தொடரை வென்றால் மட்டுமே 'பார்ட்டி'

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான டிராவிட் கூறுகையில், செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றோம். டர்பனில் நடந்த போட்டியில் கவுரவமான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இந்த வெற்றியை நாங்கள் பெரிதாக கொண்டாடவில்லை. கேப்டவுன் டெஸ்டிலும் வெற்றி பெற்றால்தான் எங்களுடைய பயணம் முழு வெற்றியை பெறும். அதற்காகக் காத்திருக்கிறோம். எங்களுடைய எண்ணம் எல்லாம் அந்தப் போட்டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பது தான். அதற்கு பின்னர் தான் வெற்றியை கொண்டாடு வோம் என்றா...

ஒருநாள் தொடர்: சேவக் நீக்கம்

தென் ஆப்ரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு. காயம் காரணமாக வீரர் சேவக் நீக்கப்பட்டுள்ளார்.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, வரும் ஜன.9ம் தேதி "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்கிறது. அதன்பின் அடுத்த மாதம் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடருக்கான 16...

ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள்

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் பெங்களூரில் நடக்கிறது. ஏற்கனவே 3 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடிய வீரர்களில் 12 பேர்தான் அந்தந்த அணிகளில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை, மும்பை அணியிலும் தலா 4 பேரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 பேரும், டெல்லி, பெங்களூர் அணியில் தலா ஒருவரும் நீடிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 421 வீரர் ஏலப்பட்டியலில்...

டெஸ்ட் நட்சத்திரம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ஜஸ்டின் லாங்கர். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளைக் குவிக்க இவரது சிறப்பான ஆட்டம் முக்கியப்பங்கு வகித்தது.ஜஸ்டின் லீ லாங்கர் 1970-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் பிறந்தார். இடதுகை ஆட்டக்காரரான இவர், 1993-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக களம் கண்டார். ஆரம்பத்தில் மூன்றாவது வீரராக களமிறங்கிய...

நடுவரிடம் வாக்குவாதம்: பாண்டிங்குக்கு அபராதம்

ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய வீரர் ரியான் ஹாரிஸ், பீட்டர்சனுக்கு பந்து வீசினார். அப்போது பந்து பீட்டர்சன் பேட்டில் பட்டதாகக் கூறி விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் அவுட் கேட்டார். இதையடுத்து நடுவர் அலீம் தார், மற்றொரு கள நடுவர் டோனி ஹில்லிடம் இதுகுறித்து கேட்டார். அதன்பிறகு பந்து பேட்டில் படவில்லை என்று அவர் அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரிக்கி பாண்டிங், நடுவரிடம் நீண்ட...

சிறந்த லெக் ஸ்பின்னர்

சிறந்த லெக் ஸ்பின்னராக திகழ்ந்தவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் சந்தனா.இவர் 1972-ம் ஆண்டு மே 7-ம் தேதி இலங்கையின் காலே நகரில் பிறந்தார். இவர் காலேயில் உள்ள மகிந்தா கல்லூரியில் படித்தபோது கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர். சிறந்த லெக் ஸ்பின்னர், பேட்ஸ்மேன், பீல்டர் என பன்முகத் திறன் கொண்டவராகத் திகழ்ந்தார்.1994-ம் ஆண்டு தனது 21-வது வயதில் இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்க 5 ஆண்டுகள் காத்திருக்க...

டெஸ்ட் போட்டிதான் டாப்

செஞ்சுரியன் டெஸ்டில் சச்சின் விளாசிய 50வது சதம் மற்றும் இங்கிலாந்து & ஆஸ்திரேலிய அணிகளிடையே நடக்கும் சுவாரசியமான ஆஷஸ் தொடரால் டெஸ்ட் போட்டிகளின் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயலதிகாரி ஹாரூன் லார்கட் கூறியுள்ளார். இது குறித்து துபாயில் நேற்று அவர் கூறியதாவது: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும் என்ற அச்சம் அர்த்தமற்றது. நம்பர் 1 யார் என்பதில் இந்தியா, தென் ஆப்ரிக்க...

ஐ.பி.எல்.லுடன் கை கோத்தது ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன்

ஐபிஎல் போட்டியின் 5-வது மற்றும் 6-வது சீசனில் அதிகாரப்பூர்வ விளம்பர பங்குதாரராக ஐரோப்பாவின் ஆட்டோமொபைல் துறையில் உள்ள முன்னணி நிறுவனமான வோல்க்ஸ்வேகன் ஒப்பந்தம் செய்துள்ளது.தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கூட்டத்திற்குப் பின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஜெர்மனியின் முதல் சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.வோல்க்ஸ்வேகன்...

அடுத்த சச்சின் உருவாகிறார்

சச்சின் போன்ற மகத்தான வீரர்களை உருவாக்கிய மும்பை மண்ணில் இருந்து இன்னொரு சாதனையாளராக 13 வயதான அர்மான் ஜாபர் உருவெடுத்துள்ளார். இவர் பள்ளி அளவிலான போட்டியில் 498 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.மும்பையில் கைல்ஸ் ஷீல்டு லீக் கிரிக்கெட் போட்டி(14 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. இதில், பந்த்ரா ரிஸ்வி ஸ்பிரிங்பீல்டு மற்றும் ராஜா சிவாஜி பள்ளிகள் மோதின. ஸ்பிரிங்பீல்டு பள்ளிக்காக விளையாடிய அர்மான் "சூப்பராக' பேட் செய்தார். மொத்தம் 77 பவுண்டரிகள் அடித்த...

சாதனை வீரருக்கு பாராட்டு மழை

டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்த சச்சினுக்கு பாராட்டு மழை குவிகிறது. இவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டுமென இந்திய ஒலிம்பிக் சங்க துணை தலைவர் வி.கே.மல்கோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்தது. இப்போட்டியின் 2 வது இன்னிங்சில் சச்சின் (111*) சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற...

கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின்

டெஸ்டில் 50 சதம் அடித்து புதிய வரலாறு படைத்த தெண்டுல்கருக்கு பாராட்டுகள் குவிகிறது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, பாடகி லதா மங்கேஸ்கர் ஆகியோர் தெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரதீபா பாட்டீல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெண்டுல்கரின் 50-வது சதம் வியக்கதக்கது. இந்தியர் அனைவரும் பெருமைப்பட வேண்டியது என்று கூறியுள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து...

உலககோப்பை: இந்திய உத்தேச அணி அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான, 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இணைந்து அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இத்தொடர் வரும் பிப். 19 ம் தேதி முதல் ஏப்.2 வரை நடக்க உள்ளது. இந்த முறை இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, கனடா, கென்யா, அயர்லாந்து மற்றும்...

உலக கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு வாய்ப்பு

உலக கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கும் வாய்ப்பு இருப்பதாக அப்ரிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டி20, 2 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து செல்கிறது. இந்த தொடருக்கான அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி லாகூரில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. நியூசிலாந்து தொடர் மற்றும் உலக கோப்பை குறித்து அப்ரிடி கூறியதாவது: தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் பாகிஸ்தான் அணி பலவீனமாக இருப்பதாக நினைக்க வேண்டாம். உலக கோப்பையை வெல்ல எங்களுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நியூசிலாந்து தொடர் எங்களுக்கு மிகவும்...

தப்பினார் சச்சின்

பயிற்சியின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்து, சச்சின் "ஹெல்மெட்டை' பலமாக தாக்கியது. இதில், அவர் காயமின்றி தப்பினார்.இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும், டெஸ்ட் தொடர் வரும் 16ம் தேதி துவங்குகிறது. இதில், பங்கேற்பதற்காக சில இந்திய வீரர்கள் முன்னதாகவே தென் ஆப்ரிக்கா சென்றுள்ளனர். இவர்களுக்கு கிறிஸ்டன் கடின பயிற்சிகளை அளித்து வருகிறார். நேற்று இளம் உமேஷ் யாதவ் வீசிய பந்து, சச்சினின் "ஹெல்மெட்டின்' இடது பக்கம் பலமாக தாக்கியது. உடனே யாதவ் உள்ளிட்டவர்கள் பதட்டம்...

உலகக் கோப்பையை வெல்லாமல் சச்சின் ஓய்வு பெறமாட்டார்

இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தராமல் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறமாட்டார் என்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.2011-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவார் என சிலர் கூறிவருகின்றனர். ஒருவேளை, அதில் இந்தியா கோப்பையை வெல்லாவிட்டால், உலகக் கோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும் வரை சச்சின் ஓய்வு பெறமாட்டார். அடுத்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர்...

IPL 4 - காம்பீர், யுவராஜ், டிராவிட், கங்குலி, கும்ப்ளே நீக்கம்

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடை பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் கடந்த சீசனில் விளையாடிய வீரர்களில் அதிகபட்சமாக 4 பேரை வைத்து கொள்ளலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்தது. அணிகள் வைத்துக்கொள்ளும் வீரர்களை நேற்றுக்குள் (8-ந்தேதி) முடிவு செய்ய வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது. அதன்படி...