விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. கடந்த 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் இடம் பெற்றது. இதில் இங்கிலாந்து அணி, பிரான்சை வீழ்த்தி தங்கம் வென்றது.  இதன் பின் கிரிக்கெட் நீக்கப்பட்டது. கடந்த 1998 காமன்வெல்த் போட்டியில் மட்டும் கிரிக்கெட் இடம் பெற்றது.  ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளில் ஏதாவது புதிய விளையாட்டு போட்டியை சேர்க்க முயற்சிகள் நடக்கும். இந்த வரிசையில் கிரிக்கெட்டையும்...

சச்சின் சாதனையை தகர்த்தார் தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் தோனி, சச்சினின் சாதனையை தகர்த்தார்.  இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்காவது நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, கேப்டன் தோனி முதலில், லியான் பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.  அடுத்து பட்டின்சன் வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்த தோனி, 224 ரன்கள் எடுத்த போது அவரிடமே சிக்கினார். இதன் மூலம் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் சச்சினை (217 ரன்கள்) பின்தள்ளி,...

இந்தியாவின் முதலிடத்துக்கு ஆபத்து

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் "நம்பர்-1' இடத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.  இதில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, 117 புள்ளிகளுடன் "நம்பர்-2' இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த...

சச்சின் அரைசதம் - சரிவில் இருந்து மீண்டது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், சச்சின், விராத் கோஹ்லி அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.  முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. கிளார்க் (103), சிடில் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.  இரண்டாவது...

சச்சின் ஓய்வு பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும்

சச்சின் போன்ற மகத்தான வீரர்கள் ஓய்வு பெற்றால், டெஸ்ட் போட்டிகள் அழிந்து விடும்,'' என, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா தெரிவித்தார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் அடித்தவர். தற்போது நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து 1996ல் இலங்கை அணிக்கு உலக கோப்பை வென்று தந்த ரணதுங்கா கூறியது: டெஸ்ட் போட்டிகளில்...

இந்திய அணியில் சேவக்குடன் களமிறங்குவது யார்?

நாளை முதல் டெஸ்ட் துவங்கவுள்ள நிலையில், சேவக்குடன் இணைந்து இந்திய அணிக்கு துவக்கம் தருவது யார் என்பது குறித்து "சஸ்பென்ஸ்' நீடிக்கிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.  இதற்கான இந்திய வீரர்கள் நேற்று சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். காம்பிருக்குப் பதில் இந்திய அணியில் துவக்க வீரர்களாக சேர்க்கப்பட்ட...

100வது டெஸ்டில் சாதிப்பாரா ஹர்பஜன்

இந்தியா "ஏ', ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது பயிற்சி போட்டி "டிரா' ஆனது. இந்தியா "ஏ' சார்பில் "சுழலில்' சக்சேனா, துருவ் அசத்தினர். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 22ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.  இதற்கு முன், சென்னையில் நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் (மூன்று நாள்) இந்தியா "ஏ', ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.  இந்தியா "ஏ' அணி முதல் இன்னிங்சில் 451 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கு...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை வலுப்படுத்த இந்தியா உதவி

தீவிரவாதிகளுக்கு எதிரான போரால் ஆப்கானிஸ்தான் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அங்கு அமைதி திரும்பி வருகிறது. இதையடுத்து அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண கவனம் செலுத்தி வருகிறது.  இதில் ஒரு அங்கமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை பலமிக்கதாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணி உருவாக்கப்பட்டு உலக கோப்பையில் பங்கேற்றது.  அவர்கள் அனைவரும் 19 வயதைக் கடந்து விட்டதால் 20 வீரர்கள் கொண்ட...

தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை கைப்பற்றியது. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்டில் 211 ரன்னில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தது.  தற்போது கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்டில் 4 விக்கெட்டில் வென்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை வென்றது. தென்ஆப்பிரிக்க அணி தொடர்ந்து 6-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது. மேலும் தொடர்ந்து 5-வது டெஸ்டில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிமூலம் தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் புதிய சாதனை படைத்தார். டெஸ்டில் இவரது தலைமையில் 49 வெற்றி கிடைத்துள்ளது.  இதன்மூலம்...

IPL 6 - பெங்களூர் அணிக்கு முரளிகார்த்திக் ஒப்பந்தம்

6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இந்திய சுழற்பந்து வீரர் முரளி கார்த்திக் விளையாடுகிறார். புனே வாரியாஸ் அணியில் இருந்து அவர் பெங்களூர் அணிக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.  புனே அணி அடிப்படை விலையான ரூ.2.2 கோடிக்கு முரளி கார்த்திக்கை  பெங்களூர் அணிக்கு விற்றது. தமிழகத்தை சேர்ந்த முரளி கார்த்திக் முதல் 3 ஐ.பி.எல். போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடினார். 4-வது மற்றும் 5-வது ஐ.பி.எல்.லில் புனே வாரியர்ஸ் அணியில் ஆடினார். தற்போது பெங்களூர் அணிக்கு ஆட உள்ளார்...

இர்பான் பதானின் இரட்டை ஆசை

இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' இர்பான் பதான், 28. முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து விரைவாக மீண்டுள்ளார். இவர் மீண்டும் அணியில் இடம்பெற வேண்டுமென கேப்டன் தோனியே எதிர்பார்க்கிறார். இர்பான் கூறியது: பயிற்சிக்காக, பெங்களூரு வந்துள்ளேன். என் இரண்டாவது வீடாக, இந்த நகரத்தை நினைக்கிறேன். சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் காயத்தினால், பங்கேற்க முடியவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.  சிறு வயதிலேயே, குறிப்பிட்ட இலக்கோடுதான்...

ஐ.பி.எல்., தொடரில் சர்ச்சை கிளப்பிய பெண்கள்

 ஐ.பி.எல்., தொடரில் எழுந்த பெரும்பாலான சர்ச்சைகளுக்கு பெண்கள் தான் காரணமாக இருந்துள்ளனர்.  கடந்த 2008ல் முதன் முதலாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மூலம் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) துவக்கப்பட்டது. இதன் சார்பில் "டுவென்டி-20' போட்டிகள் வெற்றிகரமாக நடந்தன. இருப்பினும் முதல் தொடரில் இருந்து பெண்களால் தொல்லை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. அவற்றில் சிலவற்றை காணலாம். நடன பெண்கள்: போட்டிகளின் போது வீரர்கள் பவுண்டரி,...

காம்பீர் நீக்கத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.  இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள்  தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:-  இந்திய அணியில் இருந்து காம்பீர் நீக்கப்பட்டுள்ளார். அவரது நீக்கம் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். ஏனென்றால் ஆஸ்திரேலிய வீரர்களை எதிர்கொள்வதில் அவர் கெட்டிக்காரர்.  ஆஸ்திரேலிய...

16 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் "டுவென்டி-20' போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஆஸ்திரேலியா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் நடக்கும் இப்போட்டியில் "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் டேரன் சமி "பேட்டிங்' தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் (8) ஏமாற்றினார். அடுத்து வந்த டேரன் பிராவோ (32) ஓரளவு கைகொடுத்தார். போலார்டு...

ஹர்பஜன் சிங்-ன் அடுத்த அவதாரம்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சினிமா பட தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 32. சமீபகாலமாக "பார்ம்' இல்லாமல் தவித்து வந்த இவர், சக வீரர் அஷ்வினிடம் தன் இடத்தை பறிகொடுத்தார்.  அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். இதற்கிடையே தனது நீண்ட நாள் நண்பரான சந்தன் மதனுடன் இணைந்து சினிமா தயாரிப்பாளராகும் கனவை நிறைவேற்றவுள்ளார்.  இது...

சர்ச்சையில் சிக்கினார் பிரவீன்குமார்

கிரிக்கெட் வாரியம் சார்பில் நடந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  ஓ.என்.ஜி.சி–வருமான வரி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, ஓ.என்.ஜி.சி. அணிக்காக பிரவீன்குமார் களம் இறங்கினார்.   வருமானவரி அணி வீரர் அஜிதேஷ் ஆர்கல் பேட் செய்து கொண்டிருந்த போது, பிரவீன்குமார் ஷார்ட் பிட்ச்சாக வீசிய ஒரு பந்தை, நடுவர் நோ–பால் என்று அறிவித்தார்.  இதனால்...

ஹர்பஜன் இன், காம்பிர் அவுட்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ஹர்பஜன் சிங் மீண்டும் இடம் பிடித்தார்.  இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிப்., 22ல் சென்னையில் துவங்குகிறது.  முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை, சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு இன்று அறிவித்தது.  இதில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். சமீபகாலமாக "பார்ம்' இல்லாமல்...

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52 கோடி அபராதம்

போட்டிகள் தொடர்பான சந்தை வர்த்தக ஒழுங்குப்படுத்தும் கமிஷன், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52.24 கோடியை அபராதமாக விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘‘ஐ.பி.எல். உள்ளிட்ட லீக் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.  போட்டிக்கான அணிகளின் உரிமையாளர் உரிமம், டி.வி. ஒளிபரப்பு உரிமம், ஸ்பானர்ஷிப் ஒப்பந்தம் ஆகியவற்றை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.  பொருளாதாரத்தில் அசுர பலத்துடன் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதிக்கத்தின் காரணமாக, வேறு எந்த தகுதியான போட்டியாளர்களும் இந்த போட்டிகள் மற்றும் அதன் வர்த்தகத்தில்...

இந்தியா மீண்டும் நம்பர் 3

ஐ.சி.சி., "டுவென்டி-20' அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.  இதில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் "நம்பர்-3' இடத்தில் நீடிக்கிறது. இலங்கை (131 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (122 புள்ளி) முதலிரண்டு இடங்களை தக்கவைத்துக் கொண்டன.   பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 6வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர்...

40வது முறையாக மும்பை சாம்பியன்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை அணி 40வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. பைனலில், இன்னிங்ஸ் மற்றும் 125 ரன்கள் வித்தியாசத்தில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்தியது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை, சவுராஷ்டிரா அணிகள் விளையாடின.  முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 148 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் மும்பை அணி 6 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. ஷா அரைசதம்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல்...

100வது டெஸ்டில் விளையாட ஹர்பஜன்சிங் ஆர்வம்

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஹர்பஜன்சிங் பந்துவீச்சு திறமை குன்றியதால் அவர் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  நீண்ட இடைவேளிக்கு பிறகு ஹர்பஜன்சிங் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார்.  மும்பையில் நடந்த 2-து டெஸ்டில் மட்டும் ஆடினார். எஞ்சிய டெஸ்டில் நீக்கப்பட்டார். மும்பை டெஸ்டில் ஹர்பஜன்சிங் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதோடு 2 விக்கெட்டை...

விஸ்வரூபம் எடுப்பாரா விராத் கோஹ்லி?

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 24. சிறந்த "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேனான இவர், இதுவரை 14 டெஸ்ட் (891 ரன்கள்), 98 ஒருநாள் (4054 ரன்கள்), 20 சர்வதேச "டுவென்டி-20' (558 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.  இவருக்கு கடந்த ஆண்டு ராசியானதாக அமைந்தது. 17 ஒருநாள் போட்டியில் 5 சதம், 3 அரைசதம் உட்பட 1026 ரன்கள் எடுத்த இவர், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.  தவிர, சர்வதேச அளவில் மூன்றாவது இடம் பிடித்தார்....