அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி மத்திய அமைப்புக்குழு கூட்டத்தின்போது ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக 1 லட்சம் டிக்கெட்டுகள் ஐசிசியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. டிக்கெட்டின் விலை மிகவும் குறைவு.
கடந்த 2007-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பையின் போது டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் பார்வையாளர்கள் இன்றி மைதானங்கள் வெறிச்சோடி காணப்பட்டதே டிக்கெட் விலை குறைப்புக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ல் தொடங்கி ஏப்ரல் 2 வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து போட்டியை நடத்துகின்றன
0 comments:
Post a Comment