கிரிக்கெட் ரசிகர்களுக்கு சொகுசு கப்பல்

உலக கோப்பை போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக, மிகவும் வித்தியாசமாக சொகுசு கப்பல் ஒன்றை இலங்கை கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்ய உள்ளது.

வரும் 2011ல் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில், 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்(பிப்.,19 - ஏப்.,2)நடக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 43 நாட்கள் நடக்கும் இத்தொடரின் பைனல், ஏப்., 2ல் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

புதிய மைதானம்:


உலக கோப்பை தொடருக்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டையில், சூரியவேவா என்ற பெயரில் புதிய மைதானம் கட்டப்பட்டுள்ளது. இங்கு பிப்., 20ல் நடக்கும் போட்டியில் இலங்கை, கனடா அணிகள் மோதுகின்றன. பின் பிப்., 23ல் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி, கென்யாவை எதிர்கொள்கிறது. 

இப்பகுதியில் தங்கும் வசதி அதிகம் கிடையாது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி, போட்டி நடக்கும் மைதானத்தின் அருகில் 500 முதல் 1000 பேர் தங்குவதற்கு ஏற்ற 5 நட்சத்திர வசதி கொண்ட ஓட்டல்கள் இருக்க வேண்டும்.

 இதையடுத்து ஆயிரக்கணக்கில் வரும் ரசிகர்கள் தங்குவதற்காக பிரம்மாண்ட சொகுசு கப்பல் ஒன்றை இலங்கை கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்கிறது. 

இது குறித்து உலக கோப்பை ஏற்பாடுகளை கவனிக்கும் இலங்கை அணியின் அதிகாரி சூரஜ் டாண்டெனியா கூறுகையில்,""சூர்யவேவா மைதானம் அமைந்துள்ள பகுதியில் இரண்டு அணிகள் தங்குவதற்கு மட்டுமே ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதி உள்ளது. 

எனவே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் தங்குவதற்காக சொகுசு கப்பலை வாடகைக்கு எடுக்க உள்ளோம். இதில் ரசிகர்கள் தவிர, அதிகாரிகள் மற்றும் "மீடியா'வை சேர்ந்தவர்கள் தங்கலாம்,'' என்றார்.

0 comments:

Post a Comment