
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் என்னுடைய சிறப்பான செயல்பாட்டிற்கு, இங்குள்ள ரசிகர்கள் என்னைப் பார்த்து கிண்டல் செய்தது தான் காரணம்,'' என, இந்திய வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் நடக்கிறது. இதில் இயான் பெல் அடித்த பந்து, தரையில் பட்டதை கவனிக்காத ஸ்ரீசாந்த், பிடித்து விட்டதாக நினைத்து "அவுட்' கேட்டார். அப்போது ரசிகர்கள் கூட்டம் ஸ்ரீசாந்தை கடுப்பேற்றியது. இதேபோல, பிரையர்...