கேன்சருக்கான இறுதி கட்ட சிகிச்சை 4 நாட்களில் முடிந்துவிடும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.
இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், 30. நுரையீரலில் ஏற்பட்ட "கேன்சர்' கட்டியால் பாதிக்கப்பட்டார். இதற்கு அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கேன்சர் ஆய்வு மையத்தில் "கீமோதெரபி' சிகிச்சை பெற்று வருகிறார்.
வரும் மே முதல் வாரத்தில், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிகிச்சையின் காரணமாக அவர் தலை வழுக்கையாக மாறியது.
இதை பழைய நிலைக்கு மாற்றும் சிகிச்சை, ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதால் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் 274 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 8,051 ரன்களும் 37 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 1,775 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த உலக கோப்பை போட்டியில், இவர் தொடர் நாயகன் பட்டம் வென்றார்.
சிகிச்சை குறித்து யுவராஜ் சிங் கூறுகையில்,""கீமோதெரபி' இறுதி சுற்று சிகிச்சை 4 நாட்களில் முடிந்துவிடும். இதிலிருந்து விரைவில் குணமடைந்து விடுவேன்'' என்றார்.
0 comments:
Post a Comment