இக்கட்டான நிலைமையில் கிரிக்கெட் வாரியம்

ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) விசாரணை குழு சட்ட விரோதமானது என்று மும்பை ஐகோர்ட்டு நேற்று அதிரடியாக அறிவித்தது. புதிய குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டது.  இது பி.சி.சி.ஐ.க்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவர் டால்மியாவிடம் இதுகுறித்து கேட்டபோது, எனக்கு இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை. இதனால் அதுபற்றி கூற இயலாது. ஆனால் கிரிக்கெட் வாரியம் தற்போது இக்கட்டான நிலைமையில் இருக்கிறது என்றார்...

ஒருநாள் போட்டியில் புதிய விதிமுறையால் ரன் குவிப்பது கடினம்

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் சதம் (116 ரன்) அடித்து முத்திரை பதித்தார். இந்த ஆண்டில் அவர் 3 சதம் அடித்து முன்னிலையில் உள்ளார்.  இதேபோல ஒருநாள் போட்டி ரன் குவிப்பிலும் (637 ரன்) அவர் முதலிடத்தில் உள்ளார்.  இந்த நிலையில் புதிய விதிமுறைகளால் ஒருநாள் போட்டியில் ரன்களை குவிப்பது கடினம் என்று தவான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-  ஒருநாள் போட்டியின் புதிய...

இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம்

இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது,'' என, முன்னாள் வீரர் சந்து போர்டே தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்து போர்டே, 79. இதுவரை 55 டெஸ்ட் (3061 ரன், 52 விக்.,) போட்டியில் விளையாடினார். இந்திய கிரிக்கெட் குறித்து சந்து போர்டே கூறியது:  இந்தியாவில் திறமையான இளம் வீரர்கள் நிறைய இருப்பதால், வரும் காலத்தில், இரண்டு தேசிய அணிகளை தேர்வு செய்யலாம். தற்போதுள்ள நிலையில், இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி...

அதிவேகமாக 15 சதங்கள் எடுத்த வீரர்

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 115 ரன்கள் குவித்த இந்திய தற்காலிக கேப்டன் விராட் கோலிக்கு இது 15-வது சதமாகும். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 15 சதங்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர் தனது 15-வது சதத்தை 106-வது ஆட்டத்தில் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் சயீத் அன்வர் தனது 143-வது போட்டியில் 15-வது சதம் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. சவுரவ் கங்குலி 144-வது ஆட்டத்திலும், கிறிஸ் கெய்ல் 147-வது ஆட்டத்திலும் இந்த இலக்கை எட்டினார்கள். இந்திய சாதனை சிகரம்...

தோனி இருப்பதால் பொறாமை

சென்னை அணியில் தோனி இருப்பதால்தான், அணியை பார்த்து பொறாமைப்படுகின்றனர்,'' என, பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் சீனிவாசன் தெரிவித்தார். ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோர் சூதாட்ட புகாரில் சிறை சென்றனர்.  தவிர, இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் (பி.சி.சி.ஐ.,) சீனிவாசன் மருமகன் மெய்யப்பன் மீதும் சூதாட்ட புகார் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து,...

தவான் அசத்தல் சதம் : இந்திய அணி வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தவான் சதம், உனத்கத் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இருஅணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடந்தது.  இதில் "டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் பிரண்டன் டெய்லர், முதலில் "பீல்டிங்'...

ஆஸ்திரேலிய அணி இன்னும் 2 ஆண்டுக்கு திணறும்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 2 டெஸ்டிலும் தோற்றதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.  ஆஸ்திரேலிய அணியின் நிலைமை அடுத்த 2 ஆண்டுக்கு இது மாதிரியே இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-  இங்கிலாந்தின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும் 2 ஆண்டுக்கு ஆஸ்திரேலியா இது மாதிரியே திணறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளே இதற்கு காரணம்.  1980-ம் ஆண்டு இருந்த...

ஜிம்பாப்வேயை பந்தாடியது இந்தியா

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.  முதல் ஒருநாள் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிபந்தா, சிக்கந்தர் ரஷா சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர்.  34 ரன்கள்...

நாளை இந்தியா ஜிம்பாப்வே முதல் மோதல்

ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, ஜிம்பாப்வே சென்றடைந்தது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி நாளை ஹராரேயில் நடக்கிறது. இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட் இண்டீசில் முத்தரப்பு ஒருநாள் கோப்பை வென்றது இந்திய அணி.  அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்க இளம் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வே சென்றது. இந்த அணியில் கேப்டன் தோனி, அஷ்வின், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் உள்ளிட்ட...

கோப்பை வெல்வாரா கோஹ்லி? ஜிம்பாப்வே புறப்பட்டது இந்தியா

ஒருநாள் தொடரில் பங்கேற்கும் விராத் கோஹ்லி தலைமையிலான இளம் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வே புறப்பட்டது.  சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்பு தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. அடுத்து, ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.  இதற்காக, கோஹ்லி தலைமையிலான அணியினர் நேற்று, மும்பையில் இருந்து ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றனர். தோனி, அஷ்வின், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர், உமேஷ் யாதவ் உள்ளிட்ட...

ரவிந்திர ஜடேஜா விலை மதிப்புமிக்க வீரர் - கபில்தேவ்

இந்திய கிரிக் கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:– இந்திய அணியில் தற்போது விலை மதிப்பு மிக்க வீரராக ரவிந்திர ஜடேஜா இருக்கிறார். அவரது வருகைக்கு பிறகு அணியில் மிகுந்த வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்தாக ஜடேஜா உள்ளார். தனது பேட்டிங், பவுலிங் மற்றும் துல்லியமான பீல்டிங்கினால் அவர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் ஆல்ரவுண்டராக திகழ்கிறார். தனது திறமையின் மூலம் அவர் அணிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். ஷேவாக், யுவராஜ்சிங்,...

இந்திய அணி கேப்டன் தோனிக்கு ஓய்வு தேவையா?

தோனிக்கு சற்று ஓய்வு தரப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி வெற்றி பெறுமா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2007ல் தோனி தலைமையில் இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்றது. அடுத்து ஒருநாள், 2008ல் டெஸ்ட் அணி என, மூன்றுவித அணிக்கும் கேப்டன் ஆனார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான போட்டிகளில், இவர் தான் கேப்டன். முக்கியத்துவம் இல்லாத தொடர்களில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தோனிக்கு ஓய்வு கொடுத்து விடுகிறது. முதல்...

ரோகித் ஷர்மா, புஜாராவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா, புஜாரா இருவரும் சமீபத்தில் ஊடகத்துக்கு (மீடியா) பேட்டி அளித்தனர். முத்தரப்பு தொடரில் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய அனுபவத்தை ரோகித் ஷர்மா பகிர்ந்து கொண்டார்.  ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து புஜாரா மனம் திறந்தார்.  ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை மீறி இருவரும் பேட்டி அளித்துள்ளதாக கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளது. இது...

புள்ளி விவரங்கள் சச்சினுக்கு சாதகம் - பாண்டிங் புலம்பல்

அணியின் வெற்றிக்கு சச்சினை விட, லாராதான் அதிகம் கைகொடுத்தார் என்ற பாண்டிங்கின் கருத்து தவறானது. இதனை, புள்ளி விவரங்கள் தெளிவாக நிரூபிக்கின்றன.  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆஸ்திரேலியாவின் ஓய்வு பெற்ற பாண்டிங் இடையே, எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும்.  டெஸ்டில் சச்சினின் அதிக சத (51) சாதனையை துரத்தியவர். ஒரு கட்டத்தில் சச்சின் தொடர்ந்து விளாச, பாண்டிங்கினால் இவரை எட்ட முடியவில்லை....

விமானப்படையில் இருந்து சச்சின் விடுவிப்பு

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 40. சதத்தில் சதம் அடித்து சாதித்தவர்.  இந்தியாவுக்கு கிரிக்கெட் மூலம் பெருமை சேர்த்த சச்சினுக்கு, 2010ல் (செப்., 3) இந்திய விமானப் படை (ஐ.ஏ.எப்.,) சார்பில், கவுரவ "குரூப் கேப்டன்' அந்தஸ்து வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் இருந்து, இவ்விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் சச்சின். விமானப்படைக்கு தொடர்பில்லாத ஒருவர் இந்த அந்தஸ்து பெற்றது இது தான் முதன் முறை.  இதன் மூலம்,...

DRS முறைக்கு மூடுவிழா

விரைவில் "டி.ஆர்.எஸ்.,' முறைக்கு மூடுவிழா நடத்தப்படலாம்,'' என, முன்னாள் சர்வதேச அம்பயர் பொமி ஜமுலா தெரிவித்தார். அம்பயர்கள் முடிவை தொழில் நுட்பம் மூலம் மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்.,) முறைக்கு, துவக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில இம்முறை பயன்படுத்தப்படுவதில்லை.  சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில், களத்தில் இருந்த அம்பயர்கள் வழங்கிய 13 முடிவுகளில், 8 தீர்ப்புகள்...

200வது டெஸ்டில் 100 அடிப்பாரா சச்சின்

தென் ஆப்ரிக்க தொடரில் 200வது டெஸ்டில் பங்கேற்கவுள்ள சச்சின், சதம் (100) அடித்து அசத்த வேண்டும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம் தெரிவித்தார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 40. இதுவரை, 198 டெஸ்ட் (51 சதம்), 463 ஒருநாள் போட்டிகளில் (49 சதம்) பங்கேற்று, சதத்தில் "சதம்' அடித்து சாதித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர், டெஸ்ட் போட்டிகளில் தொடர்கிறார்.  டிச.26ல் துவங்கும் மூன்று...

தோனி வழியில் விஜய்

இந்திய கேப்டன் தோனி போல, அணியை திறம்பட வழிநடத்த வேண்டும்,'' என, விஜய் ஜோல் விருப்பம் தெரிவித்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற, 19 வயதுக்குட்பட்டோருக்கான "இளம்' இந்திய அணி, பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பை வென்றது. இத்தொடரில் பேட்டிங்கில் அசத்திய இந்திய கேப்டன் விஜய் ஜோல், தொடர் நாயகன் விருது வென்றார். இதுகுறித்து விஜய் ஜோல் கூறியது: சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு மெய்சிலிர்க்க வைத்தது.  குறிப்பாக பைனலில், கேப்டன் தோனியின் செயல்பாடு அருமையாக இருந்தது....

முத்தரப்பு தொடரில் சூதாட்டம் - 5 பேர் கைது

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு தொடரின் பைனல் தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.  வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு தொடரின் பைனலில் இந்திய அணி, இலங்கையை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பை வென்றது.  இந்தப்போட்டியின்போது, டில்லியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது.  இதனையடுத்து, லாலித், நிதின், பவான், மோகித், ஜிதேந்தர் உள்ளிட்ட 5 பேரை கைது...

கேப்டன் தோனி - நினைத்ததை முடிப்பவன்

இலங்கைக்கு எதிரான உலக கோப்பை பைனலில்(2011, 50 ஓவர்) இலங்கைக்கு எதிராக சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கேப்டன் தோனி.  இதே போல முத்தரப்பு பைனலிலும் சிக்சர் அடித்து கோப்பை பெற்று தந்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், போட்டியை வெற்றியுடன் முடிப்பதில் மிகச் சிறந்த வீரராக திகழ்கிறார் இந்திய அணியின் கேப்டன் தோனி.  2007ல் "டுவென்டி-20', 2011ல் <உலக கோப்பை, இம்முறை சாம்பியன்ஸ் டிராபி என, மூன்று வித கோப்பை...

ரேங்கிங்: இந்தியா நம்பர்-1

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில், "உலக சாம்பியன்' இந்திய அணி "நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டது.  சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இதன்மூலம் நேற்று வெளியிடப்பட்ட ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112 புள்ளி), தென்...

கில்லி யின் புதிய அவதாரம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் (செல்லமாக "கில்லி'), 41. இதுவரை 96 டெஸ்ட் (5570 ரன்கள்), 287 ஒருநாள் (9619 ரன்கள்), 13 சர்வதேச "டுவென்டி-20' (272 ரன்கள்) போட்டிகளில் விளையாடிய இவர், 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.  பிரிமியர் கிரிக்கெட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்ட இவர், 2009ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கோப்பை வென்று தந்தார். கில்கிறிஸ்டை, ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் "டிவி' சேனலான "நெட்வொர்க் டென்' நிறுவனம், வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்துள்ளது.  இதனையடுத்து...

புவனேஷ்வர் குமார் அசத்தல்

இலங்கை அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் பைனலில் இந்தியாவின் புவனேஷ்வர் வேகத்தில் அசத்தினார். வெஸ்ட் இண்டீசில் முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனல் இன்று நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.  காயத்திலிருந்து மீண்ட தோனி அணிக்கு திரும்பினயார். இந்திய அணியில் உமேஷ், முரளி விஜய் நீக்கப்பட்டு, வினய் குமார் இடம்பிடித்தார். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார்.  புவனேஷ்வர் அபாரம்: இலங்கை அணிக்கு தரங்கா, ஜெயவர்தனா ஜோடி துவக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் வேகத்தில் தரங்கா (11) வெளியேறினார்.  இஷாந்த்...

தென் ஆப்ரிக்கா தொடர் - பி.சி.சி.ஐ., எதிர்ப்பு

இந்திய அணி பங்கேற்கும் போட்டி அட்டவணையை, தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் வெளியிட்ட தென் ஆப்ரிக்காவுக்கு, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது.  வரும் நவம்பர் முதல் 2014 ஜனவரி வரை (60 நாட்கள்) தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, இரண்டு "டுவென்டி-20', ஏழு ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.  இதுகுறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் இந்தியா வந்த தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) நிர்வாகிகள்,...

டெஸ்ட் ரேங்கிங்கில் இந்தியா முன்னேற்றம்

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.  டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. இதில் இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி (112) மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.  இந்திய அணி (116 புள்ளி) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இப்பட்டியலில், தென் ஆப்ரிக்கா (135) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய (105), பாகிஸ்தான் (102), வெஸ்ட் இண்டீஸ் (99) ஆகிய அணிகள் முறையே நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடத்தை பிடித்தன.  ஆஸ்திரேலியாவுக்கு...

தோனிக்கு கேக் தெரபி

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் பயணத்தின் போது தொடைப் பகுதியில் காயம் அடைந்த இவர், ஓய்வில் உள்ளார்.  இவர் நேற்று முன்தினம் போர்ட் ஆப் ஸ்பெயினில் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார்.  இதற்கான "பார்ட்டியில்' பங்கேற்ற டுவைன் பிராவோ உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், தோனியின் முகம் முழுவதும் பிறந்தநாள் "கேக்கை' பூசி மகிழ்ந்தனர். இது குறித்து "டுவிட்டர்' இணையதளத்தில் தோனி வெளியிட்ட செய்தியில்,"என் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரும்பினர். "கேக்கை' தடவி என் முகத்தை மென்மையாக மாற்றிய...

பைனலுக்கு செல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?

முத்தரப்பு தொடரின் இன்றைய லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதுகின்றன.  வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்றது. இலங்கை, இந்திய அணிகள் தலா 5 புள்ளிகளுடன், பட்டியலில் அடுத்த இரு இடங்களில் உள்ளன.  இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றால் 14 புள்ளியுடன் பைனலுக்கு தகுதி பெற்றுவிடும். தோற்கும் பட்சத்தில் இலங்கை 9 புள்ளிகள் பெறும்.  அடுத்து 9ம் தேதி நடக்கும் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தினால், மூன்று அணிகளும் தலா 9 புள்ளிகள் பெறும். அப்போது "ரன்ரேட்' அடிப்படையில்...

தோனி உள்ளிட்ட 5 முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் தோனி, வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, புவேனஸ்வர் குமார், உமேஷ் யாதவ், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் வீரர் பர்வேஸ் ரசூல் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர் என்ற பெருமையை ரசூல் பெற்றுள்ளார். விராட் கோலி தலைமையில் விளையாடவுள்ள...

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்ட முதல் காஷ்மீர் வீரர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஸ் ரசூல் என்ற  கிரிக்கெட் வீரர் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஜிம்பாப்வே போட்டித் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்தியக் கிரிக்கெட் தேர்வுக் குழுவினரால் நேற்று இந்த தகவல் வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்திய அணிக்குள் நுழையும் முதல் காஷ்மீரி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.   கலவரங்களால் அலைக்கழிக்கப்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கை மூடிவைக்கும் போதெல்லாம்...