மீண்டும் அசத்துமா கோல்கட்டா அணி

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்று கோல்கட்டா நைட் ரைடர்ஸ், வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இமாலய வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை கோல்கட்டா அணி தக்க வைத்துக் கொள்ள முடியும்.மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று பெங்களூருவில் நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா அணி, வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.காம்பிர் நம்பிக்கை:லீக் சுற்றில் கடைசி போட்டியில் பங்கேற்கும் கோல்கட்டா அணி, இதுவரை ஒரு வெற்றியுடன்...

கனவு இல்லத்தில் குடியேறினார் சச்சின்

மும்பையில் தனது சொந்த வீட்டில் குடியேறினார் சச்சின். 5 மாடிகள் கொண்ட இந்த சொகுசு மாளிகையில் விநாயர் கோயில், நீச்சல் குளம், "மினி-தியேட்டர்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர், விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார். கடந்த 2007ல் ரூ. 39 கோடிக்கு மும்பை புறநகர்ப் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோட்டில் பழைய மாளிகை ஒன்றை வாங்கினார். 6 ஆயிரம் சதுர...

சேவக் மீது கிராம மக்கள் புகார்

சர்வதேச பள்ளியை துவக்கிய சேவக் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஒப்பந்தப்படி இவர், கிரிக்கெட் பயிற்சி அகாடமியை அமைக்கவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். இவர், அரியானாவில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி அமைக்க திட்டமிட்டுள்ளார். இதனை ஏற்று ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சிலானி கே÷ஷா கிராம மக்கள், மிக குறைந்த விலைக்கு(ஒரு ஏக்கர் ரூ. 3 லட்சம்) 23 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியுள்ளனர். இங்கு...

சச்சின் தந்த உற்சாகம் - ஹர்பஜன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தந்த உற்சாகம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, என, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த, மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இத்தொடரில் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின் விளையாடவில்லை....

அக்தரால் எப்போதும் தொல்லை தான்

அக்தர் அணியில் விளையாடிய போதும் சரி, ஓய்வு பெற்ற பின்பும் சரி, அப்போதும், இப்போதும் இவரால் தொல்லை தான்,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பவுலர் சோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், "கான்ட்ரவர்சியலி யுவர்ஸ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், டிராவிட் உள்ளிட்ட பல சர்வதேச வீரர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.இதற்கு...

அக்தரை கண்டு பயந்தாராம் சச்சின்

எனது வேகப்பந்து வீச்சை கண்டு சச்சின் பயந்தார். சச்சினும், டிராவிட்டும் வெற்றி நாயகர்கள் அல்ல,''என, தனது சுயசரிதையில் குறிப்பிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார் சோயப் அக்தர்.பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பவுலர் அக்தர். சமீபத்திய உலக கோப்பை தொடருடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், "கான்ட்ரவர்சியலி யுவர்ஸ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வழக்கமாக சுயசரிதை எழுதும் வீரர்கள் எதாவது பிரச்னைக்குரிய செய்தியை வெளியிட்டு, விளம்பரம் தேடுவார்கள்....

சச்சினுக்கு டிராவிட் ஆதரவு

ஒருநாள் போட்டிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற சச்சினின் கருத்துக்கு, இந்திய அணியின் "சீனியர்' வீரர் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகள் தொடர்ந்து பிரபலமாக நீடிக்க, பல புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) தெரிவித்து இருந்தார். இதற்கு ஐ.சி.சி., சார்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து டிராவிட் கூறியது: ஒருநாள் போட்டிகளை நான்கு இன்னிங்சாக...

இந்திய அணியின் கெட்ட கனவு

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடர், இந்திய அணியின் கெட்ட கனவு,'' என, தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட் (0-4), "டுவென்டி-20' (0-1), ஒருநாள் (0-3) தொடரை மோசமாக இழந்தது. இதன்மூலம் ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை இழந்தது.இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது: பி.சி.சி.ஐ., க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு பின்,...

ஒருநாள் போட்டியில் மாற்றங்கள்

ஒருநாள் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்க, பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டுமென இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் வலியுறுத்தியுள்ளார். "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துள்ளது. இதையடுத்து புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என ஐ.சி.சி.,க்கு சச்சின் கடிதம் எழுதியுள்ளார்.இதில் அவர் கூறியிருப்பதாவது:டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, மூன்று வகையான கிரிக்கெட்டையும், சிறப்பான வகையில்...

கொச்சி அணி அதிரடி நீக்கம்

விதிகளை மீறிய கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல்., அணிகளின் எண்ணிக்கை ஒன்பதாக குறைந்தது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பில் கடந்த ஆண்டு சேர்ந்தது கொச்சி டஸ்கர்ஸ் கேரளா. ரூ. 1,550 கோடிக்கு வாங்கப்பட்டது கொச்சி அணி, இத்தொகையை 10 ஆண்டுகளில் செலுத்த வேண்டும் என்பது விதி. இதற்காக ஒவ்வோரு ஆண்டும் ரூ. 153 கோடி செலுத்த வேண்டும். இதனிடையே கொச்சி அணி துவக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்னைகளில்...

சச்சினுக்கு பிடித்த ஷாட்

கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த "ஷாட்' என்றால், அது பவுலர்களுக்கு நேராக அடிக்கும் "ஸ்டிரெய்ட் டிரைவ்' தான் என, '' சச்சின் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சமீபத்திய இங்கிலாந்து தொடரில் சர்வதேச அளவில் தனது 100வது சதம் அடிக்க தவறினார். இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்தார். இது குறித்து சச்சின் அளித்த பேட்டி:இங்கிலாந்து தொடரில் ஒட்டுமொத்த வீரர்களின் செயல்பாட்டை பார்க்க வேண்டும். தனிப்பட்ட ஒரு நபரை மட்டும் கவனிக்க கூடாது....

சாம்பியன்ஸ் லீக்: சச்சின் பங்கேற்பாரா?

கால் விரலில் காயமடைந்துள்ள இந்திய வீரர் சச்சின், சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் வரும் செப்., 23 முதல் அக்., 9 வரை நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நாளை துவங்குகின்றன.  இதில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.  மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின், ஏற்கனவே பெருவிரல் காயத்தால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இவர், இத்தொடரில் பங்கேற்பது...

இந்தியா மீண்டும் ஏமாற்றம்

ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி அசத்தல் சதம் அடிக்க, இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.  இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில், இங்கிலாந்து அணி 2-0 என ஏற்கனவே தொடரை வென்றது.  முக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது ஒரு நாள் போட்டி நேற்று கார்டிப்பில் நடந்தது. இந்திய அணி ஆறுதல் வெற்றி தேடி களமிறங்கியது. "டாஸ் வென்ற இங்கிலாந்து...

2012ல் இந்தியா-பாக்., மோதல்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அட்டவணைப்படி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையில், 2012 தொடர் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறது. கடந்த 2008ல் மும்பை, பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், 2009 ஜனவரியில் பாகிஸ்தான் செல்ல இருந்த தனது பயணத்தை, இந்திய கிரிக்கெட் அணி ரத்து செய்தது.  இதன் பின், இரு அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. உலக கோப்பை போன்ற தொடர்களில் மட்டும் மோதின. இந்நிலையில் இரு அணிகள் இடையே மீண்டும் கிரிக்கெட் உறவை...

சாம்பியன்ஸ் லீக்: காம்பிர் நீக்கம்

காயம் காரணமாக, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் தகுதிச் சுற்றில் விளையாடமாட்டார்.இந்தியாவில், மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடக்கிறது. இதில், உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாதித்த 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியஸ் உள்ளிட்ட 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.தகுதிச் சுற்று:மீதமுள்ள...

புதிய சர்ச்சையில் இந்திய அணி

லண்டனில் நடந்த ஐ.சி.சி., விருது வழங்கும் விழாவை இந்திய அணி வீரர்கள் அதிரடியாக புறக்கணித்தனர். அழைப்பிதழ் தாமதமாக கிடைத்ததாக வீரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  பி.சி.சி.ஐ.,க்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பிவிட்டதாக ஐ.சி.சி., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால், புதிய சர்ச்சை வெடித்துள்ளது.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோருக்கான...