ஜெயசூர்யா முதலிடம்:ஒருநாள் அரங்கில் அதிக போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இலங்கையின் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 444 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் சச்சின் (442 போட்டி), பாகிஸ்தானின் இன்சமாம் (378), வாசிம் அக்ரம் (356), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (351) உள்ளனர். நழுவிய வாய்ப்பு:இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அடுத்து, இந்தியா-இலங்கை-நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இத்தொடருக்கான இந்திய அணியில் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக ஒரு நாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவர் இச்சாதனை படைக்க, இன்னும் இரண்டு மாத காலம் காத்திருக்க வேண்டும். வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் சச்சின் விளையாடும் பட்சத்தில், புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.
காத்திருக்கும் சாதனை
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உலக சாதனை படைத்த சச்சின், அடுத்து அதிக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க காத்திருக்கிறார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம், ஒருநாள் போட்டியில் 200 ரன் என்ற பல்வேறு சாதனைக்கு சொந்தக் காரர். இவர் இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் களமிறங்கியபோது, அதிக டெஸ்டில்(169) விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்தார். இதன் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் (168 டெஸ்ட்) சாதனையை முறியடித்தார்.
சாதனைகள் காத்திருக்கின்றன, சச்சின் முறியடிப்பதற்காக!
ReplyDeleteஸ்ரீ....