தென் ஆப்ரிக்க அணியில் கெய்ல்

தென் ஆப்ரிக்காவின் உள்ளூர் அணியான டால்பின்ஸ் அணியில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ் கெய்ல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த "ஆல்-ரவுண்டர்' கிறிஸ் கெய்ல் (31 வயது). இவர், இதுவரை 91 டெஸ்ட் (6373 ரன்கள், 72 விக்.,), 228 ஒருநாள் (8087 ரன்கள், 156 விக்.,), 20 சர்வதேச "டுவென்டி-20' (617 ரன்கள், 12 விக்.,) போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முதல் மூன்று ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இவர், நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இவரை தென் ஆப்ரிக்காவின் உள்ளூர் அணியான டால்பின்ஸ் அணி புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக இவர், விரைவில் தென் ஆப்ரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளார்.

0 comments:

Post a Comment