை தனிதனியாக பிரித்த கேப்டன் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மோட்டார் பைக் ஆர்வலர். அதிநவீன மோட்டார் சைக்கிளில் செல்வது அவருக்கு பிடித்தமான ஒன்றாகும். இந்த நிலையில் முதல் முறையாக தான் வாங்கிய மோட்டார் பைக்கை டோனி தனித்தனியாக பிரித்து எடுத்துள்ளார். இதை அவர் தனது டூவிட்டரில் படத்துடன் வெளியிட்டுள்ளார்.  ‘யமஹா ராஜ்தூத்’ என்ற பழைய மோட்டார் சைக்கிளை அவர் தனித்தனி பாகங்களாக பிரித்து எடுத்துள்ளார். இந்த பைக்கை ரூ.4,500 கொடுத்து வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளார்...

சாம்பியன்களுக்கு புது சோதனை

யு.எஸ்., ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் நடால், அமெரிக்காவின் செரினா ஆகியோர் தங்களது பரிசுத்தொகையில் பாதியை வரியாக செலுத்த வேண்டியுள்ளது.  நியூயார்க்கில் "கிராண்ட்ஸ்லாம்' தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில், ஸ்பெயினின் ரபெல் நடால், உலகின் "நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.  இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்,...

சாம்பியன்ஸ் லீக் தொடரில் சிக்கல்

வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க, இந்தியா வர இருந்த, பாகிஸ்தான் உள்ளூர் அணிக்கு அனுமதி கிடைக்கவில்லை.  ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் செப்., 21ல் துவங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து மும்பை, சென்னை, ராஜஸ்தான் என, மூன்று அணிகள் பங்கேற்கவுள்ளன.  தவிர, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக...

நேபாள கிரிக்கெட்டில் சேவக் படத்தால் கிளம்பிய சர்ச்சை

நேபாள கிரிக்கெட் சங்க (சி.ஏ.என்.,) ஆண்டு விழா மலரின் அட்டைப்படத்தில் சேவக் படத்தை வெளியிட்டது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சி.ஏ.என்., சார்பில் இந்த ஆண்டுக்கான மலர் வெளியிடப்பட்டது. இதில் வெளியான படங்கள் குறித்து நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் அக்கறை செலுத்தவில்லை.  இதன் காரணமாக அட்டை படத்திலேயே தவறு நடந்தது. நேபாள அணியின் சீருடையில் இந்திய வீரர் சேவக்கின் "ஆக்ஷன்' படம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.  இதில் சேவக் முகம் லேசாக...

இந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்

பொழுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடர், பாலிவுட் நடிகை வித்யா பாலன் போன்றது,'' என, இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி விமர்சித்தார். பிரிமியர் லீக் "டுவென்டி-20' தொடரில் சூதாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பஞ்சமில்லை. இதனால், பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறுகையில்,"" டெஸ்ட் போட்டிதான் நமது பாரம்பரியம். இதனை காப்பாற்ற ஆர்வம் கொள்வதில்லை.  இதை நினைக்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. பொழுபோக்கிற்கு...

டோக்கியோ நகரில் 2020 ஒலிம்பிக் போட்டி

ஜப்பான் தலைநகர் டோக்கியோ வரும் 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது. ஐ.ஓ.சி.,யின் ஓட்டெடுப்பின் மூலம் இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) பொதுக்குழு கூட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில் நடக்கிறது. இதில், 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் இடத்திற்கான தேர்வு நடைபெற்றது.  இதற்கு ஜப்பானின் டோக்கியோ, துருக்கியின் இஸ்தான்புல், ஸ்பெயினின் மாட்ரிட் ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையே...

சச்சினுக்கு கங்குலி ஆதரவு

சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, அவரது சொந்த மண்ணான மும்பையில் நடத்துவது தான், அவருக்கு மரியாதை செலுத்துவது போல இருக்கும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார்.  இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதனை படைத்தார். இதுவரை 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார்.  இவர், சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில்,...

இந்தியா- வெ.,இண்டீஸ் தொடர் - அக்., 31ல் துவக்கம்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ல் துவங்குகிறது. இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சதத்தில் சதம் உள்ளிட்ட ஏராளமான சாதனை புரிந்துள்ளார்.  தற்போது 198 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இவர், தனது 200வது போட்டியை சொந்த மண்ணில் விளையாட, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வழிவகை செய்துள்ளது.  வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியாவில் பங்கேற்க அழைத்தது. இதன்படி, 2 டெஸ்ட், 3 ஒரு...

களிமண் கதாநாயகனுக்கு மவுசு

அமெரிக்காவில் நடக்கும் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில், நடால் தான் கோப்பை வெல்வார் என, ஏராளமானோர் பந்தயம் கட்டுகின்றனர். ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரபெல் நடால், 27. களிமண் கள நாயகன். இவருக்கு பிடித்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், 2005-2008, 2010-2013 என 8 முறை கோப்பை வென்றுள்ளார்.  ஆஸ்திரேலிய ஓபன் (2009), விம்பிள்டன் (2008, 2010) மற்றும் யு.எஸ்., ஓபனிலும் (2010) நான்கு பட்டம் கைப்பற்றினார். முழங்கால் காயம் காரணமாக ஏழு மாதமாக டென்னிசில் விலகியிருந்த நடால், பிப். மாதம் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பினார். அப்போது முதல்...

ஓய்வு பெறும் முடிவில் அவசரப்படவில்லை - தெண்டுல்கர்

கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.  இதுவரை 198 டெஸ்டில் விளையாடி உள்ள தெண்டுல்கள் 200–வது டெஸ்டோடு ஒய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.  அதற்கு ஏற்றவாறு 200–வது டெஸ்ட் போட்டி இந்திய மண்ணில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது.  வெஸ்ட்...

இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்

அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 55 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று அறிவித்தது. கோல்கட்டாவில் நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டத்தில், அடுத்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.  இதனையடுத்து இத்தொடருக்கான...