
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், புதிய அவதாரம் எடுத்துள்ளார். உலக கோப்பை அணியில் இடம் பெறாத இவர் "எஸ்-36' இசைக்குழுவை துவக்கியுள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரீசாந்த். சமீபத்திய தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவருக்கு, உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் சோர்ந்து இருந்த இவர், தற்போது "எஸ்-36' என்ற இசைக்குழுவை துவக்கியுள்ளார்.
இதில் "எஸ்' என்பது ஸ்ரீசாந்த் என்பதையும், 36 என்பது இவரது ராசியான "டி-சர்ட்டையும்' குறிக்கும்....