கபில் தேவுக்கு அழைப்பு இல்லை

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான உலக கோப்பை அரையிறுதி போட்டியைக் காண, முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு அழைப்பு தரப்படவில்லை.உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 36 ஆண்டுகளாக நடத்தப்பட்ட வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 4 முறை கோப்பை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் 2, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன. கடந்த 1983ல் தொடரில், கேப்டன் கபில் தேவ் தலைமையிலான அணி, முதன் முறையாக இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்றுத்தந்தார். அதன்பின் இதுவரை இந்திய...

கபில் கூட்டணியில் சேருவாரா தோனி?

உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற வாய்ப்பு உள்ளது. இப்பட்டியலில் நான் மட்டும் 28 ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். என்னோடு தோனியும் சேர வேண்டும்,என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று, வரலாறு படைத்தது. தற்போது "தோனியின் படை சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இது குறித்து கபில் தேவ் கூறியது:இந்திய அணி இரண்டாவது முறையாக...

எழுச்சி பெறுவாரா தோனி?

உலக கோப்பை போட்டிகளில் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பும் இந்திய அணியின் கேப்டன் தோனி, அரையிறுதியில் எழுச்சி பெற வேண்டிய நேரம் வந்துள்ளது. உலக கோப்பை தொடருக்கான இந்திய அணித்தேர்வில், தேர்வாளர்களுடன் தகராறு, அம்பயர் மறுபரிசீலனை விதி (டி.ஆர்.எஸ்.,) குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் மோதல் (ஐ.சி.சி.,) என, தோனி களத்துக்கு வெளியே மிகவும் "பிசியாக' இருக்கிறார். இதனால் தான் தனது பேட்டிங்கில் இவர் கவனம் செலுத்த வில்லை என, எல்லோரும் நினைக்கின்றனர். இதுவரை...

சச்சின் காத்திருக்க வேண்டும் -அப்ரிதி

உலக கோப்பை தொடருக்குப்பின் தான், சச்சின் 100வது சதம் அடிக்க முடியும். அதுவரை அவர் காத்திருக்க வேண்டும். ஏனெனில், அரையிறுதியில் யாரையும் பெரிய ஸ்கோர் எடுக்க விடமாட்டோம்,'' என, பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி மிரட்டல் விடுத்துள்ளார்.உலக கோப்பை கிரிக்கெட்டில், வரும் 30ம் தேதி நடக்கும், இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுகுறித்து அப்ரிதி கூறியது:வழக்கமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்றால் அதிக பரபரப்பு...

நீண்ட கால கனவு நிறைவேறியது

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி வரை களத்தில் இருந்து வீழ்த்த வேண்டும் என்ற, எனது நீண்ட கால கனவு நிறைவேறியது, என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் "ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங், ஆட்ட நாயகனாக ஜொலித்தார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது: உலக கோப்பை...

டாக்டர் பட்டம்: சச்சின் மறுப்பு

மைசூரு பல்கலை., கொடுக்க இருந்த டாக்டர் பட்டத்தை ஏற்க இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மறுத்துள்ளார்.மைசூருவில் உள்ள பல்கலை., ஒன்று, சச்சினுக்கு வரும் ஏப். 10ல் டாக்டர் பட்டம் கொடுக்க விருப்பம் தெரிவித்து இருந்தது. இதற்காக சச்சினின் அனுமதிக்காக காத்திருந்தது. இந்நிலையில் சச்சின் மனைவி அஞ்சலி அந்த பல்கலை., துணை வேந்தருக்கு எழுதிய கடிதத்தில்,"" கிரிக்கெட்டில் சச்சின் செய்த சாதனைகளை பாராட்டி, டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவிக்க விருப்பம் தெரிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் தற்போது தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டுள்ளார். இதனால்...

காலிறுதிக்கு சேவக் தயார்

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, காலிறுதி போட்டியில் பங்கேற்க சேவக் தயாராகியுள்ளார். நாளை நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதில் சாதிக்க வேண்டும் என்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஸ்ரீசாந்த் இருவரும் நேற்றைய பயிற்சியில் பங்கேற்க வில்லை. மற்ற அனைத்து இந்திய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்கள், பந்தை எறிதல், உடற்பயிற்சி,...

சச்சினுக்கு நேர்மாறான பாண்டிங்

கிரிக்கெட் போட்டிகளில் "அவுட்' என்று தெரிந்தால், உடனடியாக வெளியேறி நேர்மையாக நடந்து கொள்வார் இந்தியாவின் சச்சின். இதற்கு நேர்மாறான குணத்தை கொண்டுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்.சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் சச்சின், 100 வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 ரன் எடுத்த நிலையில், ராம்பால் பந்தில் அவுட்டானார். பந்து தனது பேட்டில் பட்டு, கீப்பர் பிடித்தது உறுதியாக தெரிந்ததால், அம்பயரின் முடிவுக்கு...

ரசிகர்களை ஏமாற்றிய சச்சின்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது சதத்தைப் பதிவு செய்வார் என ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால் அவர் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ராம்பாலின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டேவன் தாமஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.அவர் ஆட்டமிழந்தபோது ராம்பால் பலமாக குரல் எழுப்பி நடுவரிடம் அவுட் கேட்டார். பந்து பேட்டில் பட்டதா, இல்லையா என்பதை நடுவர் டேவிஸôல் கணிக்க முடியவில்லை. ஆனால் சச்சின் மைதானத்தில் வெளியேறினார். இதனால் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில்...

காலிறுதியில் சவால் காத்திருக்கிறது

உலக கோப்பை "நாக் அவுட்' சுற்றில் தான், கடுமையான போட்டி காத்திருக்கிறது,'' என, இலங்கை அணி கேப்டன் சங்ககரா கணித்துள்ளார்.உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. காலிறுதி போட்டிகள் வரும், 23ம் தேதி முதல் துவங்குகின்றன. இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் சங்ககரா கூறியது:பொதுவாக போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சி தரக்கூடியது தான். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் எங்களது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், உண்மையான கடும் சவால், "நாக் அவுட்' சுற்றான காலிறுதியில் தான் காத்திருக்கிறது என்பது எங்களுக்குத்...

பாணியை மாற்றுவாரா தோனி?

இந்திய தேர்வுக்குழுவினர் மற்றும் கேப்டன் தோனி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இவரது தவறான பாணி தொடர்வதால், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் நேரடியாக தலையிட்டு பேசியுள்ளார். பதிலுக்கு தோனியும் காட்டமாக பேச, காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிகிறது.உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே தோனிக்கும் தேர்வு குழுவினருக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. பிரவீண் குமார் காயம் காரணமாக நீக்கப்பட, வினய் குமாருக்கு வாய்ப்பு அளிக்க...

இந்திய அணியில் அஸ்வின், ரெய்னா?

உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இவர்கள் இருவரும் களம் இறக்கப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்வியால்...

பலவீனமாகும் பலம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கருத்துத் தெரிவித்த முன்னாள், இந்நாள் பிரபலங்கள் எல்லோருமே "இந்தியாவுக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளதே அதற்குக் காரணம்' எனக் கூறினர்.1983-ல் கோப்பையை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த கபில்தேவ் கூட, அன்றைய அணியைவிட இன்றைய அணியே மிகச்சிறந்த அணி என்று குறிப்பிட்டார். போட்டி தொடங்குவதற்கு முன் இந்தியாவின் பேட்டிங் வரிசையும் அப்படித்தான்...

இந்திய அணி வீழ்ந்தது ஏன்?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை அநியாயமாக கோட்டை விட்டது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி 9 விக்கெட்டுகளை வெறும் 29 ரன்களுக்கு இழந்தது. பீல்டிங், பவுலிங்கில் சொதப்பியது போன்றவை வீழ்ச்சிக்கு வித்திட்டது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை "டை' செய்த நம்மவர்கள், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கேப்டன் தோனியின் தவறான உத்திகள் தொடர்வது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்திய...

விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை

என்னைப் பற்றியும், எனது முடிவுகளைப் பற்றியும் கூறப்படும் விமர்சனங்களையும், குறைகளையும் நான் கண்டுகொள்வதில்லை என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவை தோனி களம் இறக்கி வருவதும், அதற்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்த தோனி இவ்வாறு கூறினார்.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக நாகபுரியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் இது குறித்து மேலும்...

யுவராஜுக்கு திருமணம்

உலக கோப்பை கிரிக்கெட் விளையாடும் லெவன் அணியில் களமிறங்குவாரா அல்லது வெளியில் உட்கார வைக்கப்படுவாரா என, யுவராஜ் சிங் குறித்து அதிக குழப்பம் நிலவியது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் இதில் பேட் செய்யவில்லை. பின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இவர் 5 விக்கெட் வீழ்த்தினார். பின் அரைசதம் அடித்து அணிக்கு...

சர்ச்சையைக் கிளப்பும் விதிமுறை

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட்டங்களுக்கு இணையாக பரபரப்பாக பேசப்படுவது யூடிஆர்எஸ் (Umpire Decision Review System) எனப்படும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை.மைதானத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுத்தாலும், சந்தேகத்தின் பேரில் அதனை எதிர்த்து முறையீடு செய்ய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதே இந்த முறையின் சிறப்பு அம்சம். இது முழுக்க முழுக்க வீரர்களுக்கு சாதகமான அம்சம் என்றாலும், கேப்டன் தோனி, யுவராஜ் உள்பட பல வீரர்கள் இந்த முறை குழப்பத்தை...

உலக கோப்பை தொடருக்கு சிக்கல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பெரும்பாலான போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன. இப்போட்டிகளின் போது தாக்குதல் நடத்த அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு இயக்குனர், அனைத்து கடலோர மாநில உள்துறைச் செயலர், டி.ஜி.பி.,க்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்....

வலுவற்ற இந்திய சுழற் பந்துவீச்சு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழமை வரை 24 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.தொடக்கத்தில் சில ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், மெல்ல மெல்ல பந்துவீச்சாளர்களும் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.இந்திய ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 315 ஆட்டங்களில் விளையாடி 306 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி (4 ஆட்டங்களில் 15 விக்கெட்), உலகக் கோப்பையில்தான்...

ஏழு பேட்ஸ்மேன் பார்முலா தொடரும்

ஐந்தாவது பவுலர் வேலையை "பார்ட் டைம்' பவுலர்கள் பார்த்துக்கொள்வர். இதனால் ஏழு பேட்ஸ்மேன்களுடன் இன்று களமிறங்குவோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் இதுவரை இரண்டு உலக கோப்பை லீக் போட்டிகள் நடந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நான்கு இன்னிங்சில், அனைத்து அணிகளும் 326 ரன்களுக்கு மேல் குவித்தது. இதனால் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக பெங்களூரு மாறியுள்ளது. இந்நிலையில் இன்று இந்திய அணி தனது மூன்றாவது லீக்...

பதிலடி கொடுக்குமா இலங்கை?

உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலிய அணி, இலங்கையை சந்திக்கிறது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை பைனலில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி தயாராக உள்ளது.இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில், நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி,...

என்ன செய்கிறார் டிராவிட்?

கடந்த 2007 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக இருந்த கங்குலி, கும்ளே இம்முறை வேறு பணிகளில் "பிசி'யாக உள்ளனர். ஆனால், டிராவிட் மட்டும் "டிவி'யில் போட்டிகளை பார்த்து பொழுதை கழிக்கிறார். இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. 2003 உலக கோப்பை தொடரில் இந்தியாவை பைனலுக்கு அழைத்துச் சென்றார். 2007ல் சாதாரண வீரராக களமிறங்கினார். ஓய்வு பெற்ற இவரை, ஐ.பி.எல்., தொடரில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இருப்பினும்...

பலவீனமான இந்திய பவுலிங்

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களோடு ஒப்பிடுகையில், பவுலர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. பவுலிங் மிகவும் பலவீனமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது,''என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு 1983ல் உலக கோப்பை பெற்றுத் தந்தவர் கபில் தேவ். இதற்கு பின் இம்முறை தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு லீக் போட்டியில் நமது பவுலர்கள் ஏமாற்றினர். முதல் போட்டியில் பலம்குன்றிய வங்கதேச...