விமானப்படையில் இருந்து சச்சின் விடுவிப்பு



இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 40. சதத்தில் சதம் அடித்து சாதித்தவர். 

இந்தியாவுக்கு கிரிக்கெட் மூலம் பெருமை சேர்த்த சச்சினுக்கு, 2010ல் (செப்., 3) இந்திய விமானப் படை (ஐ.ஏ.எப்.,) சார்பில், கவுரவ "குரூப் கேப்டன்' அந்தஸ்து வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் இருந்து, இவ்விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் சச்சின். விமானப்படைக்கு தொடர்பில்லாத ஒருவர் இந்த அந்தஸ்து பெற்றது இது தான் முதன் முறை. 

இதன் மூலம், இளம் தலைமுறையை ராணுவத்தில் சேர ஊக்குவிக்க முடியும் என, ஐ.ஏ.எப்., நம்பியது. ஆனால், திடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. விமானப்படை தூதர் பொறுப்பில் இருந்து சச்சினை விடுவித்துள்ளனர்.

காரணம் என்ன:

சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து பங்கேற்கும் இவர், இதிலிருந்தும் விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் தான், சச்சினை விடுவித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

0 comments:

Post a Comment