
சச்சினின் 100 சதம் சாதனையை தற்போதுள்ள முன்னணி வீரர்களால் நெருங்கக்கூட முடியாது,'' என, பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குகிறார், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் கில்கிறிஸ்ட்.சச்சின் சாதனை குறித்து இவர் கூறியது:சச்சின் சிறந்த வீரராக ஜொலிக்கிறார். 22 ஆண்டுகளாக ஒரே விதமாக விளையாடி வருவதால் தான் சிறந்த வீரராக உள்ளார். சச்சினின் 100வது சதம்...