அசத்தி வரும் பேட்ஸ்மேன்கள்

ஒருநாள் போட்டிகளில், இந்த ஆண்டு அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

இதுவரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகளில், ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிக ரன் சேர்த்த வீரர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறார். இவர் 15 போட்டியில் ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 584 ரன்கள் சேர்த்து முன்னிலை வகிக்கிறார். 

இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ஒயிட் (15 போட்டி, 537 ரன்), மைக்கேல் ஹசி (14 போட்டி, 513 ரன்), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (7 போட்டி, 511 ரன்), ஆஸ்திரேலியாவின் வாட்சன் (12 போட்டி, 488 ரன்), தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (6 போட்டி, 478 ரன்) ஆகியோர் உள்ளனர்.

டிவிலியர்ஸ் அதிரடி:

இவர்களில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், ஆம்லா குறைந்த போட்டிகளில் அதிக ரன் சேர்த்துள்ளனர். இதற்கு இவர்களின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணம். இதில் இந்த ஆண்டு டிவிலியர்ஸ் விளையாடிய 7 போட்டியில் 3 சதம், 2 அரைசதம் உட்பட 511 ரன் குவித்துள்ளார். 

இதன்மூலம் டிவிலியர்ஸ், இந்த ஆண்டு ஒருநாள் அரங்கில் 500 ரன்களுக்கு மேல் சேர்த்த 4வது வீரர் மற்றும் முதலாவது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர, இந்த ஆண்டு இதுவரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகளில், அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். இதேபோல ஆம்லா விளையாடிய 6 போட்டியில் 2 சதம், 2 அரைசதம் உட்பட 478 ரன் சேர்த்துள்ளார்.

கோஹ்லி நம்பிக்கை:

இந்தியா சார்பில் விராத் கோஹ்லி (10 போட்டி, 445 ரன்), சுரேஷ் ரெய்னா (10 போட்டி, 378 ரன்) அதிக ரன் சேர்த்த வீரர்கள் வரிசையில் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா ஒரு சதம் அடித்துள்ளனர். 

இருப்பினும் கேப்டன் தோனி (8 போட்டி, 287 ரன்), மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (2 போட்டி, 204 ரன்), சேவக் (5 போட்டி, 157 ரன்) உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்காதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.

0 comments:

Post a Comment