உலக கோப்பை வெல்லுமா இந்திய அணி?

இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும், பவுலிங் பலவீனமாக உள்ளது. இதில், முன்னேற்றம் ஏற்படாவிட்டால் உலக கோப்பையை மீண்டும் வெல்வது கடினம்,'' என, அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார். இந்தியாவில் 1996ல் நடந்த உலக கோப்பை தொடரில், அர்ஜூனா ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி கோப்பை வென்றது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரணதுங்கா, இந்திய அணியின் உலக கோப்பை வாய்ப்பு குறித்து கூறியது: நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் ரோகித் சர்மா சிறப்பானவர்....

சாதனை நோக்கி காலிஸ்

சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத்தில் உள்ளார்.  தற்போது 164 டெஸ்டில், 44 சதம் அடித்துள்ள தென் ஆப்ரிக்காவின் காலிஸ், இன்னும் 7 சதம் அடிக்கும் பட்சத்தில் சச்சின் சத சாதனையை சமன் செய்யலாம். இது குறித்து காலிஸ் அளித்த பேட்டி: * சச்சின் ஓய்வு குறித்து?  கிரிக்கெட்டில் அதிக ஆண்டுகள் கொடிகட்டி பறந்த சிறந்த வீரர்களில் சச்சினும் ஒருவர். ஓய்வு...

இந்தியா - தென் ஆப்ரிக்கா தொடரில் மாற்றம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின், இரண்டு போட்டிகளின் நேரத்தை, கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா (சி.எஸ்.ஏ.,) மாற்றம் செய்துள்ளது.  தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  ஜோகனஸ்பர்க்கில் நடக்கும் முதல் ஒருநாள், செஞ்சூரியனில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள், இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடர் துவங்கும்...

தவான் அசத்தல் சதம் - தொடரை வென்றது இந்தியா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தவான் அதிரடியாக சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று, சமநிலையில் உள்ளது.  மூன்றாவது போட்டி கான்பூரில் நடந்தது. இதில் "டாஸ்' வென்ற இந்திய...

ஆல் ரவுண்டரில் அஸ்வின் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்டிங் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.  இந்திய வீரர்கள் புஜாரா 6–வது இடத்திலும், விராட்கோலி 20–வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் முதல் இடத்தில் தொடருகிறார்.  இந்திய வீரர்கள் அஸ்வின் 5–வது இடத்திலும், பிரக்யான் ஓஜா 9–வது இடத்திலும் இருக்கின்றனர். ஜாகீர்கான் 20–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆல்–ரவுண்டர்கள் வரிசையில்...

இந்திய அணியில் மீண்டும் ஜாகிர் - காம்பிருக்கு நோ

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.  இதில், நீண்ட நாட்களாக போராடிய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் இடம் பிடித்தார். துவக்க வீரர் காம்பிர் புறக்கணிக்கப்பட்டார்.  தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் போட்டிகள் ஜோகனஸ்பர்க் (டிச.5), டர்பன் (டிச.8), செஞ்சூரியன் (டிச.11) ஆகிய இடங்களில் நடக்கிறது.  இதை தொடர்ந்து டெஸ்ட்...

சச்சின் உருவம் பொறித்த தங்க நாணயம் விற்பனை

சச்சின் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் சில்லறை விற்பனைக்கு வரவுள்ளன. இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெற்றார்.  மத்திய அரசு தன்பங்கிற்கு நாட்டின் உயரிய "பாரத ரத்னா' விருது அறிவித்து கவுரவித்தது. இதனிடையே, பெங்களூருவை சேர்ந்த நகை விற்பனை நிறுவனம் ஒன்று சச்சின் உருவத்துடன் கூடிய தங்க நாணயங்களை சில்லரை விற்பனைக்காக வெளியிட திட்டமிட்டுள்ளது....

எதிரியா சச்சின் - மனம் திறக்கிறார் காம்ப்ளி

கடந்த 7 ஆண்டுகளாக என்னை சச்சின் தொடர்பு கொள்ளவில்லை. நண்பர்களாக இருந்த நாங்கள் தற்போது எதிரிகளாக மாறிவிட்டது போல உள்ளது,''என, வினோத் காம்ப்ளி தெரிவித்தார். இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது பள்ளித் தோழன் வினோத் காம்ப்ளி. இவர்கள் இருவரும் ஷிரதாஸ்ரம் வித்யா மந்திர் பள்ளியில் படித்தனர்.  அப்போது நடந்த (1988) பள்ளிகளுக்கு இடையிலான ஹாரிஸ் ஷீல்டு தொடரில், சேவியர் பள்ளிக்கு...

கிரிக்கெட் என்றாலே சச்சின் தான்

உலக கிரிக்கெட்டில் "சதத்தில்' சதம் அடித்து சாதித்தவர் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின்.  தனது 200வது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.  இதுகுறித்து சச்சினின் சக வீரர்கள், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் அளித்த பேட்டி: * சச்சினின் கடைசி டெஸ்டில் பங்கேற்று, அவருடன் "டிரசிங்' ரூமில் இருக்கும் அனுபவம் உங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டதே? யுவராஜ்: இது மிகப்பெரிய ஏமாற்றம்...

கோஹ்லி விளாசல் - இந்திய அணி வெற்றி

கொச்சியில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் கோஹ்லி 86 ரன்கள் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றம் அடைந்தது.  இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் இன்று நடந்தது.  இதில் "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டுவைன் பிராவோ முதலில் "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் வினய்...

இந்திய அணி தேர்வாளர்களுக்கு தடை

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய அணியினருடன் செல்ல, தேர்வுக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது. பொதுவாக இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் போது, நிர்வாகிகள், அணித் தேர்வாளர்கள் உடன் செல்வதுண்டு. ஆனால், இவர்களுக்கு எவ்வித வேலையும் கிடையாது.  இதனிடையே, இந்திய அணி மூன்று ஒருநாள் (டிச., 5, 8, 11), இரண்டு டெஸ்ட் (டிச., 18-22, டிச., 26-30) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, விரைவில் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளது.  அப்போது,...

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதே - சச்சின் உணர்ச்சிவசம்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின். மும்பையில் பங்கேற்ற தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் வெற்றியுடன் கிளம்பினார்.  இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சதத்தில் "சதம்' அடித்து சாதித்தவர். 463 ஒருநாள் (18,426 ரன்கள்), ஒரு "டுவென்டி-20' (10 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்ற சச்சின், தனது 200வது டெஸ்ட் (15,921 ரன்கள்) போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு...

சரியான நேரத்தில் ஓய்வு - சச்சின் உருக்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெற்றேன்,'' என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தெரிவித்தார். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான சாதனை படைத்த இவர், தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார். நேற்று மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சச்சின் அளித்த பேட்டி:  மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாததது, எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இது என்ய கனவு பயணம். கிரிக்கெட்டை...

வாழ்த்து மழையில் பாரத ரத்னா சச்சின்

நாட்டின் மிக உயர்ந்த "பாரத ரத்னா' விருது சச்சினுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெறுகிறார். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக விளையாடி வந்த இவர், சர்வதேச போட்டிகளில் 100 சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தவர்.  கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் பங்கேற்ற தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்...

கடைசி டெஸ்டில் களம் கண்டார் சச்சின்

சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் களம் கண்டார். பேட்டிங்கில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.  இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் சச்சினின்...

5,000 டிக்கெட்டுக்கு 1.9 கோடி பேர் போட்டி

சச்சின் பங்கேற்கும் 200வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள், 15 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது.  இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டாவில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என, தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இது சச்சினின் 200வது டெஸ்ட். இத்துடன் கிரிக்கெட்டில் இருந்து சச்சின்...

சச்சின் பங்கேற்கும் 200வது டெஸ்ட் போட்டியில் சர்ச்சை

சச்சின் பங்கேற்கும் 200வது டெஸ்ட் போட்டிக்கு, ரசிகர்களுக்கு வெறும் 5000 டிக்கெட் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டாவில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என, தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் நவ., 14ல் மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இது சச்சினின் 200வது டெஸ்ட் . இப்போட்டியுடன் கிரிக்கெட்டில்...

மும்பை கான்திவிலி மைதானத்திற்கு சச்சின் பெயர்

கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகள் படைத்த சச்சின் தனது 200-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியின் முடிவில், சச்சினுக்கு பிரமாண்ட பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சச்சன் டெண்டுல்கரை கவுரவப்படுத்தி சிறப்பிக்கும் வகையில் மும்பையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.  மும்பை...

இந்திய அணிக்கு ஸ்பான்சர் யார்?

இந்திய அணிக்கு புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்ய, ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' சகாரா நிறுவனம் கடந்த 2001, ஜூன் 2ல் ரூ. 4723 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  கடந்த 11 ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பயிற்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் "சகாரா' பெயர் கொண்ட "ஜெர்சி' இல்லாமல் பார்க்கவே முடியாது.  பின், 2008ல் பிரிமியர் தொடர் துவங்கப்பட்ட போது, ஒரு அணியை வாங்க முயற்சித்தது சகாரா. ஆனால், பல்வேறு...

இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டி

2018–ம் ஆண்டுக்கான 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த உரிமம் கேட்டு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. இதில் ஆண்கள் உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு ஆக்கி இந்தியா அனுமதி கோரி இருந்தது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.  உலக கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி இங்கிலாந்தில் ஜூலை...

ஐ.சி.சி. டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் டெஸ்ட் ஆல்ரவுடண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், முதலிடத்திற்கு முன்னேறினார்.  ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய அஸ்வின், 124 ரன்கள் குவித்ததுடன், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.  இதனால் அவர் 81 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். வங்கதேச வீரர் சாகிப் அல் அசன், தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக்கஸ் காலிஸ் ஆகியோர்...

ரோகித் மாற்றத்திற்கு காரணம்

மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபின்தான், ரோகித்தின் ஆட்டத்தில் மாற்றம் உண்டானது,'' என, இந்திய அணி ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கோல்கட்டா டெஸ்டில் இந்தியாவின் ரோகித் அறிமுக போட்டியில் சதம் விளாசினார். அணியின் முன்னிலைக்கு கைகொடுத்த இவர் குறித்து கவாஸ்கர் கூறியது:  இந்த ஆண்டு ரோகித்துக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த பிரிமியர் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டார். இதன் பின்தான்,...

நடுவரின் தவறான முடிவு - தெண்டுல்கரின் அவுட் டில் சர்ச்சை

தெண்டுல்கர் பேட்டிங் செய்ய மைதானத்துக்கு நடந்து வந்துபோது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பினர். ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை கைதட்டி வரவேற்றனர். 199–வது டெஸ்டில் விளையாடும் அவர் தான் சந்தித்த 3–வது ஓவரில் 2 பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தெண்டுல்கர் 10 ரன்னில் இருந்தபோது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.  ஆனால் அவரது அவுட் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெலிவிசன்...

பந்தை பார்த்தாலே பயம் - டுபிளசி

பந்தை நான் சேதப்படுத்தவில்லை. மக்கள் மோசடிக்காரன் என சொல்வதை கேட்டால் வருத்தமாக உள்ளது,'' என, தென் ஆப்ரிக்காவின் டுபிளசி தெரிவித்தார். துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், தென் ஆப்ரிக்க வீரர் டுபிளசி, பந்தை பேன்ட் ஜிப்பின் மீது தேய்த்து சேதப்படுத்தியதாக அம்பயர்கள் புகார் கூறினர்.  இதற்கு, டுபிளசிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.  இது குறித்து டுபிளசி கூறியது: நான் ஒரு நேர்மையான...

ரோகித் சர்மா - சாதனை வீரராக புதிய அவதாரம்

இந்திய கிரிக்கெட்டின் புதிய "ஹீரோ'வாக உருவெடுத்திருக்கிறார் ரோகித் சர்மா. ஏழாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இவர், அதிக சிக்சர் உட்பட பல சாதனைகளை படைத்து அசத்தினார்.  இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஏழாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது.  முதலில் "பேட்' செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா இரட்டை சதம் (209) அடித்து கைகொடுக்க, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு...

கோல்கட்டாவில் சச்சின் திருவிழா

சச்சினின் 199வது டெஸ்ட் போட்டிக்காக கோல்கட்டாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மும்பையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன்(நவ. 14-18) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.  இதற்கு முன்னதாக கோல்கட்டாவில் தனது 199வது டெஸ்டில்(நவ. 6- 10) பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில்...

வாட்சன் சாதனையை முறியடித்தார் ரோகித்

ஒரு நாள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 16 சிக்சர்கள் அடித்து வாண வேடிக்கை நிகழ்த்தினார். இந்த 16 சிக்சர்கள் மூலம் அவர் வாட்சனின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தார். 2011–ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஹார்னே வாட்சன், வங்காள தேசத்துக்கு எதிராக 15 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதை ரோகித் சர்மா முந்தினார். ரோகித் சர்மா அதிகபட்சமாக...

இக்கட்டான நிலையில் இஷாந்த்

ஒரு ஓவரில் இஷாந்த் சர்மாவின் நிலை தலைகீழாக மாறிவிட்டது. முன்னணி பந்துவீச்சாளராக இருந்த இவர், அணியில் இருந்து தூக்கி எறியப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 25. கடந்த 2007ல் தனது 19 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். துவக்கத்தில் பவுன்சருடன் கூடிய, 145 கி.மீ., வேகத்தால் வீரர்களை மிரட்டினார்.  முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை, சொல்லி வைத்தது போல அவுட்டாக்கி விடுவார். இப்போது...