கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்து நேரம் வரும் போது தாமே முடிவு செய்து அறிவிப்பேன், இது குறித்து யாரும் என்னிடம் சொல்ல வேண்டியதில்லை. எனது விருப்பம் உள்ளவரை ஆடுவேன் என மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சச்சின். அவரின் சாதனையை பாராட்டி பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது.
விழா முடிந்ததும், பத்திரிகை ஆசிரியர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது: இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என நோக்கத்தில் தான் விளையாடி வருகிறேன். எனது சாதனைகளுக்காக நான் கிரிக்கெட் விளையாடவில்லை. சதத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது காலத்தில் உலகக்கோப்பையை இந்தியா வென்றது ஒரு மிகப்பெரிய சாதனையும், மகிழ்ச்சியும் ஆகும்.
எனது சாதனையை இந்தியர் முறியடிப்பார் :
எனது ஓய்வு குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. நான் எப்போது ஒய்வு பெற வேண்டும் என்பதை யாரும் எனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. நேரம் வரும்போது நானே ஓய்வை அறிவிப்பேன். இதுவரை ஓய்வு பற்றி சிந்திக்கவில்லை. விருப்பம் உள்ளவரை இந்தியாவுக்காக ஆடுவேவன்.
எனது 17 வயதில் இருந்த வேகமும் விவேகமும் 38 வயதில் சிறிது தடுமாறத்தான் செய்கிறது. எனினும் அதை சமாளித்து விளையாடுகிறேன். என்னுடைய திறமையை இன்னும் நிரூபிக்க வேண்டியதில்லை. இருப்பினும் இன்னும் நான் எனது நம்பிக்கையை இழக்கவில்லை.
0 comments:
Post a Comment