உலககோப்பை கால்பந்து போட்டியில் நடுவர்களின் தவறான முடிவுகள் சில அணிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஜெர்மனிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் லேம்பர்ட் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு உள்ளே விழுந்து வந்ததை ஜெர்மனி கோல்கீப்பர் பிடித்தார்.
டெலிவிஷன் ரீப்ளேயில் அது கோலாக தெரிந்தது. ஆனால் நடுவர் அந்த கோலை ஏற்றுக் கொள்ளவில்லை. உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சர்சையாக கருதப்பட்டது. இந்த கோலை அங்கீகரித்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும்.
டெலிவிஷன் ரீப்ளேயில் நடுவர் இதை முடிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்யாதது மிகவும் தவறானது. நடுவரின் இந்த முடிவை இங்கிலாந்து பயிற்சியாளர் கேபிலோ கண்டித்து உள்ளார்.
இதேபோல மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் அடித்த முதல் கோலும் சர்ச்சையானது. டெலிவிஷன் ரீப்ளேயில் அது “ஆப்சைடு” என்பது தெரியவந்தது.
வாழ்த்துக்கள், முடிந்தால் அதன் வீடியோ காட்சியை பதிவிடுங்களேன். தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteமோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்