ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 304 ரன்கள் எடுத்தது. காம்பீர் 100 ரன்களும், கோக்லி-108 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி களமிறங்கியது. தில்ஷன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜெயவர்த்தனாவும், சங்ககாராவும் சிறப்பாக விளையாடினர். ஜெயவர்த்தனா அதிரடியாக விளையாடி 78 ரன்கள் எடுத்தார்.

சங்ககாரா 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 45.1 ஓவரில் 254 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் இர்பான் பதான் 4 விக்கெட்களையும், அஸ்வின், வினய் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் கவுதம் காம்பீருக்கு வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment