சர்வதேச கிரிக்கெட் அரங்கில், அதிக வெற்றிகளை ருசித்த பெருமை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை சேரும். இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகள் கண்ட வீரர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறார்.
இலங்கை சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சமீபத்தில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இது, ரிக்கி பாண்டிங் பெற்ற 100வது டெஸ்ட் வெற்றி. இவர், இதுவரை 153 டெஸ்டில் (12,411 ரன்கள், 39 சதம், 56 அரைசதம்) விளையாடியுள்ளார்.
இதில் 100 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில், அதிக வெற்றிகளை கண்ட வீரர்கள் வரிசையில் பாண்டிங் முன்னிலை வகிக்கிறார். இந்த 100 வெற்றியில், 48ல் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் 28 சதம், 36 அரைசதம் <உட்பட 8375 ரன்கள் எடுத்துள்ளார்.
தவிர இவ்வரிசையில் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. "டாப்-10' வரிசையில், எட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியா சார்பில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், அதிகபட்சமாக 61 வெற்றியை ருசித்துள்ளார். இவர், 13வது இடத்தில் உள்ளார்.
அதிக டெஸ்ட் வெற்றி கண்டவர்கள் பட்டியலில் "டாப்-5' வீரர்கள்:
வீரர் போட்டி வெற்றி
பாண்டிங் (ஆஸி.,) 153 100
வார்ன் (ஆஸி.,) 145 92
ஸ்டீவ் வாக் (ஆஸி.,) 168 86
மெக்ராத் (ஆஸி.,) 124 84
கில்கிறிஸ்ட் (ஆஸி.,) 96 73
ஒருநாள் முதல்வன்:
ஒருநாள் போட்டி அரங்கிலும் அதிக வெற்றிகள் கண்ட வீரர்கள் வரிசையில் பாண்டிங் முன்னிலை வகிக்கிறார். இவர், இதுவரை 367 ஒருநாள் போட்டியில் (13,602 ரன்கள், 30 சதம், 81 அரைசதம்) விளையாடியுள்ளார்.
இதில் 257 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இவரை தொடர்ந்து இலங்கையின் ஜெயசூர்யா (233 வெற்றி, 445 போட்டி), இந்தியாவின் சச்சின் (230 வெற்றி, 453 போட்டி), பாகிஸ்தானின் இன்சமாம் (215 வெற்றி, 378 போட்டி), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (202 வெற்றி, 287 போட்டி), இலங்கையின் முரளிதரன் (202 வெற்றி, 350 போட்டி) ஆகியோர் "டாப்-5' வரிசையில் உள்ளனர்.
pakirvukku vaalththukkal
ReplyDelete