தொடர்ந்து தோற்கும் இந்திய அணிக்கு பாராட்டு

இங்கிலாந்தில் தற்போது தொடர்ந்து தோற்றாலும், உலககோப்பையை வென்றதற்காக இந்திய அணிக்கு, இந்திய- பிரிட்டிஷ் பார்லிமென்ட் குழு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சமீபத்தில் நடந்த உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணி, கோப்பை வென்று சாதித்தது.

இதை கவுரவிக்கும் விதமாக இந்திய- பிரிட்டிஷ் பார்லிமென்ட் குழு சார்பில் லண்டனில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது, லண்டனின் முன்னாள் வெளியுறவு செயலாளர் மிலிபான்ட், இந்திய அணி கேப்டன் தோனிக்கு "கிறிஸ்டல்' கோப்பையை வழங்கினார். மேலும் அணியின் மற்ற வீரர்களுக்கும் தனது பாராட்டினை தெரிவித்தார்.

இந்திய அணியை பாராட்டி மிலிபான்ட் கூறியது:

இந்திய அணி செயல்பாடுகள் எங்களை கவரும் விதமாகவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் இருந்தது. இவர்களின் உலககோப்பை வெற்றி எங்களை பிரமிக்க செய்தது. தற்போது, நீங்கள் உலககோப்பை வென்ற அணியாக உள்ளீர்கள்.

நாங்கள் டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' என்ற அந்தஸ்தை பெற்ற அணியாக இருக்கிறோம். சச்சின் வலது கால் வீக்கத்தினால் அவதிப்பட்டு வருகிறார்.

விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார். காய பாதிப்பு காரணமாக தான் இந்திய அணி டெஸ்ட் தொடரை 0 - 4 என இழந்தது. இவர்கள் விளையாடுவதை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்.

நிறைய இளம் இங்கிலாந்து வீரர்கள் தோனியை தனது "ரோல் மாடலாக' கொண்டுள்ளனர்.
இவ்வாறு மிலிபான்ட் கூறினார்.

0 comments:

Post a Comment