ரோகித் ஷர்மா, புஜாராவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை



இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா, புஜாரா இருவரும் சமீபத்தில் ஊடகத்துக்கு (மீடியா) பேட்டி அளித்தனர். முத்தரப்பு தொடரில் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய அனுபவத்தை ரோகித் ஷர்மா பகிர்ந்து கொண்டார். 

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து புஜாரா மனம் திறந்தார். 

ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை மீறி இருவரும் பேட்டி அளித்துள்ளதாக கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், 

‘தொடர் முடிந்ததும் உடனடியாக மீடியாக்களிடம் பேசக்கூடாது என்று அவர்கள் இருவரும் எச்சரிக்கப்பட்டனர். கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த விதிமுறைகள் அவர்களுக்கு சுட்டிக்காட்டி, அதற்குட்பட்டு நடக்கும்படி கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அறிவுறுத்தினார்’ என்றார். 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் மொத்தம் 39 வீரர்கள் இடம் வகிக்கிறார்கள். இவர்கள், குறிப்பிட்ட ஒரு தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பும், அந்த தொடர் முடிந்து ஒரு மாதத்திற்கு பின்பும் எந்த காரணத்தை கொண்டும் மீடியாக்களிடம் பேசக் கூடாது என்று ஒப்பந்த விதியில் கூறப்பட்டுள்ளது. 

மீடியாக்களிடம் பேச தடை விதிக்கும், கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்திய முன்னாள் வீரர்கள் கீர்த்தி ஆசாத், சந்து போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment