இங்கிலாந்து போர்டிடம் முறையிட முடிவு

வர்ணனையாளர் நாசர் ஹுசைன் கருத்து குறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டிடம் (இ.சி.பி.,) முறையிட பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.

"டுவென்டி-20 போட்டியில், பீட்டர்சன் அடித்த பந்தை பிடிக்காமல் விட்ட பார்த்திவ் படேலின் செயல்குறித்து, இங்கிலாந்தின் நாசர் ஹுசைன் கூறுகையில்,"" சில இந்திய வீரர்கள் "கழுதைகள் போல மந்தமாக செயல்படுகின்றனர், என்றார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா கூறியது:

வர்ணனையாளர்களாக இருப்பவர்கள் குறிப்பிட்ட சிலவற்றை குறித்து பேசும் போது, மிகவும் கவனமாக இருக்கவேண்டும். சில கருத்துக்கள் போட்டிக்கு முற்றிலும் தொடர்பு இல்லாமல் உள்ளது.

இவற்றை வெளியிடுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். நாசர் ஹுசைன் விவகாரம் குறித்து, இ.சி.பி.,யிடம் முறையிட பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம்.

இவ்வாறு ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.

0 comments:

Post a Comment